பிரீமியம் ஸ்டோரி

முன்பெல்லாம் படங்களில் ஒன்றிரண்டு இடங்களில் அரசியல் பேசுவார் விஜய். அதற்கே வெளியே ரத்தக்களறியாகும். ஆனால், இப்போதெல்லாம் பாடல்களிலேயே பாலிடிக்ஸ் பேசுகிறார். சமீபத்தில் வந்த ‘சர்கார்’ படத்தின் சிம்டாங்காரன் பாடல் புரியவில்லை என பலரும் புலம்ப, அதை டீகோட் செய்யும் முயற்சியில் இறங்கினோம். சும்மா சொல்லக் கூடாது. முன்னாள் இளைய தளபதி சும்மா எல்லாரையும் கலாய்ச்சிருக்கார் அந்த ஒரு பாட்டுல...

ஐடியா அய்யனாரு!

* ‘ஏய்ய் நிக்கலு பிக்கலுமா...
ஓ... தொட்டனா தூக்கலுமா...
மக்கரு குக்கருமா போய் தர்ல உக்காருமா’

இதில் பி.ஜே.பி-யின் அரசியலைக் குறியீடாகச் சொல்கிறார். ‘சும்மா இல்லாம அவங்களுக்கு பிக்கல் பிடுங்கல் வர்றமாதிரி ஏதாவது பண்ணா, ரெய்டு அனுப்பித் தூக்கிடுவாங்க’ என்ற நடப்பு உண்மையை விஜயபாஸ்கர் சார்பில் பேசியிருப்பதாகத் தெரிகிறது. குக்கர் என்பது தினகரனைக் குறிக்கிறது. ‘எதிர் அரசியல் பண்ண நினைச்சா தரையில உட்கார வைப்பாங்க’ எனவும் சொல்கிறார்.

* ‘நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல...
அல்லா ஜோரும் பேட்டையில...
சிரிச்சினுகிறோம் சேட்டையில குபீலு...’

இதில் அ.தி.மு.க என்பதாகச் சொல்லப்படும் கட்சியை ஒரு பிடி பிடிக்கிறார். ‘கோட்டையில இருக்குற நீங்க பண்ற கோமாளித்தனத்தால ஊரே குபீர் குபீர்னு சிரிப்பா சிரிக்குது’ என்று போட்டுத் தாக்குகிறார்.
இப்படியே முழுப் பாடலையும் டீகோட் செய்தால், தீபாவளி வரை லென்த்தாகப் போகும்போல. அதனால் பார்ட் 2-வில் சீக்கிரமே சந்திப்போம்.

* ‘பல்டி பக்குற டர்ல வுடணும் பல்து...
வேர்ல்டு மொத்தமும் அர்ல வுடணும் பிஸ்து...’

‘மெர்சல்’ பஞ்சாயத்தை இன்னமும் மறக்கவில்லை விஜய். அதனால், ஆரம்பிக்கும்போதே ஹெச்.ராஜாவைத் தாக்கி ஆரம்பிக்கிறார். தமிழக அரசியலில் ஹெச்.ராஜா போல ஏதாவது சொல்லிவிட்டு அப்புறம் ‘அது நான் இல்லீங்க...’ என பல்டி அடிப்பது யாருமில்லை. ‘நீங்க பேசுற பேச்சுக்கு உலகமே கடுப்பாகுது. அப்புறம் பயந்துபோய் பல்டி அடிக்கிறீங்க’ என்ற தொனி இதில் தெறிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு