@லா.ரா.கணபதி, மடிப்பாக்கம்.
ரஜினியின் அடுத்த படம் என்ன? (வேறென்ன கேட்க!)

‘நாற்காலி’க்குச் சண்டைபோடும்
நாடு நம் பாரத நாடு.
நீ போட்டு நானும் போட்டு
என்னாச்சு நம்ம ஓட்டு
கூத்தாடி பொழப்பா போச்சு
ஜனங்க பாடு... இப்ப ததிங்கிணத்தோம்’ என்று பாடியவர், இந்த ஸ்டைலில் ஒரு படம் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்வி! (வேறென்ன சொல்ல!)

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
தைலாபுரம் விருந்துக்கு பி.ஜே.பி-யை அழைக்கவில்லையே?

ஆடு பகை, குட்டி உறவு!

@பா.கவின், சென்னை - 21.
கழுகாரின் பார்வையில் எல்.கே.ஜி திரைப்படம்?

க்ளைமாக்ஸ் தவிர, மற்ற அனைத்தும் சமகால அரசியல்வாதி ஒருவரின் அபரிமிதமான வளர்ச்சியை நேருக்கு நேராகக் கொண்டுவந்து நிறுத்துகிறது.

@ஞானப்பிரகாஷ், தொம்பக்குளம்.
மோடியின் வசீகரம், அமித் ஷாவின் அற்புதமான உத்திகள், ஆர்.எஸ்.எஸ் நெட்வொர்க், நிதித் திட்டங்கள், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான சர்ஜிக்கல் அட்டாக் இதை எல்லாம் மீறி காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறுமா?

ரஃபேல் விமான பேரம், ஜி.எஸ்.டி தாக்குதல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரியங்காவின் வரவு, கூட்டணிக் கட்சிகள் இதெல்லாம்கூட எடுபட்டால், வாய்ப்புகள் இருக்கின்றனதானே!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.
‘லோக்ஆயுக்தா’ அமைப்பை ஆறு வாரத்துக்குள் செயல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதே?

நீதிமன்றங்கள் ஆணையிட்டாலும், யாரும் இங்கே கவலைப்படுவதில்லை. சமீபத்தில்கூட ‘நீதிமன்றங்களின் உத்தரவை அரசும் அதிகாரிகளும் நிறைவேற்றுவதே இல்லை’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கவலை பொங்கக் கூறியிருப்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

@காந்திலெனின், திருச்சி.
வனப்பாதுகாப்புச் சட்டத்தைக் காட்டி, பழங்குடி மக்களைக் காடுகளை விட்டு வெளியேறச் சொல்கிறதே உச்ச நீதிமன்றம்?

சுற்றுலா என்கிற பெயரில் காடுகளை ஆக்கிரமித்திருக்கும் உல்லாச விடுதிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களின் படாடோப பங்களாக்களும்தான் காடுகளின் முதல் எதிரியே தவிர, பழங்குடிகளின் ஓலைவேய்ந்த குடிசைகள் அல்ல. தற்போது, மத்திய அரசின் பதில் மனுவை அடுத்து, தன் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இது தற்காலிகத் தீர்வே தவிர, நிரந்தரமானதல்ல. உண்மையை உறுதிப்படுத்திக் கொண்டு, பழங்குடியினரின் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில், உறுதியான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.

மணிமாறன், தண்டையார்பேட்டை, சென்னை-81.
சமீபகாலமாக தமிழக அமைச்சர்களின் பேச்சுகளில் ஓர் ஆணவத் தொனி இருப்பதைக் கவனித்தீரா. 1991 காலகட்டத்தில் இப்படியொரு நிலை இருந்தாக ஞாபகம். என்ன தைரியத்தில் இப்படிப் பேசுகிறார்கள்?

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்கிற தைரியத்தில்தான்.

@இ.சுந்தரபாண்டியன், தேவதானப்பட்டி.
அன்புமணியின் பத்திரிகையாளர்கள் சந்திப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்... உண்மையைச் சொல்லவும்?

‘யாருக்கும் வெட்கம் இல்லை’ என்று அனைத்து அரசியல்வாதிகளின் சார்பில், அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். பிறகு, எதற்காக அவரை மட்டுமே குறிவைக்க வேண்டும்.

ச.பா.ராஜா, குரும்பகரம்.
‘அரசியலுக்கே வரமாட்டேன். ஏனென்றால், எனக்கு அரசியல் தெரியாது’ என்று சொன்ன கமல்ஹாசன், அரசியலுக்கு வந்தேவிட்டாரே?

தனக்கு அரசியல் தெரியவில்லை என்பதை உங்களுக்கெல்லாம் நிரூபித்துக் காட்டுவதற்காகவே இத்தகைய ரிஸ்க் எடுத்திருக்கிறாரோ என்னவோ!

@கே.வெங்கட்.
உலகத்தில் உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்படாத நாடு உண்டா?

எல்லாவற்றையும் ‘வியாபாரம்’ என்பதாக மாற்றிவிட்டோம். அதற்கான போட்டா போட்டிகள்தான் கலவரங்களையும், போர்களையும் உருவாக்குகின்றன. ‘அத்தகைய வியாபாரம்’ இல்லாத நாடு என ஒன்று இருந்தால், அதுதான் பாதிக்கப்படாத நாடு.

@கிட்டு, அவினாசி.
‘தமிழ்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம். 80 லட்சம் பேர் காத்திருப்பு’ என்கிறார்கள். ஆனால், எந்த வேலைக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. வடமாநிலத்தவர்தானே குவிகிறார்கள்?

மாதச் சம்பளத்துடன்கூடிய அரசு/தனியார் வேலைகளுக்காகக் காத்திருப்பவர்கள்தான் 80 லட்சம் பேர். நீங்கள் சொல்லும் ‘எந்த வேலை’ என்பது... ஓட்டல், வயற்காடு உள்ளிட்ட தினக்கூலி வேலை. இந்த வேலைகளுக்கு இங்கே திண்டாட்டம் இல்லை. ஆட்கள் தேவை என்கிற போர்டுகள்தான் பளபளக்கின்றன. ‘எந்த வேலை’ என்று முடிவுசெய்யவேண்டியது, தனிப்பட்ட நபர்களின் விருப்பம்.

@ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.
அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணி சேர்வதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

பாட்டாளி மக்களைச் சொல்கிறீர்களா... கூட்டாளி மக்களைச் சொல்கிறீர்களா?!

தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி-10
தமிழிசையால்தானே தமிழகத்தில் பி.ஜே.பி உயிர்ப்புடன் இருக்கிறது?

நிச்சயமாக, ‘தமிழக்கா’வின் பங்கை மறுக்கமுடியாது. ஹெச்.ராஜாவின் ‘வாய்’க்கும் முக்கியப் பங்கிருக்கிறது.

@டி.சிவக்குமார் சீலப்பாடி, திண்டுக்கல்.
தி.மு.க-வின் கெடுபிடிகள், அ.தி.மு.க-வின் மக்கள் செல்வாக்கின்மை, இவற்றால் ‘மக்கள் நலக்கூட்டணி’ போல் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதா?

ஏற்பாடுகள் நடக்கின்றன என்கிறார்கள். கடந்த முறை தி.மு.க-வை ஓரம்கட்டுவதற்காக ஜெயலலிதா எடுத்த அதே ஆயுதத்தை இப்போது அ.தி.மு.க-வை ஓரம்கட்டுவதற்காக ஸ்டாலின் எடுக்கக்கூடும்.

@இ. முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.
அடிக்கல் நடுவதையெல்லாம் விழாவாக எடுத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதைவிட, திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததும் விழா எடுக்கலாமே?

அதுவரையில் ஆட்சியில் இருப்போமோ, மாட்டோமோ என்கிற பயத்தில்தான், பேசிய அடுத்த நொடியிலேயே அடிக்கல்நாட்டி, பெயரைப் பொறித்துவைத்துவிடுகிறார்கள். உதாரணமாக, கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் திட்டம் இதற்கெல்லாம் அடிக்கல் நாட்டியது முதல்வராக இருந்த கருணாநிதி. ஆனால், மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தது முதல்வராக இருந்த ஜெயலலிதா. ‘பேருந்து நிலையத்தைத் திறந்தது நான்தான்’ என்று ஜெயலலிதா கல்வெட்டு வைத்தார். அடுத்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ‘நான்தான் அடிக்கல் நாட்டினேன்’ என்று அதைவிட பெரிய கல்வெட்டு வைத்தார். இரண்டும் சேர்ந்து தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தையே மறைத்துக்கொண்டிருக்கின்றன.

@திருப்பூர். அர்ஜுனன். ஜி, அவிநாசி.
கழுகாரே நீங்கள் சொல்லுங்கள்... இளைஞர்களின் அடுத்த தலைவராக யார் உருவாகக்கூடும்... ஏன்?

தலைவன், தானாக உருவானாலும் சரி, சமூகத்தால் உருவாக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி, அவன் மக்களின் சேவகனே. இதை உணர்ந்து அவன் உழைக்கும்போதுதான், தலைவன் இல்லாவிட்டாலும்கூட அந்தச் சமூகம் தழைக்கும். அதுதான் உண்மையிலேயே முன்னேறிய சமூக மாகவும் இருக்கும். இப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்க, ஒவ்வொருவருமே, தலைவனாக உணர்ந்து நடைபோடவேண்டும். ஆனால், அதை நோக்கிப் பயணிக்காமல், வெளியிலிருந்து ஒரு தலைவனைத் தேடிக்கொண்டே இருப்பதுதான் இங்கே வாடிக்கையாகவே இருக்கிறது. இதுதான் ஊழல் உருவாவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறது.

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.
பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன்?

‘தில்’நந்தன்!

பா.சு.மணிவண்ணன், திருப்பூர்-4.
‘நாகரிக அரசியல்’ என்கிறார்களே... அப்படி என்றால் என்ன, அது எங்கே இருக்கிறது?

‘துபாய் எங்க இருக்கு? ‘அது, தூத்துக்குடி பக்கமோ, திருநெல்வேலி பக்கமோ இருக்கு!’

@ஆ. ஹரிகோபி, புதுடெல்லி.
‘தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி ஏதும் இல்லை. பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அ.தி.மு.க இடம்பெற்றுள்ளது’ என்று அமித் ஷா கூறியுள்ளாரே?

பக்கத்தில் உட்கார்ந்திருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே இதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. கூட்டணிக்கு யார் தலைமை வகித்தால் என்ன... அவர்களுக்குத் தேவை, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கான ‘தமிழகக் குத்தகை’ கைவிட்டுப் போய்விடக்கூடாது என்பதுதான்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!