‘வண்ணை’ கணேசன், பொன்னியம்மன்மேடு.
ச.ம.க தனித்துப்போட்டி என்று சரத்குமார் கூறியிருக்கிறாரே... டெபாசிட் தேறுமா?

ஓ... டெபாசிட் கட்டக்கூட ஆளிருக்கிறதோ!

பி.ஸ்ரீதர்ஷினி, பாபநாசம்.
‘தமிழகத்தை ஆள்வது பா.ம.க-வின் இலக்கு கிடையாது’ என்கிறாரே அன்புமணி?

ஒவ்வொரு தேர்தலிலும் அவரது கட்சியின் இலக்கு என்ன என்பதுதான் ஊருக்கே தெரியுமே!

பி.சி.ரகு, பள்ளிச்சேரி, விழுப்புரம்.
விஜயகாந்த்தின் மகன் பிரபாகரன், அதிகம் அரசியல் தெரிந்த அரசியல்வாதி போலவே பேசுகிறாரே?

அப்பா, அம்மாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை.

எ.கே.ஜி.ஜெயராமன், ஆத்தூர்.
கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால், 40 தொகுதிகளில் கேப்டன் எவ்வளவு தேறுவார்?

கப்பல் தரை தட்டிவிடும்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).
நான்குமுனைப் போட்டி என்றால் தி.மு.க-வுக்குத்தானே வெற்றி?

ம்க்கும்.... கூட்டணியில் இருக்கும் நான்கு கட்சிகளுமே நான்கு திசையில் நிற்கின்றனவே!

@எஸ்.பஷீர் அலி, பேராவூரணி.
பொள்ளாச்சி சம்பவத்துக்காக நாமெல்லாம் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டும்தானே?

கோபப்பட வேண்டும்.

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.
சென்னையில் மாணவிகளுடனான உரையாடலின்போது ராகுல் காந்தி தந்த பதில்கள், அவர் ‘கிரேட் லீடர்’ என்பதைத் தெளிவாக்கிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்?

நிச்சயமாக. அவரது பதில்களில் அத்தனை நேர்த்தியும் முதிர்ச்சியும் ‘பளிச்’சிட்டன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கடந்த தடவை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடியும் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது இப்படித்தான் ‘பளிச்’சிட்டார்!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.
தற்போது அ.தி.மு.க-வின் பிரதானக் கொள்கை எது கழுகாரே?

உங்கள் கேள்வியில் எழுத்துப்பிழை இருக்கிறது என நினைக்கிறேன். ‘கை’யா... ‘ளை’யா... என்று தெளிவாகச் சொல்லுங்கள்.

டி.சந்திரன், ஈரோடு.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்கள் பக்குவப்படுகிறார்களா... அரசியல்வாதிகள் பக்குவப்படுகிறார்களா?

அரசியல்வாதிகள்தான். ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்காளர்களுக்குப் பணத்தைப் பக்குவமாகக் கொண்டு சேர்ப்பதற்காக விதம்விதமாக யோசிப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாமே!

@ஆர்.சுப்ரமணியன், சென்னை.
‘சமூகநீதி, சமூகநீதி’ என்கிறார்களே அப்படியென்றால் என்னவென்று கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்?

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.’

‘செய்யும் தொழிலைத் தவிர, வேறு எந்த வகையிலும் மனிதர்களிடம் வேறுபாடு இல்லை’ என்று திருவள்ளுவர் சொல்லியிருப்பதைவிடவா வேறு விளக்கம் சொல்லிவிட முடியும். செய்யும் தொழிலை வைத்தே ‘நான் உயர்ந்தவன்.. நீ தாழ்ந்தவன்’ என்று வேறுபடுத்திப் பார்த்து பல நூற்றாண்டுகளாக சகமனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். இதிலிருந்து சகமனிதர்களை விடுவிப்பதுதான் சமூகநீதி. ஆனால், இதை உணர மறுப்பவர்கள், எப்படி தங்களை மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். தெரிந்தவர்களுக்கு வேண்டுமானால் விளக்கம் கொடுக்கலாம். தெரியாததுபோல நடிப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. இப்படி நடிப்பவர்களின் எண்ணிக்கைதான் இங்கே அதிகமாக இருக்கிறது.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
1996-ல் வெளிநாட்டுக்குத் தப்பிய இந்தியன் தாத்தாவின் வயது 80 என்றாலே, இப்போது திரும்பிவரும் (2019, இந்தியன்-2) அவருக்கு 100 வயதைத் தாண்டியிருக்குமே!

சினிமாவைப் பொறுத்தவரை தியாகராஜ பாகவதர் காலத்திலேயே வயது ஒரு பிரச்னை இல்லை. அதிலும், இது டிஜிட்டல் யுகம். 100 வயது இந்தியன் தாத்தா என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்று காத்திருந்து பாருங்கள்.

@மல்லிகா குரு, சென்னை.
சுற்றுப்பயணம் சென்ற மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனிடம், அவர் நடித்த சினிமா மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மக்கள் விசாரித்திருப்பது குறித்து?

