Published:Updated:

இசை அரசியலும்..காதலும்.. கொஞ்சம் துப்பாக்கிக் குண்டுகளும்! #HBDMarley

இசை அரசியலும்..காதலும்.. கொஞ்சம் துப்பாக்கிக் குண்டுகளும்! #HBDMarley
இசை அரசியலும்..காதலும்.. கொஞ்சம் துப்பாக்கிக் குண்டுகளும்! #HBDMarley

இசை அரசியலும்..காதலும்.. கொஞ்சம் துப்பாக்கிக் குண்டுகளும்! #HBDMarley

மாய்க்காவின் எழுத்தாளர் மார்லன் ஜேம்ஸ் எழுதிய,  ‘A Brief History of seven killings’ என்கிற புத்தகத்துக்கு 2015-ம் ஆண்டுக்கான புக்கர் விருது அளிக்கப்பட்டது. 70-களில் நிகழ்ந்த ஜமாய்க்கா நாட்டின் உள்நாட்டுக் கலவரங்களை, பாப் மார்லி என்னும் இசைக்கலைஞன்மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சிகள் வழியாக அந்தப் புத்தகம் பேசியது. பாப் மார்லி யார்... அவர்மீது எதற்காகக் கொலை முயற்சிகள் நிகழ்த்தப்பட வேண்டும்... ஜமாய்க்காவில் எதற்காக அப்போது உள்நாட்டுக் கலவரம் வெடித்தது? 

கலைஞர்கள் ஆன்மிக அரசியல் பேசும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்துள்ள தற்காலச் சூழலில், தவிர்க்காமல் நினைவுகூரப்பட வேண்டிய கலைஞன் பாப் மார்லி. கொள்கை என்னவென்று கேட்டால், தலைசுற்றிக் கீழே விழுந்துவிடாமல் மக்களுக்கான அரசியலையும் வாழ்வியல் தத்துவத்தையும் தனது இசைவழியாகப் பேசியவர். ராகம், தாளம், ஸ்வரம் என்று எவ்வித அமைப்பும் இல்லாமல் சற்றே கரகரத்த குரலில் அவர் பாடும் பாடலிலும் இசைக்கும் கிதாரிலும் அதிரஅதிர வாசித்த ஜேம்பே இசைக் கருவியிலும் மக்களுக்கான வார்த்தைகள் நிரம்பிக் கிடந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு சுரண்டப்பட்ட மக்களின் பசிப் பட்டினிக்காகவும், சுரண்டிய மக்களுக்கு எதிராகவும் அவர் தனது பாடல்களை எழுதினார். 

‘‘We sick an' tired of-a your ism-skism game -

Dyin' 'n' goin' to heaven in-a Jesus' name, Lord.

We know when we understand:

Almighty God is a living man.

You can fool some people sometimes,

But you can't fool all the people all the time.

So now we see the light (What you gonna do?),

We gonna stand up for our rights! (Yeah, yeah, yeah!)

 

So you better:

Get up, stand up!

Stand up for your rights! 

Get up, stand up!

Don't give up the fight!

 

Get up, stand up! 

Stand up for your rights! 

Get up, stand up!

Don't give up the fight! 

Get up, stand up!

Stand up for your rights!

Get up, stand up!

Don't give up the fight!’’  

முன்னேறிய நாடுகளின் வல்லரசுக் கனவுகளுக்கு பலியாகிக்கொண்டிருந்த ஹெய்த்தி போன்ற நாடுகளில் பயணம் செய்தபோது பாப் மார்லி எழுதிய இந்தப் பாடல், அதன்பிறகு அவரது இசை மேடைகளில் தொடர்ந்து பாடப்பட்டது. பெரும்பாலும் நிகழ்ச்சியின் இறுதியிலேயே அவரது இந்தப் பாடல் இசைக்கப்படும்.மேடைகளில் அவர், ‘Yeah, yeah, yeah!’ என்று தனக்கே உரிய தோரணையுடனும் குரலுடனும் இசைத்துப் பாடிய இந்தப் பாடல் பல்லாயிரக்கணக்கான ஜமாய்க்கா மக்களைப் புரட்சி செய்யத் தூண்டியது.

மாற்றத்தைத் தேடும் எந்த ஒரு புரட்சியாளனுக்கும் பெரும் பக்கபலம் அவனது காதல்தான் என்பதை அவரது 'Is this love' பாடல் பேசியது. காதல் இப்படியும் இருக்கும்... காதல் இப்படித்தான் இருக்கும்... காதலும் புரட்சிதான் என்பதை அவரது அந்தப் பாடல் வரிகள் பேசின. அதற்காகவே அந்தக் குறிப்பிட்ட பாடல், ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்திர முக்கிய இசைப் பாடல்கள் பட்டியலில் மிக நீண்டகாலமாக முதலாம் இடத்தில் இடம்பெற்றிருந்தது. கலைஞர்கள் அரசியல் பேசினால் அவர்களை ஒடுக்கிய சமூகத்தில் மார்லி மட்டும் விதிவிலக்கா என்ன? அமைதிக்காகப் பாடிய மார்லியை, 1976-ல் அவரது எதிர் அரசியல் தரப்பினர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். எப்படியோ அதிலிருந்து தப்பிப் பிழைத்து மீண்டு எழுந்துவந்த மார்லி, அதன்பிறகு அதே உத்வேகத்துடன் பல மேடைகளில் பாடினார்.

ஜமாய்க்கா தேசத்துக் கலவரம் ஓய்ந்தபிறகு மார்லி வெறும் பாடகனாகவும், கலைஞனாகவும் மட்டுமே அந்நிய தேசத்தவர்களால் அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால், அவர் கலைஞன் மட்டும் அல்ல, மக்கள் கலைஞன். அவரைக் குறுக்கிவிடுவதிலிருந்து மீட்டெடுக்க பாப் மார்லியின் சடைமுடி, அதனை மூடி மறைத்தபடி இருக்கும். பல வர்ணத் தொப்பி என அவரது அத்தனை அடையாளங்களும் ஜமாய்க்கா தேசத்து அடுத்த தலைமுறை இளைஞர்களுக்குக் கடத்தப்பட்டது. அவரைப்போலவே மக்களுக்கான பாடல்களைப் பலர் எழுதத் தொடங்கினார்கள். 

இன்றளவும் ஜமாய்க்கா தேசத்து இளைஞர்களின் உடைகளில், உருவத்தில் என மார்லியின் ஏதோ ஓர் அடையாளத்தை நாம் பார்க்கலாம். கலைஞன் அழிந்துவிடலாம். ஆனால், சமூகம் சார்ந்த அவனது கலைப் பயணங்கள் அந்தச் சமூகம் உள்ளவரை உயிர்ப்புடன் இருந்துகொண்டிருக்கும். நம் ஊர்களில் இன்றும் உலவிக்கொண்டிருக்கும் பாப் மார்லி உருவம் பொறித்த டி-ஷர்ட்டுகள் பேசும் அரசியலும் அதுதான்.

பாப் மார்லியின் 73-வது பிறந்த தினம் இன்று! இசையாளனுக்கு வாழ்த்துகள்.

அடுத்த கட்டுரைக்கு