Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

@சக்திமணிகண்டன்.

இன்றைய இளைஞர்கள், அரசியலைப் பற்றி அறிந்துகொள்ளப் புத்தகங்களைப் பரிந்துரையுங்களேன்?


நிறைய புத்தகங்களைப் புரட்டத் தேவையில்லை. ஈரடி திருக்குறள் போதும்! பொருட்பாலில் அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல் மற்றும் குடியியல் என ஏழு இயல்களில் மொத்தம் 700 குறள்கள் இருக்கின்றன. அனைத்தையும் படிக்க நேரமில்லை என்றால்,

‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்’ என்கிற ஒரு குறளைப் படித்தால்கூடப் போதும்.

கழுகார் பதில்கள்!

@கே.சி.நாராயணன்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை எனும்போது, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை அழிக்க காங்கிரஸ் - பி.ஜே.பி ஓர் அணியாகவும்; தேசியக் கட்சிகளை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெடுக்க தி.மு.க - அ.தி.மு.க ஓர் அணியாகவும் போட்டியிட்டால்?


ஒரு கட்சியை அழிப்பது ஜனநாயகத்தில் உட்படாது. நல்ல செயல்பாட்டினால் மற்ற கட்சிகளை தோல்வியடைய வைக்க முடியுமே. ஜனநாயகத்தில் எல்லாம் மக்கள் கையில்தான்.

@எ.ஜேம்ஸ் ராஜசேகரன், மதுரை.

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முயன்ற நடிகர் விஷால், இப்போது அமைதிகாக்கிறாரே?


கால்ஷீட் பிஸியாக இருக்கிறதோ... என்னவோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

@பா.கவின் சென்னை-21.

நாட்டை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே போதுமே... எதற்காக எம்.எல்.ஏ., எம்.பி என்கிற மிகப்பெரிய வியாபாரமெல்லாம்?


‘படித்தவன் சூதும் வாதும் செய்வான்’ என்று பயந்துதான், மக்கள் பிரதிநிதிகள் முடிவெடுக்க வேண்டும் என்பதை உருவாக்கினார்கள். ஆனால், ‘படித்தவர்களே பரவாயில்லை’ என்பதுபோல பலமடங்கு சூதும் வாதும் செய்கிறார்கள் மக்கள் பிரதிநிதிகள்.

@எல்.ஆர்.சுந்தரராஜன் மடிப்பாக்கம்.

கூட்டணி தோற்றால், ‘பி.ஜே.பி-யோடு கூட்டுப்போட்டது தவறு’ என்று சொல்லி அ.தி.மு.க தப்பித்துக்கொண்டுவிடும்போலத் தெரிகிறதே?


‘மதுரை வந்த மோடி, தமிழனின் பாரம்பர்யமிக்க இட்லி-சட்னி சாப்பிடவில்லை’ - திண்டுக்கல் சீனிவாசன்.

‘வீட்டுக்கு ஒரு லோடு தெர்மாகோல் கொடுக்கவில்லை’ - செல்லூர் ராஜு,

‘மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மாதச்சம்பளம் கொடுக்க வேண்டும் என்கிற என் கோரிக்கை ஏற்கப்படவில்லை’ - ஜெயக்குமார்.

- தோல்வி என்றால், இதோ... அறிக்கை ரெடி!

கழுகார் பதில்கள்!

@ஸ்ரீ, மதுரை.

குடிக்க, குளிக்கத் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்காக பல ஆயிரம் கோடிகளைக் கொட்டுவதைவிட மாநிலத்தில் இருக்கும் ஆறு, ஏரி, குளம் என நீர்நிலைகளைத் தூர்வாரிக்கொடுக்கலாமே?


அரசாங்கத்தின்மீது குறைசொல்வதே வேலையாகிவிட்டது. தூர்வாருவது மூலமாக என்ன ‘நன்மை’ இருக்கிறது என்பது உங்களைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். கடைசியாக, வைகை ஆற்றை எப்போது தூர்வாரினார்கள் என்று ஆர்.டி.ஐ மூலமாக மனுப் போட்டுப் பாருங்கள். அப்படியே ‘ஷாக்’ ஆனாலும் ஆகிவிடுவீர்கள்!

@பூவேந்தஅரசு.

தூங்கும் நேரம் தாண்ட நேர்ந்ததால், தூக்கம் வராமல் தவித்த அனுபவம் கழுகாருக்கு உண்டா?


இன்றைய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்படித்தானே. இதில் கழுகார் மட்டும் விதிவிலக்கா!

எம்.டி.உமாபார்வதி, சென்னை.

ஒவ்வொரு குடிமகனின் ஒட்டுமொத்த விவரங்களும் ஆதார் என்பதாக அரசாங்கத்தின் கைகளில் இருக்கின்றன. சி.சி.டி.வி மூலம் கிடைக்கும் குற்றவாளிகளின் போட்டோக்களை வைத்து ஆதார் மூலம் கண்டுபிடித்து விடலாம்தானே?


கண்டுபிடிக்கலாம்தான். ஆனால், ‘ஆதாரில் இருக்கும் புகைப்படங்களை ஒப்பிட்டு’ என்பதுதான் சிரிப்பை வரவழைக்கிறது. ஆதாரில் இருக்கும் நம்முடைய படத்தை நாம் பார்த்தாலே, நாம்தானா என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில்தானே இருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், நூறு சதவிகிதம் தெளிவான ஆதார் கார்டு கொடுக்கப்பட வேண்டும்.

 @கே.முருகேசன், விருதுநகர்.

கூட்டணியில் சேர்க்க வேண்டிய கட்சியை (தே.மு.தி.க) சேர்க்காததால் கடந்தமுறை தோல்வி கண்ட தி.மு.க., இம்முறை சேர்க்கக்கூடாத கட்சிகளை (ம.தி.மு.க-விடுதலைச் சிறுத்தைகள்) சேர்த்திருப்பது தோல்வியைத்தானே தரும்?


ஜெயலலிதா, கருணாநிதி இல்லை; கமல்ஹாசன், தினகரன் உண்டு; எட்டுவழிச்சாலை, மீத்தேன், ஸ்டெர்லைட் உண்டு; இரண்டாயிரம் ரூபாய் உண்டு, ஆறாயிரம் ரூபாய் உண்டு. இப்படி இந்தத் தேர்தலில் ஏகப்பட்ட விஷயங்கள் செயலாற்றப் போகின்றன. ஆகையால், தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது.

@சக்திமணிகண்டன்

மத்தியில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சி அமைந்தால் (21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க போதுமான இடங்களை வென்றால்) முதல்வர் பதவியில் மாற்றம்வருமா?


ஏற்றம்வரும்!

மு.மதிவாணன், காஞ்சிபுரம்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை பிரதமர் மோடி சூட்டியிருக்கிறாரே?


‘வித்தியாசமான அரசியல்வாதி’ என்று பெயரெடுக்கத் துடித்த மோடி, ஓட்டு அரசியலுக்காகக் குறிப்பிட்ட சிலரைத் திருப்திப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருப்பதன் மூலமாக ‘வழக்கமான அரசியல்வாதி’ என்பதை மீண்டும் ஒரு தடவை வெளிச்சம் போட்டுள்ளார். பொதுவான இடங்களுக்கெல்லாம் இப்படிப் பெயர்களைச் சூட்டுவதுதான் பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணமாக இருக்கிறது. ஏற்கெனவே பேருந்துகளுக் கெல்லாம் சாதித் தலைவர்களின் பெயர்களை வைத்தார்கள். ஆங்காங்கே பேருந்துகளைக் குறிவைத்துப் பரஸ்பரம் எரித்தார்கள் மாற்று சாதிக்காரர்கள். இப்போதுகூட, ‘மதுரை விமான நிலையத்துக்கு எங்கள் தலைவர் பெயரைத்தான் வைக்கவேண்டும்’ என்று இரு சாதிப்பிரிவினர் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள். அங்கே எந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாலும், ஒரு தரப்பின் ஓட்டில் ஓட்டை விழக்கூடும் என்பதால் எந்த அரசியல்வாதியுமே அதைத் தொடப் பயப்படுகிறார்கள். எனவே, இப்படிப் பெயர்சூட்டும் அரசியலை ஒழிக்கும் வேலையை மோடி கையிலெடுத்தால் பாராட்டலாம். பெயர்சூட்டுவதைவிட, சம்பந்தப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதுதான் முக்கியம் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

கழுகார் பதில்கள்!

@பார்த்தசாரதி, திருப்பூர்.

கூட்டணிப் பதற்றங்களைப் பார்க்கும்போது வாக்காளனின் ‘மதிப்பு’ பலமடங்கு உயரும்போல இருக்கிறதே!


அது மதிப்பு உயர்வல்ல, மதிப்பிழப்பு!

எம்.மகேஷ், அச்சரப்பாக்கம்.

‘மனிதர்களின் சிறுநீரைச் சேமித்தால், யூரியா இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்காது’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி யோசனை கூறியுள்ளாரே?

நூற்றுக்கு நூறு உண்மை. உயிரினங்கள் ஒவ்வொன்றின் கழிவும், பிறிதொன்றுக்கான உரமே! இதைத்தான், ‘உண்டவன் உரம் பண்ணுவான்’ என்று பெரியோர்கள் சொல்லிவைத்தனர். காடுகளில் இருக்கும் மரம், செடி, கொடி, புல், பூண்டுகளுக்கெல்லாம் யார் உரம் வைக்கிறார்கள்... காட்டுயிரிகள்தான். இயற்கையின் இந்த ஏற்பாட்டைப் புரிந்துகொண்டாலே அமைச்சரின் கருத்தில் இருக்கும் உண்மை தெரிந்து விடும். இதை ஆய்வு மூலமாகவே தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், பசுமை விகடனில் வெளியான இந்தக் கட்டுரையைப் படியுங்கள். இன்றும் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இடத்துக்கு நேரில் சென்று உறுதி செய்து கொள்ளுங்கள். https://bit.ly/2ST2LT6

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!