Published:Updated:

பத்மாவின் (நிஜ)கதை!

பத்மாவின் (நிஜ)கதை!

பத்மாவின் (நிஜ)கதை!
பத்மாவின் (நிஜ)கதை!
பத்மாவின் (நிஜ)கதை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ங்கில இலக்கியம் பி.ஏ., எம்.பி.ஏ., இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி என அடுத்தடுத்து மூளைக்கு முனைப்புக் காட்டி படித்து முடித்தேன். அதன்பின்? எல்லா இளைய இதயங்களையும் துளைக்கும் கேள்வி என்னையும் துளைத்தது. ஆளுக்கு ஒரு வழி சொன்னார்கள்.

''ஹேண்ட் பேக்குடன் காரிலிருந்து இறங்கி,காலை 10 முதல் மாலை 5 வரை 'அலுவலக தேவதை'யாகஅவதாரம் எடுத்துடு பத்மா...'' என்றனர் சிலர்! வெளிநாட்டுக்குப் பறக்க வழி கூறினர் சிலர். ''கோடை லீவுக்கு கும்பகோணத்தை

பத்மாவின் (நிஜ)கதை!

எட்டிப் பார்த்து, மலரும் நினைவுகளில்மூழ்கும் சுகமே தனிதான்!'' என அதற்கு விளக்கமும் கொடுத்தனர். அதையும் விட்டால்... 'அரசுத் துறையில் முக்கிய அதிகாரி யாகப் பணியாற்றும் உன் தந்தைக்குப் பெருமை சேர்ப்பது போல், நல்ல அந்தஸ்தான இடத்தில் மாப்பிள்ளை தேடிக்கொள்!' என்ற அறிவுரையும் காதோரம் வந்து விழுந்தது.

அப்போதுதான் எனக்கு அறிமுகமானான், அந்த புது நண்பன். அடுத்தடுத்த சில சந்திப்புகளிலேயே நட்பைக் காதலாக மாற்றி, என் மனதுக்குள் ஊடுருவ விட்டான். இப்போது இருக்கிற தெளிவோ... தைரியமோ எனக்கு அப்போது கிடையாது! அவனுடைய மென் மையான பேச்சும், வாஞ்சையான பாசமும் என்னை ஒரேயடியாக அவனுக்குள் வீழ்த்திப் போட்டது. ஆனாலும், அதற்காக அவனிடத்தில் என்னையே முழுமையாக ஒப்படைக்கிற அளவுக்கு நான் உடனே துணியவில்லை. சின்னச் சின்ன முத்தங்கள்... அன்புப் பரிசுகள்... மெல்லிய ஸ்பரிஷங்கள்...

என நாகரிகமாகத்தான் நகர்ந்தது எங்கள் காதல். கைக்குள்ளேயே பொத்திக் காத்துக் கொள்ளக்கூடிய வருங்கால வாழ்க்கைக் கனவு, என் அத்தனை திசைகளிலும் வசந்தத்தின் வைபோகமாக விரிந்தது!

ஆனால், அதெல்லாம் எத்தனை நாளைக்கு என்கி றீர்கள்? வெண்ணெய் திரண்டு

வரும் நேரத்தில் தாழிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டது போல என் கனவுகள் சுக்குநூறாயின. பிய்த்து எறியப்பட்ட குருவிக் கூடு போல, என் மொத்தக் கனவுகளும் நார்நாராயின.

என்னைப் பாசத்தால் குளிப்பாட்டிப் பழகிய அந்தக் காதலன், ஏற்கெனவே ஒருத்தியை மணந்தவன். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறது. கள்ளமில்லாமல் பழகிய என் கண்களுக்கு இந்த மோசடி புரியவில்லை. மோசடியான ஒரு ஆணால் எப்படி எல்லாம் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, பெண்ணை ஏமாற்ற முடியும் என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது. ஏமாற்றத்தில் துடித்துப் போன நான், மொத்தமாக முடங்கியும் போனேன். ஆனால் என் தந்தை தலைகோதி எனக்கு தைரியமூட்டினார். 'நீ நல்லா படிக்கிறவ... ஐ.ஏ.எஸ். படி' எனச் சொல்லி தட்டிக் கொடுத்தார். வடக்கத்திய மாநிலங்களில் இருக்கும் அப்பாவின் ஐ.ஏ.எஸ். நண்பர்களும் எனக்கு அட்வைஸ் பண்ண, நான் கொஞ்சமாக மீண்டு வந்தேன். ஐ.ஏ.எஸ். பிலிமினரி எக்ஸாம் எழுதி பாஸ் செய்தேன். ஆனாலும், அடுத்த தேர்வு எனக்கு பாதகமாகி விட்டது.

