Published:Updated:

கழுகார் பதில்கள்! - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி!

கழுகார் பதில்கள்! - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி!
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்! - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி!

கழுகார் பதில்கள்! - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி!

@ரைட்டர் சிவதர்ஷினி.
தமிழ் மணக்கும் ‘சிமிட்டாங்காரன்’ பாடல் எப்படி?


பிஸ்த்தே!

கழுகார் பதில்கள்! - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி!

ஆர்.அன்பு வேலாயுதம், காஞ்சிபுரம்.
மூன்று மணி நேர சினிமாவில் சர்கார் அமைக்கலாம். ஆனால், நிஜத்தில் முடியாது என ‘சர்கார்’  விஜய்யைக் கிண்டல் செய்துள்ளாரே தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை?


ஐந்து ஆண்டுகள் கொடுத்தால்கூட இந்த அரசியல்வாதிகள் ‘நிஜமான சர்கார்’ அமைப்பதில்லையே.

டி.சகுந்தலா, சென்னை-92
ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்தவர்கள்மீது வழக்குகள் பாய்ந்திருக்கின்றனவே?


குட்கா ஊழல் வழக்கில் சிக்கியவர்களே தெம்பாக வெளியே திரிகிறார்கள். எந்தவொரு ஆணையும் நடைமுறைப்படுத்துவதற்குத் தோதாக இருக்கவேண்டும். நீதிபதிகள் உட்பட பலர் சிறுவயதில் பட்டாசு வெடித்து மகிழ்ந்திருப்பார்கள். அது அந்த வயதுக்குரிய மகிழ்ச்சி. மாசு கட்டுப்படுத்துவது அவசியம்தான். ஆனால், ஒருநாள் தீபாவளியில் மட்டும் அதைக் குறைத்துவிட முடியுமா? தொழிற்சாலைகள் உட்படப் பல்வேறு நிறுவனங்களும் அதிகமான மாசு-வை
வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றை அல்லவா முதலில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

@எஸ்.ஏ.அலெக்ஸாண்டர், வரதராஜன்பேட்டை.
அரசாங்க அலுவலகக் கட்டடங்கள், கல்வி நிறுவனக் கட்டடங்கள் என்று அனைத்திலும் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தால், அனல் மின்சார (நிலக்கரி) உற்பத்தியால் ஏற்படும் சூழல் மாசுபாட்டைக் குறைக்கலாம் தானே?


நிலக்கரி இறக்குமதியில் கமிஷன் கிடைக்கும். சூரியதகடுகளில் கிடைக்குமா?

@கணபதிரவி, மடிப்பாக்கம்.

ஒருவேளை அ.தி.மு.க தலைமைப் பதவியில் ரஜினி அமர, தினகரனும் கட்சிக்குள் சேர்க்கப்பட, பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைந்தால் எடுபடுமா? (ரஜினி அரசியல் அத்தியாயம் அத்துடன் முடிந்துவிடும்தானே!)


அடைப்புக்குறிக்குள் ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளீர்களே, அதென்ன பதிலுக்கான ‘பிட்’டா..!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
‘படேல் சிலையைவிட உயரமாக அம்மாவுக்குச் சிலை அமைப்போம்’ என்று அ.தி.மு.க அரசு அறிவிக்குமா?


ஏற்கெனவே எதிலெல்லாம் ‘வாய்ப்பு’க் கிடைக்கும் என்று அலைந்துகொண்டிருக்கிறார்கள். நீர் வேறு கிளப்பிவிடாதீர்.

என்.சுப்பையா, புதுக்கோட்டை.

கம்யூனிஸ்ட் தலைவர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் தேசிய அளவிலான கூட்டணி குறித்துத் தீவிரமாகப் பேசிவருகின்றனரே, பலன் இருக்குமா?


இத்தகைய கூட்டணிகள், ‘தேசிய சர்க்கஸ்’ என்பதுதான் முந்தைய கால வரலாறு. ‘நித்ய கண்டம்...’ என்றே காலத்தை ஓட்ட வேண்டி யிருக்கும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்றால் நம்பலாம். அதற்கான வரலாறும் உண்டு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கழுகார் பதில்கள்! - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி!

எஸ்.வெற்றி, கரந்தை, தஞ்சாவூர்.
கர்நாடகா மாநில இடைத்தேர்தல் முடிவுகள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ‘மணியோசை’ என்று எடுத்துக்கொள்ளலாமா?


நிச்சயமாக அபாய மணியோசைதான். ஆனால், மோடி - அமித் ஷா இருவரும் எடுக்கவிருக்கும் ஆயுதத்தைப் பொறுத்தே முடிவுகள் அமையும்.

@‘திருப்பூர்’ அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

‘என் பணிக்காலம் இன்னும் 39 நாள்கள்தான். திருட்டுப்போன சிலைகளை அதற்குள்ளாக முடிந்தளவு மீட்டெடுப்பேன்’ என்று பொன்.மாணிக்கவேல் ஐ.ஜி அறிவித்துள்ளாரே?


இவர் போன்றவர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதால் நாட்டுக்கு நன்மை உண்டு. ஆனால், தங்களின் கண்ணசைவுக்கு இசையும் அதிகாரிகளுக்குப் பதவிக் காலத்தை நீட்டிப்பதுதானே அரசியல்வாதிகளின் வழக்கம். இவர்களைப் பொறுத்தவரை, பொன்.மாணிக்கவேல்... தொல்லையே. காணாமல் போய்க்கொண்டிருக்கும் கடவுள்கள்தான் மனது வைக்க வேண்டும்!

கழுகார் பதில்கள்! - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி!