யாரிடம் என்ன கேட்கவேண்டும் என்று மக்கள் நன்றாகத் தெரிந்துவைத்துள்ளனர் .

தி.வடிவேல், ஈரோடு.
ஊழல்வாதியாக இருந்தாலும்கூட, அரசியல் தலைவர்களின் மரணத்துக்காக தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது. ஆனால், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் வீரர்களுக்காக அப்படிப் பறப்பதில்லையே?

ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள் எல்லாம் எஜமானர்கள் போலவும், நாட்டைக் காப்பாற்றும் வீரர்கள், காவலர்கள் மற்ற மற்ற படையினர் எல்லாம் அவர்களின் ஏவலர்கள் போலவும்தானே இங்கே அறிய வைக்கப்பட்டுள்ளனர்.

@இந்து குமரப்பன், விழுப்புரம்.
கவியரசு கண்ணதாசன் இன்று உயிருடன் இருந்தால்... இன்றைய அரசியல் கட்சிகளைப் பற்றி என்ன பாடியிருப்பார்?

‘நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?’ என்று ஏற்கெனவே பாடி வைத்துவிட்டாரே.

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.
கிங்மேக்கர் யார்?

நாம்தான். ஆனால், நம்முடைய அருமை நமக்கே தெரியாமல் இருப்பதால்தான், அத்தனை அரசியல்வாதிகளும் நம் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக் கிறார்கள்!

@நீலன், கோவை.
பொள்ளாச்சி பாலியல் பயங்கர வழக்கில் விசாரிக்காமலேயே நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் எப்படி சிறையில் தள்ளமுடியும்?

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களைக் காப்பாற்றும் வகையில்தான் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியுள்ளனர். அதாவது, ஊர் வாயை மூடுவதற்காக! உண்மையில் ஒருவர்மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்ச வேண்டுமென்றால், ஏற்கெனவே ஒரு சில வழக்குகளிலாவது அவர் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆள்வோரைப் பொறுத்தவரை, ஊர் வாயை மூடுவதற்கும், தங்களுக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்கும்தான் இந்தச் சட்டத்தைப் பாய்ச்சி வருகின்றனர். இப்படி அதிகாரத்திமிரோடு ஒரேயொரு வழக்குக்காக குண்டர் சட்டத்தில் உடனடியாக அடைக்கப்பட்டவர்கள் பலரும், நீதிமன்றம் மூலமாக ஓரிரு மாதங்களிலேயே வெளியில் வருவதுதான் தொடர்கதையாக இருக்கிறது.

@காட்டாவூர் இலக்கியன், செங்குன்றம், சென்னை -52.
இந்தியாவில் நடக்கும் பாலியல் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம், பாலியல் கல்வி இல்லாததா அல்லது திருமண முறையா?

முதலில் பாலியல் கல்வி என்பதே சொல்லித்தந்துதான் வரவேண்டும் என்பதில்லை. வயதுக்கு வந்தவுடன் இயற்கையாகவே உணரக்கூடிய ஒன்று. ஆனால், காலஓட்டத்தில் இயல்பானவற்றைக்கூட கற்றுத்தரவேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்திக் கொண்டுவிட்டோம். மனிதர்கள் என்கிற போர்வையில் எல்லாவற்றையும் ‘முறை’ப்படுத்திவிட்டதாகப் பெருமையடித்துக்கொள்கிறோம். சிறுநீர் கழிப்பது தொடங்கி, தூங்குவதுவரை எல்லாவற்றுக்கும் நாம் ‘டைம்டேபிள்’ போட்டுவைத்திருக்கிறோம். மாடுகள்கூட எப்படிக் கருவுற வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். காளைகளே இல்லாமல் அவற்றைக் கருவூட்டல் செய்கிறோம். காளைகளுக்கு உணர்ச்சிகளே கூடாதென்று விதைநீக்கம் செய்கிறோம்.

பாலியல் உணர்வுக்கான வடிகால்களை ஒழுங்கு படுத்தக் கல்யாணம் என்ற ஒன்றை உருவாக்கி, 18 வயது என்று நிர்ணயித்து, அதைத் தற்போது 30, 40 வரை தள்ளிக்கொண்டு வந்துவிட்டோம். இதற்குப் படிப்பு, வேலைவாய்ப்பு, வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்று தவிர்க்கவே முடியாத பல காரணங்களையும் உருவாக்கிச் சிக்கிக்கொண்டுவிட்டோம். திரும்பவே முடியாது என்கிற அளவுக்குத் தொலைதூரம் பயணித்துவிட்டோம். இத்தனையையும் செய்துவிட்டு, விளக்கக் கட்டுரைகளை எழுதிக்கொண்டும், விவாத மேடைகளை நடத்திக்கொண்டும் இருக்கிறோம்.

இயற்கைப் பாடத்தைப் புரிந்துகொள்ளாதவரையில், இந்தப் பிரச்னைக்கு விடிவே இல்லை, இன்னும் எத்தனை யுகங்களானாலும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!