Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

@கே.முத்தூஸ், தொண்டி.
‘மோடிக்கு எதிராக யார் என்கிற கேள்வி 2024-ல் வரலாம். ஆனால், 2019-ல் வாய்ப்பே இல்லை’ என்று தன் பேட்டியில் பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே?


தன்னம்பிக்கை!

@காந்தி லெனின், திருச்சி.
டி.டி.வி-க்குப் ‘பரிசு’ கிடைத்துவிடுமோ?

‘கொடுக்கும் பரிசு’ எப்படிப்பட்டது என்பதை வைத்துத்தான், ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ பற்றிச் சொல்ல முடியும்.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எஸ்.சிட்டிபாபு, அயன்புரம்.
ஆர்.கே நகர் தொகுதியிலிருக்கும் டி.டி.வி தினகரனின் அலுவலகத்தில், 20 ரூபாய் நோட்டுகளை வீசி அடிக்கடி போராட்டம் நடத்துகிறார்களே?


தொடர்ந்து இப்படிப் போராடிக்கொண்டுதான்  இருக்கிறார்கள். இதன் மூலமாக, ‘ஓட்டுப்போடு வதற்காக 20 ரூபாய் டோக்கன் வாங்கியவர்கள் நாங்கள்’ என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்கள். வாக்களிக்கப் பணம் வாங்குவது கிரிமினல் குற்றம். இவர்களையெல்லாம் வளைத்துப் பிடித்து விசாரித்தால், 20 ரூபாய் டோக்கன் பற்றிய உண்மை வெளிவந்துவிடும். பணத்தை விநியோகித்தது  யார் என்பதும் தெரிந்துவிடும். ஆனால், அரசாங்கமும் சரி, தேர்தல் ஆணையமும் சரி இதைச் செய்யவே இல்லையே.

@ஆர்.கே.எஸ் மகேஷ், சென்னை.
த.மா.கா-வுக்கு சைக்கிள் சின்னத்துக்குப் பதில் ஆட்டோ சின்னம்... நல்ல முன்னேற்றம்தானே?

ஓ.. இருசக்கர வாகனத்திலிருந்து மூன்று சக்கர வாகனமா! ஆக, அடுத்த தேர்தலில், லாரியேதான்!

@பாஸ்கர் கரூர். மி.
இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், ‘நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’ என்று பிரசாரம் செய்தால் சட்டப்படி குற்றமாகுமா?


எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றிருப்பவர்கள், குற்றப்பத்திரிகைகளில் இடம்பெற்றிருப்பவர்களுக் கெல்லாம்கூட வாக்களிக்கச் சொல்லி, பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் எனப் பலரும் பிரசாரம் செய்கிறார்கள். அப்படியிருக்க, எந்தத் தப்பும் செய்யாத ‘நோட்டா’வுக்கு வாக்குக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. இதை யாராவது ‘குற்றம்’ என்று சொன்னால், அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றலாம், சட்டப்படி!

ஏனெனில், தேர்தல் கமிஷனே நோட்டாவுக்கு பிரசாரம் செய்கிறதே...!

கழுகார் பதில்கள்!

@ஞானப்பிரகாஷ், தொம்பக்குளம்.
‘தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி...’ உதயநிதி ஸ்டாலினுடையப் பிரசாரம் மக்களிடம் வரவேற்பைப் பெறுகிறதா?


அது தெரியவில்லை. ஆனால், ‘மாற்றம், முன்னேற்றம் அன்புமணி’ என்பதை நன்றாகவே ‘ரீமேக்’ செய்துள் ளனர். குபீர் சிரிப்பு வருகிறது!

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.
ஐந்து ஆண்டுகளாக ஆட்சியி லிருக்கும் பிரதமர் மோடியின் சாதனை/வேதனைகளைப் பட்டியலிடுங்களேன்?


சாதனைகளைச் சொன்னால் காவிச்சாயம் பூசுவீர்கள். வேதனைகளைச் சொன்னால் கதர்ச்சாயம் பூசுவீர்கள். ஆளைவிடுங்கள் சாமீ!

பொன்விழி, அன்னூர்.
இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் பற்றி?

கே.பாலசந்தருக்குப் பிறகு சமூகம் சார்ந்த இயல்பான நிகழ்வுகள் மற்றும் பாலியல் தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் திரைமொழியில் பேசுபவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். அந்த வகையில், தில்லாக இப்படியொரு முயற்சி செய்திருக்கும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கு ஒரு சல்யூட். யதார்த்தம் என்ற பெயரில், நேரடியான வசனங்கள் திரும்பத் திரும்ப வருவதைக் குறைத்திருக்கலாம். திருநங்கைகள் பற்றிய தவறான பார்வை சமூகத்தில் ஓரளவுக்குக் குறைய ஆரம்பித்திருக்கும்  சூழலில், அவர்கள் அப்படித் தான் என்பதுபோல ஒரு கருத்து மக்களின் மனதில் தொடர்ந்து நிலைக்கும் வகையில் கதை நகர்வதைத் தவிர்த்து, வேறு வகைகளில் சொல்லியிருக்கலாம்.

கழுகார் பதில்கள்!

@ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.
இந்தத் தேர்தலிலாவது நூறு சதவிகித வாக்குப்பதிவு சாத்தியமாகுமா?


விருதுநகரில் ஒரு ஓட்டு, சென்னை-வண்ணாரப்பேட்டையில் ஒரு ஓட்டு, சென்னை-ஆவடியில் ஒரு ஓட்டு, புதுச்சேரியில் ஒரு ஓட்டு என்று பல பேர் மூன்று, நான்கு இடங்களில்கூட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் சுமார் 25 சதவிகித அளவுக்குக்கூட இப்படி ‘டபுளிங்’ வாக்குகள் இருக்கக்கூடும் என்றே தெரிகிறது. தேர்தல் ஆணையம் இதையெல்லாம் களையெடுத்தாலே 95 சதவிகிதத்தைத் தாண்டிவிட முடியும். அது கிட்டத்தட்ட நூறுதான்!

