கட்டுரைகள்
Published:Updated:

சுட்டி ஸ்டார் நியூஸ்

நடமாடும் நூலகப் பேருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
நடமாடும் நூலகப் பேருந்து

மெக்சிகோ மற்றும் ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்காக நடமாடும் நூலகப் பேருந்து திட்டம் உள்ளது.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

பெரிய ஜெல்லிமீன்

டல் உயிரினங்களில் அழகும் ஆபத்தும் இணைந்த ஒன்று, ஜெல்லிமீன்கள். இவற்றில் சிறியதும் பெரியதுமாக 2,000 வகைகளுக்கும் மேலாகக் கண்டறியப்பட்டுள்ளன. கடலின் ஆழப் பகுதியில் வாழ்பவை என்பதால், இன்னும் பல வகைகள் இருக்கும் என்கிறார்கள். இவற்றில் லயன்ஸ் மனே (Lion’s mane jellyfish) உலகின் மிகப்பெரிய வகையாகும். 37 மீட்டர் நீளமும் 2.3 மீட்டர் அகலமும்கொண்ட இவை 1870ஆம் ஆண்டில் மத்திய கிழக்கு அமெரிக்காவின் அட்லான்டிக் பெருங்கடலில் கண்டறியப்பட்டது.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

நூலகப் பேருந்து!

மெக்சிகோ மற்றும் ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்காக நடமாடும் நூலகப் பேருந்து திட்டம் உள்ளது. குழந்தைகளுக்கான விதவிதமான கதை மற்றும் பொதுஅறிவுப் புத்தகங்கள் உள்ளன. கிராமப்புற குழந்தைகளின் வாசிப்பு பழக்கம் மற்றும் கல்வி அறிவை மேம்படுத்துவது இந்த நூலகப் பேருந்துகளின் நோக்கம். நாட்டின் கிராமப்புறப் பகுதிகளுக்குள் இந்தப் பேருந்துகள் வந்தாலே குழந்தைகள் உற்சாகமாகி விடுகிறார்கள். இதிலுள்ள புத்தகங்களை ஆவலுடன் படிக்கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

ஈரமில்லாத நீர்!

ரம் இல்லாவிட்டால் அதை எப்படி நீர் என்பது என்கிற கேள்வி எழுகிறதல்லவா? பவுடர் போன்று காணப்படும் இதைத் தூளாக்கப்பட்ட திரவம் என்பார்கள். ஒரு வகை சிலிகாதான் இது. இந்தக் காய்ந்த நீரிலும் 95 சதவிகித திரவமே இருக்கும். இந்த சிலிகா கோட்டிங், நீர்த்துளிகள் உடைந்து திரவமாக மாறுவதைத் தடுக்கிறது. இப்படித் தடுக்கப்படுவதால் உப்புத்தூள் போன்று மாறிவிடும். இதையே காய்ந்த நீர் என்கிறார்கள்.

சுட்டி ஸ்டார் நியூஸ்
சுட்டி ஸ்டார் நியூஸ்

மதிப்புமிக்க உருளைக்கிழங்கு சிப்ஸ்!

நொறுக்குத்தீனி வகைகளில் பலரும் விரும்பி உண்பது உருளைக்கிழங்கு சிப்ஸ். இடம் மற்றும் தரத்துக்கு ஏற்ப 10 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்கப்படும். ஆனால், ஸ்வீடன் நாட்டில் விற்கப்படும் ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸின் விலை நம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 3,700 ரூபாய். ஒரு சிப்ஸ் பெட்டியில் 5 சிப்ஸ்களே இருக்கும். செயின்ட் ஏரிக் என்கிற நிறுவனம் இந்த சிப்ஸில், சில தனித்துவமான நறுமணக் காளான்கள், கடற்பாசிகள், வெங்காயம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து தயாரிக்கிறது.