சம்பத்குமாரி, பொன்மலை.
‘18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லுபடியாகும்’ என்று உயர் நீதிமன்றம் கூறிவிட்ட நிலையிலும் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வரவில்லையே?


ஒரேயடியாக ‘ஸ்லீப் மோடு’க்குப் போய்விட்டார்கள்போல!

வி.ஆர்.நடராஜன், திருமுல்லைவாயல்.
‘விவசாய நிலங்களை அழித்துவிட்டுச் சாலை அமைத்தால், அடுத்த தலைமுறை சாப்பிடக் கல்லும் மண்ணும்தான் மிஞ்சும்’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி வேதனைப்பட்டுள்ளாரே?


அதையும் டெண்டர் விட்டு நாங்கள் பிழைத்துக்கொள்வோம் என்று தயாராக நிற்கிறார்களே அரசியல்வாதிகள்!

கே.ரந்தீர், பெரியநாயக்கன்பாளையம்.
‘சி.பி.ஐ அமைப்பு அரசியல் கைப்பாவை’ என்கிற விமர்சனம், பி.ஜே.பி காலத்திலும் தொடர்கிறதே?


அவர்களும் அரசியல் செய்ய வேண்டாமா!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

#மீடூ (#MeToo) புகார்கள் நீதிமன்றத்துக்குச் சென்றால் நிற்குமா?

நிச்சயமாக நிற்கும். சந்தர்ப்பச் சாட்சியங்கள் சேர்ந்துவந்தால், எத்தனை ஆண்டுகளானாலும் குற்றம் குற்றமே!

கே.கோகுல், திருச்செங்கோடு.
‘தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான வசதிகள் அரசு மருத்துவமனையில் இருக்கின்றன’ என்று அ.தி.மு.க ஆட்சியாளர்கள் பெருமையோடு சொல்கிறார்கள். ஆனால், எந்த அமைச்சரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் செல்வதில்லையே?


அவர்களெல்லாம் ‘ரஸ்க்’ சாப்பிடுவதையே ‘ரிஸ்க்’ என நினைப்பவர்களாயிற்றே!

ச.புகழேந்தி, மதுரை-14.
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருக்கும் அ.தி.மு.க-வினர் மூன்று பேரை முன்கூட்டியே விடுவிக்கச் சொல்லிய தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கவில்லையே?


நியாயமான முடிவு. ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பால் அ.தி.மு.க-வினரின் வெறியாட்டத்துக்கு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் மூன்று பேர் பலி கொடுக்கப் பட்டனர். இந்தக் கொடூரக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையே குறைவுதான்.

வி.முத்துலட்சுமி, நாமக்கல்.
இன்றைய அரசியல் தலைவர்களில் சிறந்தப் பேச்சாளர் என்று யாரைக் குறிப்பிடலாம்?


நாஞ்சில் சம்பத். ஆனால், அவர் இப்போது அரசியல் பேசுவதைக் குறைத்துக்கொண்டார்.

கழுகார் பதில்கள்! - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி!

ஏழாயிரம்பண்ணை எம். செல்லையா, சாத்தூர்.
‘புதையல்கள் அதிகம் கிடைப்பது தமிழகத்தில்தான்’ என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளாரே?


உண்மைதான். அதேசமயம் அப்படிக் கிடைக்கும் புதையல்கள், வரலாற்றுத் தடயங்கள் பற்றி அக்கறை காட்டாமல் இருப்பதும் தமிழகத்தில்தான். மனிதர்களின் ஆரம்பகாலம் பற்றிய தடயங்கள் அதிகபட்சமாக இரண்டு லட்சம் ஆண்டுகள் வரைதான் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதற்கும் முந்தைய காலத்திலிருந்தே தமிழகத்தில் மனிதர்கள்  வாழ்ந்துவந்திருக் கின்றனர்   என்பதற்கான தடயங்கள் திருவள்ளூர் மாவட்டம், குடியம் மலைப்பகுதியில் இருக்கின்றன. நூறாண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயர்கள் இதைக் கண்டறிந்து சொல்லியுள்ளனர். ஆனால், அங்கு ஆதி மனிதர்கள் வாழ்ந்த குகைகளைப் பராமரிக்கவோ, ஆய்வுகளை நடத்தவோ, இந்த வரலாற்றை உலக அளவில் உரக்கச் சொல்லவோ நம் அரசுகள் தயாராக இல்லை.

யு.மகேஸ்வரி, திண்டிவனம்.

மதங்களின் ஆதிக்கம், சாதிகளின் ஆக்ரோஷம், பணக்காரர்களின் அதிகாரம், அரசியல்வாதிகளின் அராஜகம்... என்று சிக்கித் தவிக்கும் இந்தியாவை ஜனநாயக நாடு என்பது நம்பும்படியாக இல்லையே?


இதைவிட மோசமான நாடுகளும் இருக்கின்றன - இதே ஜனநாயகக் கொடியைப் பிடித்தபடி. எனவே, நம்பிக்கையோடு வாழுங்கள். அதுதான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது!

பா.சீமான்பாரதி, வெள்ளானைக்கோட்டை, வாசுதேவநல்லூர்.
‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் பேசிய கன்னிப்பேச்சு... ‘அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீடு வேண்டும்’ என்பது பற்றித்தான். தற்போது அவரே அதை எதிர்க்கிறாரே?

அதெல்லாம் சேரும் இடத்தைப் பொறுத்தது! இன்று யார் தோளில் அவர் கைபோட்டுக் கொண்டிருக்கிறார் என்று பாருங்கள்... உங்களுக்கே விளங்கும்!

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!