எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

நல்ல அரசியல்வாதியை எப்படி அடையாளம் காண்பது?

நல்ல அரசியல்வாதியை அடையாளம் காணமுடியாது. அவர்கள், கண்ணுக்குத் தெரியமாட்டார்கள்; அமைதியாய் சில காரியங்களைப் பரபரப்பு இல்லாமல், ‘லைவ்’ இல்லாமல் செய்துகொண்டிருப்பார்கள்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் டோக்கன்களுக்கு இன்னும் பணம் பட்டுவாடா ஆகவில்லையென்று பொதுமக்கள் போராட்டம் நடத்துவது பற்றி..?

‘வெட்கமில்லை
இங்கு வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை - என்றார் பாரதிதாசன்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

அரசியல் நடிப்பு யாருக்கு வராது?

அரசியலுக்கு வந்துவிட்டாலே நடித்துத்தான் ஆகவேண்டும். நடிப்பு வராதவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள்.

சீர்காழி சாமா. ஸ்ரீரங்கம்

நதிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே?

முதலில் நாகர்கோவிலுக்கும் திருவனந்தபுரத்துக்கும் நல்ல சாலை போடச் சொல்லுங்கள். அப்புறம் இணைக்கலாம் நதிகளை... ஆறுகளை... கடல்களை!

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

மனித வாழ்வில் இழப்பு என்பதென்ன? அது எப்போதாவது ஈடுசெய்யப்படுமா?

மனித வாழ்வில் இழப்பு என்பது கடந்த காலம்தான். அதை ஈடுசெய்வது, பொதுவாகச் சொன்னால் ஈடுசெய்ய முடியாதுதான். ஆனால் தன்பெண்டு, தன்பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்யம், இவையுண்டு தானுண்டு என வாழாமல், சமூகத்துக்காக வாழும் மனிதன் இறந்தாலும் அவரது வாழ்க்கை நீடிக்கும். அவரால் பயனடைந்தவர்கள் அந்த நினைவுகளை மரணத்துக்குப் பிறகும் கொண்டு செலுத்துவார்கள். அத்தகைய வாழ்க்கை வாழ வேண்டும்.

கேசவன், தர்மபுரி.

தமிழ்நாட்டில் சில அமைப்புகள் ஏதாவது ஒரு போராட்டத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார்களே?

தூண்டிவிட்டால் அதை அப்படியே ஆட்டு மந்தைகள் போல் பார்த்துச் செயல்படுபவர்களாக, மக்களை நினைக்கிறீர்களா? இந்தியாவிலேயே அதிகம் போராட்டங்கள் நடக்கும் மாநிலம் தமிழகம்தான். இந்தப் போராட்டங்களைத் தூண்டிவிடுவதாகச் சொல்லப்படும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சில ஆயிரம் பேர்தான் இருப்பார்கள். அவர்களால் கோடிக்கணக்கான மக்களைத் தூண்ட முடியுமா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், தென்மாவட்ட கடலோரங்களில் நடந்துவரும் தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், குமரி மீனவர்களை அச்சுறுத்தும் புதிய துறைமுகத்துக்கு எதிரான போராட்டம், சீர்காழி தொடங்கி ராமநாதபுரம் வரை அமைக்கப்படவிருக்கும் அனல்மின் நிலையங்களுக்கு எதிரான போராட்டம், கடலூர் - நாகை ஆகிய கடலோர மாவட்டங்களில் அமையவுள்ள புதிய வேதிப்பொருள் தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம், நியூட்ரினோவுக்கு எதிரான போராட்டம், ஹைட்ரோகார்பனுக்கு எதிரான போராட்டம் என்று சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்கள் நடத்துகிறார்கள். இந்தத் திட்டங்களின் உண்மையான நோக்கம் என்ன, இதன் சாதக பாதக அம்சங்கள் என்ன என்று பொதுமக்களுக்கு வெளிப்படையாக அரசு அறிவித்தால், இப்பிரச்னையே எழாது. மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்தியிருந்தால், இந்த அமைப்புகளால் பொதுமக்களைத் தூண்டிவிட முடியுமா?

சம்பத்குமாரி, பொன்மலை.

ரஜினி அரசியலுக்கு வருவதை முன்பு வரவேற்ற திருமாவளவன், இப்போது ரஜினியும் கமலும் அரசியலில் வெற்றிபெற முடியாது என்று பேசியிருக்கிறாரே?

அரசியலில் கடைசியாகச் சொன்னதுதான் சரியானது. அவர்களது கருத்து, நேற்று சொன்னது நேற்றோடு போச்சு!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.

தமிழகத்தில் இதுவரை இருந்த அமைச்சர்களைவிட, தற்போதைய அமைச்சர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். அப்படித்தானே?

ஆமாம்! கேட்பார் இல்லையென்றால் கொடுத்துவைத்தவர்கள்தானே!

பி.ஸ்ரீதர்ஷினி, பாபநாசம்.

‘காவிரி நீர் தமிழ்நாட்டில் பாய்ந்தோடப் போகிறது’ என்கிறாரே தமிழிசை?

டாக்டர் அக்காவின் வாக்கு, பொன்னா இருக்கட்டும்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராகத் தமிழர் தான் இருக்க வேண்டும் என அங்கேயும் பாரதிராஜா குரல் கொடுக்கிறாரே?

தமிழனைத்தான் கதாநாயகனாகவும், தமிழச்சியைத்தான் கதாநாயகியாகவும் வைத்துப் படம் எடுப்பேன் என்று யாராவது சொல்கிறார்களா?

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

அரசியலில் எது நீதி? எது அநீதி?

மக்கள் நலனுக்காகச் செய்வது எல்லாம் நீதிதான். ஆனால், வெற்றி பெற்றவர்கள் செய்வது எல்லாம்தான் நடைமுறையில் நீதியாக மதிக்கப்படுகிறது. இதைத்தான் சாணக்கியரும் மாக்கியவல்லியும் வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னார்கள்.

ஜே.டி.தேவசகாயம், பாளையங்கோட்டை.

தமிழக கவர்னர், தமிழக அரசாங்கத்தைச் சுத்தப்படுத்துவதைத் தவிர்த்து, தெருக்களைச் சுத்தப்படுத்துவது ஏன்?

அவரால் முடிந்ததைத்தானே செய்வார்!?

நா.மோகன்ராஜ், நல்லூர்பாளையம்.

தமிழகத்தில் தற்போது விவசாய அமைப்புகள் வலுப்பெற்றுள்ளனவா?

விவசாயம் குறித்த ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது என்று வேண்டுமானால் சொல்லலாம்!

பி.கம்பர் ஒப்பிலான், சென்னை-117

சசிகலாவை ‘முன்னாள் சகோதரி’ என்று சொல்லிவிட்டாரே திவாகரன். ஏன்?

இனிமேல் அவரால் என்ன லாபம் என்று நினைத்திருக்கலாமோ?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!