‘பிரேக்’கிங் நியூஸ்: ஈரோடு மாநகராட்சியின் வாக்காளர் பட்டியலில் ஒரே நபர் 11 தடவை வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். பெயர், முகவரி, புகைப்படம் அனைத்தும் ஒன்றே. ஆனால், வாக்காளர் அடையாள எண்கள் மட்டும் வெவ்வேறாக இருக்கின்றன.

கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.
ஏழு கட்டத் தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி மே 19 வரை நடக்கிறது. முதற்கட்டத் தேர்தலுக்கானப் பிரசாரம் முடிவடையும் ஏப்ரல் 9 மாலையோடு கருத்துக்கணிப்பு வெளியிடக்கூடாது. அதேபோல அகில இந்திய அளவில் தேர்தல் பிரசாரத்தையும் நிறுத்துவதுதானே சரி?


இதுதான் நியாயம், தர்மம். ஆனால், ‘எங்களுக்கு எல்லா நியாயங்களும் தெரியும்... எல்லா தர்மங்களும் தெரியும்’ என்பதுபோல அல்லவா தேர்தல் ஆணையம்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஜே.ஜானி, சென்னை-69.
தலைவர்களின் நாக்குத் தடுமாறுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே?


நாக்குத் தடுமாறுவது புதிதல்ல. அது காலகால மாக இருப்பதுதான். முன்பெல்லாம் வரிவடிவம் மட்டுமே இருக்கும். எழுதுபவர்கள் அதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவார்கள். அடுத்து, தொலைக்காட்சி வந்தபோதும், அது ஒளிபரப்பாவதோடு, காணாமல் போய்விடும். தற்போது அனைத்துமே ஒளியொலி வடிவில் பதிவு செய்யப்படுவதோடு, ஒவ்வொரு மொபைல் போனிலும் ஒளியொலித்துக் கொண்டே இருக்கிறது, அவ்வளவுதான்!

கழுகார் பதில்கள்!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.
‘கூட்டணி விஷயத்தில், தருமராக ஓ.பி.எஸ், அர்ச்சுனனாக இ.பி.எஸ் இருக்கிறார்கள்’ என்று ஏ.சி.சண்முகம் புதுக்கணக்குப் போட்டிருக்கிறாரே?


இதையெல்லாம் அந்தத் தருமரும் அர்ச்சுனரும் கேட்டால், பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது!

என்.தெய்வசிகாமணி, செய்யாறு.
துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளதே?


நல்ல விஷயம். அதுவும் தேர்தல் நேரமாகப் பார்த்து நடத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. இப்படியெல்லாம் ரெய்டு அடிக்கும்போதுதான், வாக்காளருக்குப் பணப்பரிமாற்றம் செய்வதைத் தடுக்க முடியும். இதேபோல, அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் வீடுகள், தொழில்நிறுவனங் களிலும் ரெய்டுகள் நடக்கும் என்று நம்புவோம்.

பி.சி.ரகு, பள்ளிச்சேரி.
எதற்கு ஓட்டுப்போடுவது என்று தெரியாமல் ஒரே குழப்பத்தில் இருக்கிறேன். என்னதான் செய்வது?


‘நோட்டா’வை யோசியுங்கள். ‘நோட்டு’க்கு வேண்டவே வேண்டாம்.

எஸ்.பிரேமானந்தம், காஞ்சிபுரம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட பணம் படைத்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதே?


மக்கள் ‘நிதி’ மய்யம்!

எம்.செல்லையா, ஏழாயிரம்பண்ணை.
‘நாங்கள் கூட்டணியில் இருப்பது, 1000 யானைகளின் பலத்துக்குச் சமம்’ என்கிறாரே வைகோ?


கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணியில் இருந்தபோது 1000 எறும்புகளுக்குச் சமமாக இருந்தார்களோ?

நா.மோகன்ராஜ், நல்லூர்பாளையம்.
‘கூடா நட்பு, கேடாய் முடியுமா?’


ஆம். கூடியிருந்து கொண்டாடும்போதும், அத்தனையையும் அனுபவிக்கும்போதும் இதையெல்லாம் யோசித்து விலகவில்லையே!

சு.சுப்பிரமணியம், சேலம்.
பீகார் மாநிலத்தில், 38 தொகுதிகள்தான். அங்கே ஏழு கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. ஆனால், 39 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஒரேகட்டமாக நடத்துகிறார்கள். இதில் ஏதாவது உள்குத்து இருக்குமோ?

‘வெளிக் குத்து’!

எஸ்.சிவகுமார், திருச்சி.
எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களுக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கிறது?


முன்பெல்லாம் தேர்தல் அறிக்கையை அச்சிட்டுக் கட்டுக்கட்டாகக் கொடுப்பார்கள். மக்களுக்கும் பழைய பேப்பர் கடைக்காரர்களுக்கும் பலன் இருந்தது. தற்போதுதான் காகிதத்தில் அச்சிடுவதை வெகுவாகக் குறைத்துவிட்டார்களே! வாட்ஸப்பில் அல்லவா அனுப்புகிறார்கள்.

கே.எஸ்.வேலு, கோவை.
‘கலைஞர் தி.மு.க’ எப்பொழுது உதயமாகும்?


நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருங்கள்!

படங்கள்: தி.குமரகுருபரன், ச.வெங்கடேசன்

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism