ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

2k kids: உஸ்தாத் HOTEL - இது சினிமாவல்ல, நிஜம்!

உஸ்தாத் HOTEL
பிரீமியம் ஸ்டோரி
News
உஸ்தாத் HOTEL

வினோதினி.சி

சென்னையில சூப்பரான கேரளா சாப்பாடு சாப்பிடணுமா? வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஈ.சி.ஆர்னு மூணு இடத்துல ஒரே பேர்ல இருக்குற ‘உஸ்தாத் ஹோட்டலை’ டிக் அடிங்க. நடிகர் துல்கர் சல்மான் நடிப்புல 2012-ல வெளிவந்த சூப்பர் ஹிட் மலையாளத் திரைப்படம் ‘உஸ்தாத் ஹோட்டல்’ பெயரைத்தான் இந்த ஹோட்டலுக்கு வெச்சிருக்காங்க. சரி டேஸ்ட் எப்படி...? வாங்க பார்ப்போம்!

நாம ஏற்கெனவே புக் பண்ணி இருந்த கேபின்ல போய் உட்கார்ந்தோம். எல்லா டேபிள்கள்லயும் ஒரு கண்ணாடி பாட்டில்ல தண்ணீர் ஊற்றி, புதினா போட்டு வெச்சிருந்தாங்க. பீஃப் பிரியாணி, மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணினு மக்கள் வெறியோட ஆர்டர் பண்ணிட்டு இருந்தாங்க. கேரளாவின் ஹிட் காம்போவான பரோட்டா, முட்டை குருமாவை நாம வாங்கினோம். செம்ம டேஸ்ட். அதே மாதிரி கல் தோசை வித் கர்ரி (Curry), சப்பாத்தி வித் கர்ரி, பரோட்டோ வித் கர்ரி, அப்பம் வித் கர்ரி, புட்டு வித் கர்ரி, இடியாப்பம் வித் கர்ரி, கேரளா பத்ரி வித் கர்ரினு அட்டகாசமான காம்போ வரிசை கட்டுது.

2k kids: உஸ்தாத் HOTEL - இது சினிமாவல்ல, நிஜம்!
2k kids: உஸ்தாத் HOTEL - இது சினிமாவல்ல, நிஜம்!
2k kids: உஸ்தாத் HOTEL - இது சினிமாவல்ல, நிஜம்!

கேரளா ஸ்பெஷல் கப்பா புட்டு, மீன் குழம்பு, கோழிக் குழம்பு எல்லாம் அசல் கேரளத்து டேஸ்ட்ல இருக்குறதால சென்னையில வசிக்கிற மலையாளிகள் பலர் இங்க ரெகுலர் கஸ்டமர்கள். குறிப்பா, கல்யாண பிரியாணி இங்க செம ஹிட். மலபார் சிக்கன் ஃப்ரை, சிக்கன் பெரட்டு, நாடன் சிக்கன் கர்ரி, சட்டி சிக்கன் கர்ரி, சிக்கன் போலிச்சதுனு சிக்கன் அயிட்டங்கள் நிறைய கிடைக்குது. சைவப் பிரியர்களுக்கும் இங்கு கப்பா, கடலைக்கறி, கிரீன் பீஸ் மசாலா, வெஜ் குருமா, பனீர் ரோஸ்ட் அயிட்டங்கள்னு நிறைய இருக்கு.

``லாக்டௌன் சமயத்துல நிறைய ஹோட்டல்கள் மூடினப்போதான் கேரள உணவுக்கான ஹோட்டல் ஆரம்பிக்கலாம்னு எனக்கு ஐடியா வந்துச்சு. ஈ.சி.ஆர்ல முதல் கடையைத் தொடங்குனோம். ரொம்ப சீக்கிரமே எங்க ஹோட்டல் சென்னை வாழ் மலையாளிகளுக்குப் பிடிச்ச ருசி ஆகிடுச்சு. கூடவே சென்னை மக்களுக்கும். ஒரே வருஷத்துல பள்ளிக் கரணை, வேளச்சேரி, பெசன்ட் நகர்ல மூணு கிளைகள் தொடங்கிட்டோம். `உஸ்தாத் ஹோட்டல்' படம்தான் ஹோட்டல் ஆரம்பிக்க பெரிய இன்ஸ்பிரே ஷனா இருந்துச்சு. ஹோட்டல் பேரு மட்டுமில்லாம கடையிலேயும் அந்தப் படத்தை நினைவுபடுத்துற மாதிரி இன்டீரியர் டிசைன் பண்ணியிருக்கோம்''னு சொல்கிறார் உரிமையாளர் அஜ்மல் கான்.

2k kids: உஸ்தாத் HOTEL - இது சினிமாவல்ல, நிஜம்!
2k kids: உஸ்தாத் HOTEL - இது சினிமாவல்ல, நிஜம்!
2k kids: உஸ்தாத் HOTEL - இது சினிமாவல்ல, நிஜம்!

``உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே'' என்றதற்கு சமுத்திரகனி சார் நடிச்ச `சாட்டை' படத் துல பள்ளி மாணவன் பழனிமுத்து கேரக்டர் பண்ணி னது நான்தான். சினிமா, சட்டப்படிப்பு, ஹோட்டல் பிசினஸ்னு வாழ்க்கை பரபரப்பா போகுது'' - தம்ஸ் அப் காட்டுகிறார் அஜ்மல்.

அடிபொலி!