மறுபடியும் மனதை சோகம் சூழ்ந்து விடக் கூடாது என்பதற்காக தற்காலிகமாக பீ.பி.ஓ. துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். எங்கள் குடும்பத்தில் வசதிக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை. அடையாறு, வேளச்சேரி ஏரியாக்களில் எங்களுக்கு சொந்தமான பெரிய பங்களாக்களே இருக்கின்றன. இருந்தாலும், பி.பி.ஓ வேலையில் நான் வாங்கிய பதினெட்டாயிரம் சம்பளம் என்னை மனதளவில் மலர வைத்தது. அங்கே வேலை பார்த்த போது எனக்கு சில மாடலிங் வாய்ப்புகளும் வந்தது. ஒரு ஹாபியாக நினைத்துதான் மாடலிங் செய்தேன். நான் நடித்த விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, சிலர் சினிமாவில் நடிக்கக் கேட்டார்கள். ஆனாலும், சினிமா பக்கம் போக எனக்கு நிறைய தயக்கம்!

'ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும்' என்பது சினிமா உலகுக் காகவே எழுதப்பட்ட நியதி போலும்! வசதியான குடும்பத்தில் வாழ்ந் ததால், எதையும் இழந்து, சினிமாவில் பிரகாசிக்க நான் விரும்பவில்லை. ஆனாலும், 'வீராசாமி' படத் துக்காக விஜய டி.ராஜேந்தர் எனக்கு போன் செய்து 'படையப்பா பட நீலாம்பரி போல், என் படத்தில் ராணியாக நடிக்க முடியுமா?' எனக் கேட்டார். அவருடைய கைராசி சினிமாவில் நுழையத் துடிப் பவர்களுக்கு பெரிய வரம்! அதனால் என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதில் என் குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், 'மகளோட மனசு சந்தோஷமா இருந்தா சரி!' என நினைத்து அமைதியானார்கள்.

'வீராசாமி'யில் நடித்துக் கொண்டிருந்தபோதே 'பத்துக்குப் பத்து', 'உனது விழியினிலே' உள்ளிட்ட பல படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. சினி மாவில் ஜெயித்து விடலாம் என்கிற நம்பிக்கை என் மனதில் மலையாக உருவாகிக் கொண்டிருந்த நேரம் அது... ஆனால் எனக்குத்தான், ஒரு படி ஏறினால் நூறு படிகள் சறுக்கி விழுகிற பரமபத விதியாயிற்றே... 'வீராசாமி' படத்தின் இறுதிக்கட்ட ஷ¨ட்டிங்கில் நான் பிஸியாக இருந்தபோது, மறுபடியும் பழைய நண்பன் என்னிடத்தில் வெள்ளைக் கொடி காட்டி பழக வந்தான். அவனுடைய துரோகத்தை அவனே ஏற்றுக் கொண்டவனாய் நைச்சியமாகப் பேசினான். நட்பு ரீதியாக மன்னிக்கச் சொல்லி கெஞ்சினான். ஆனால், அவனுடைய வார்த்தைகளை நம்ப நான் தயாரில்லை. 'நீ என்னை ஏமாற்றியது போதும்... இனி உன்னை மட்டுமல்ல, வேறு எந்த ஆண் மகனையும் நம்புகிற நிலையில் நான் இல்லை. தயவுபண்ணி நீ உன் குடும்பத்தோடு நல்லா இரு. என்னைய விட்ரு!' என பட்டென்று சொல்லி விட்டேன். ஆனாலும், தன்னுடைய வசதி வாய்ப்புகளையும் சொத்து மதிப்புகளையும் பட்டியல் போட்டு ஒப்பித்த அவன், 'உன்னையப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது. தயவுபண்ணி என்னோட சின்ஸியரான லவ்வைப் புரிஞ்சுக்க' எனக் கெஞ்சினான்.

அடுத்தடுத்து அவன் சொன்ன வார்த்தைகள் ஒரு விஷயத்தை மட்டும் எனக்கு தெளிவாகப் புரிய வைத்தது. அதாவது சொத்துசுகங்கள் மிதமிஞ்சி இருக்கும் அவன், வாழ்நாள் முழுக்க என்னை 'வைத்து'க் கொள்ள விரும்பி இருக்கிறான். அதற்காகத்தான் இத்தனை நாடகங்களையும் அரங்கேற்றி இருக்கிறான். சினிமா நடிகை என்றாலே, பணத்துக்கும் பகட்டுக்கும் மயங்கி விடுவார்கள் என்பது பணக்காரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அதற்கு நானும் விதி விலக்கல்ல என்பதுதானே அவனுடைய எண்ணமாக இருந்திருக்க முடியும்?

'உனக்குத் தேவை பணம்தானே... அதனை நான் தருகிறேன். நீ படத்தில் நடிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் எனக்குத் துணையாக இரு. அது போதும்' என அவன் சொன்னபோது, நான் அடைந்த அவமானத்துக்கு அளவே இல்லை. இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் சூடு, சொரணை, மானம், வெட்கம் என அனைத்தையும் ஒருசேர உலுக்கும் விதத்தில் ஆயிரம் கேள்விகளைக் கேட்டேன். கண்களில் ரத்தம் கொப்பளிக்காத குறையாக நடுங்கிப் போய் நின்றான் அவன்.

ஆனால், அதற்காக என்னை அவன் இப்படிப் பழி வாங்குவான் என எந்த சொப்பனமும் வந்து என்னை எச்சரிக்கவில்லை..!

-