Published:Updated:

பயங்கரம் பாலய்யா!

பயங்கரம் பாலய்யா!

ஆர்.சரண், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பயங்கரம் பாலய்யா!

ஆர்.சரண், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
பயங்கரம் பாலய்யா!

பாலகிருஷ்ணா... முழுப்பெயர் நந்தமூரி பாலகிருஷ்ணா. செல்லமாக பாலய்யா! ஆந்திராவே அலறும் ஆக்‌ஷன் அதகளத்துக்குச் சொந்தக்காரர். எல்லை தாண்டிய ஹீரோயிசத்தில் பாகிஸ்தான் வரை பாய்ந்து சென்று தீவிரவாதிகளை வேட்டையாடிய சிவப்பு விஜயகாந்த். 2014-ம் ஆண்டிலிருந்து ஆந்திரப்பிரதேசம் இந்துபூர் தொகுதி தெலுங்கு தேசக் கட்சி எம்.எல்.ஏ., ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பாச மருமகன் மற்றும் சம்பந்தி. ஆம், பாலய்யாவின் சகோதரி நர புவனேஸ்வரியைத்தான் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்திருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்குத்தான் தன் மகள் நர பிராமிணியை திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். சும்மாவே சலங்கை கட்டி ஆடுவார். இது போதாதா..? எப்படியெல்லாம்  எம்.எல்.ஏ-வாக அலறவிடுகிறார் என்பதைச் சொன்னால் ‘அம்புலி மாமா’ கதைபோலவே இருக்கும்.
 
* ஒருமுறை பாலகிருஷ்ணாவைச் சந்திக்க அவரது எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வயதான ஒரு மூதாட்டி வந்தார். அந்த நேரம் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா, ஹைதராபாத் ஷூட்டிங்கில் பிஸி. பாலைய்யாவின் பி.ஏ., ஏதோ ஒரு போன் காலில் பிஸி. மூதாட்டி எதையோ சொல்ல முற்பட்டிருக்கிறார். பாலைய்யாவின் உதவியாளரோ, மூதாட்டி தன்னிடம் பிச்சைக் கேட்பதாக நினைத்துக்கொண்டு, ‘போ... இதே வேலையாப்போச்சு உங்களை மாதிரி ஆளுங்களுக்கு!’ என விரட்டிவிட்டு,  போன் பேச்சைத் தொடர்ந்திருக்கிறார்.

பயங்கரம் பாலய்யா!

ஒரு மணி நேரம் கழித்து பாலைய்யாவின் வேறொரு போன் நம்பரிலிருந்து கால் வர, பேச்சைத் துண்டித்துவிட்டு பவ்யமாகப் பேசியிருக்கிறார் உதவியாளர். முதலில் கெட்டவார்த்தையில் வெளுத்துவாங்கிய பாலகிருஷ்ணா, அடுத்து பேசியதுதான் ஹைலைட்! ``அந்த அம்மா என் அப்பாவோடு பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர். அவர் என்னிடம் உதவி கேட்டு நேற்று வந்திருந்தார். நான் தான் அலுவலகத்துக்கு இன்று வரச் சொல்லியிருந்தேன். இப்போது உன்னால் எனக்குக் கெட்டபெயர். அவர் மகன் இப்போது அவரை அழைத்துக்கொண்டு திருப்பதிக்குப் போய்விட்டான். ஒழுங்காக அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து  உன் அக்கவுன்ட்டில் இருக்கும் மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொடுத்துவிட்டு எனக்கு வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்பி வை. இதைச் செய்யாமல் நாளை நான் தொகுதிக்கு வரும்போது நீ என் கண்ணில் பட்டால், முதலில் உன்னை உதைத்துவிட்டுத்தான் மறுவேலையே பார்ப்பேன்!’’ என்று சொல்லியிருக்கிறார். அந்த நேரம் வீடு கட்டுவதற்காக வங்கியிடம் பெற்ற கடன் தொகை 30 லட்சம் ரூபாய் அவர் அக்கவுன்டில் இருந்தது.

இதற்கு முன்பு பலமுறை உதை வாங்கியவர் என்பதால், `இதுக்கு மேலே தாங்க முடியாது குருநாதா!’ என்று மனதுக்குள் அலறியடித்துக்கொண்டு ஒரு டீமோடு திருப்பதியில் சல்லடை போட்டுத் தேடியிருக்கிறார் பி.ஏ. அந்த மூதாட்டி கிடைக்காததால், அப்படியே  தலைமறைவாகிவிட்டார். அதன் பிறகு அந்த பி.ஏ-வின் மனைவி அழுதுகொண்டே தன் கணவரைக் கண்டுபிடித்துத் தரச் சொல்லி பாலகிருஷ்ணாவிடம் மன்றாட, மூன்று ஸ்பெஷல் டீம் அமைத்தார் பாலய்யா. சரியாக ஐந்து நாட்கள் கழித்து, இருவரையும் வெவ்வேறு ஊர்களில் கண்டுபிடித்து, பாலய்யா முன் நிறுத்தினார்கள் அவர்கள்.

* கட்சியில் யாருக்கும் பயப்படாதவர் எனப் பெயரெடுத்த அதிரடி எம்.எல்.ஏ அவர். அண்மையில் மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு மீட்டிங்குக்குப் போனவர், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்காரும் சேரில் உட்கார்ந்துகொண்டார்.  அந்த சேரில் யாருமே உட்கார மாட்டார்கள்.  அதிகாரிகளுக்கும் கட்சிக்காரர்களுக்கும் வியர்த்துவிட்டது. ஆனாலும், கொஞ்சம்கூட சட்டைசெய்யாமல் மீட்டிங்கை முடித்துவிட்டுக் கிளம்பினார். சர்ச்சை கிளம்பிய பிறகு, `என் மாமா இருக்கையில் உட்கார யாரிடம் பர்மிஷன் கேட்கணும்? அவர் இல்லாதப்போ உட்கார்ந்தது குற்றமா? மீடியாக்கள் இதையெல்லாம் பெரிதுபடுத்துவது மீடியாவுக்குத்தான் கேவலம்!’ என பிரஸ்மீட்டில் ரியாக்‌ஷன் காட்டி கெட்டபெயரைச் சம்பாதித்தார்.  

* படங்களில் மட்டுமல்ல, நிஜத்திலும் பாலய்யா பன்ச்கள் அதிரி புதிரிதான்!

`ஊரு மாறலாம், தின்ற ஃபுட்டு மாறலாம், படுக்கிற பெட்டு மாறலாம். ப்ளட் எதுக்கு மாறப்போது...  ப்ளட் டொனேட் செய்யிங்க!’

`ரிஸ்க்கா... எனக்கா..? உங்களுக்கு ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒருத்தன் தண்டவாளத்துல ரயிலை எதிர்த்து ஓடுறான். எதிர்ல வந்த டிரெயின் மோதி செத்துட்டான். இன்னொருத்தன் ரயிலுக்கு முன்னாடி ஓடினான். ரயில் மோதி செத்துட்டான். இந்தக் கதையில டிரெயின் யார் தெரியுமா... நான்தான். ஒருத்தன் என்னை எதிர்த்தா, அவனுக்குதான் ரிஸ்க். ஒருத்தனை நான் எதிர்த்தாலும் அவனுக்குதான் ரிஸ்க்!’
`இங்கே இருக்குற வோட்டர் ஒவ்வொருத்தனும் ஷூட்டர் டா!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயங்கரம் பாலய்யா!

* ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது எப்போதும் அவருக்கு மரியாதை உண்டு. அது அவர் தந்தை என்.டி.ஆரிடமிருந்து கற்றுக்கொண்ட நல்ல பழக்கங்களில் ஒன்று. தமிழ் அதிகாரிகள் என்றால் `அண்ணே!’ என்றும், தெலுங்கு அதிகாரிகள் என்றால் `அண்ணைய்யா’ என்றும்தான் அழைப்பார். சென்னையில் தன் பால்யத்தைக் கழித்தவர் என்பதால், எம்.ஜி.ஆரின் தீவிரமான ஃபேன் என்பார். எம்.ஜி.ஆர் பாடலைப் பாடி தமிழ் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்கிவிடுவார்.

* `பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ பாணியில் அடிக்கடி விழாக்கள் நடத்தி ஷூட்டிங் கேப்பில் தொகுதியை கலர்ஃபுல் லைட்டுகளால் அலங்கரித்துவிடுவதுதான் அவரின் முக்கிய வேலை.  தன் தந்தை என்.டி.ஆரோடு நடித்த ஹீரோயின்களை வரவழைத்து போன வருடம் பாராட்டு விழா நடத்தி அத்தனை வயது முதிர்ந்த அந்நாளைய ஹீரோயின்களின் கண்ணீர்க் கடலில் மூழ்கி முத்தெடுத்தார். இந்த வருடம் அப்பாவை வைத்து சினிமா இயக்கிய பழம்பெரும் இயக்குநர்களை வரவழைத்து கௌரவப்படுத்தினார். சிறப்பு விருந்தினராக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை வரவழைத்ததோடு அவரையும் மேடையில் ஆடவைத்து தொகுதி மக்களை குஷிப்படுத்தினார். 

சமீபத்தில் தன் தொகுதியில் `லெபக்‌ஷி’ என்ற கிராமத்தில் ‘லெபக்‌ஷி உத்சவ்’ என்று பெரும் திருவிழா ஒன்றை நடத்தினார். ராமாயண இதிகாசத்தில் ஜடாயு பறவை மரித்த தலமாகக் கருதப்படும் கிராமம் அது. தன் மாமா சந்திரபாபு நாயுடுவை சீஃப் கெஸ்ட்டாக வரவழைத்து பல கலைநிகழ்ச்சிகளை நடத்தியவர், தானும் `கிருஷ்ணார்ஜுன யுத்தம்’ என்ற நாடகத்தை அரங்கேற்றி அதே காஸ்ட்யூமில் விழாவில் கலந்துகொண்டு எல்லோரையும் மிரட்டினார்.   

* இந்துபூர் தொகுதி, ஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சியின் கோட்டை. பாலய்யாவின் ஒற்றை போன்காலில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக வேலைகளைச் செய்துவிடுவதால், வறட்சியான நிலப்பரப்பில் இருந்தாலும் ஓரளவு அடிப்படை கட்டமைப்புகளோடு மற்ற  தொகுதிகளைவிட முன்னோடியாகவே இருக்கிறது இந்துபூர் தொகுதி.

பாலய்யா ஒஸ்தாரய்யா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism