Published:Updated:

இவர்தான் உங்க ஹீரோ!

இவர்தான் உங்க ஹீரோ!

இவர்தான் உங்க ஹீரோ!
இவர்தான் உங்க ஹீரோ!

யாரால் யாருக்குப் புகழ் என்று ரொம்பநாள் வரை பட்டிமன்றம் நடந்தது இந்த ஜோடி பற்றி. அப்படியரு அந்நியோன்னிய தம்பதியாக வாழ்பவர்கள் இவர்கள். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் காலப்போக்கில் தனித்து வளர்ந்து... ஹீரோ ஆனார் நம்ம இன்ஷியல் நாயகன். ஆரம்பத்தில் பெல் டைரக்டரிடம் குருகுலம் வாசம் செய்தார். அப்போதே தன் ஜொள்ளு, லொள்ளு வேலைகளை தில்லாகவே ஆரம்பித்துவிட்டார். தான் வேலை பார்த்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த கிறக்கப் பார்வை பார்க்கும் ஒரு தினுசான கவர்ச்சி நடிகையின் மேல் டைரக்டருக்கு மோகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இவர்தான் உங்க ஹீரோ!

அதை நேரடியாக நடிகைக்குத் தெரிவிக்காமல் நம்ம இன்ஷியல் மூலம்தான் தூதுவிடுவார். அந்தத் தூதின் மூலமாகவே நடிகையைத் தானும் சேர்த்து வளைத்து வரலாறு படைத்தவர் நம்ம இன்ஷியல்.

முதலில் உறவுக்குக் கைகொ டுக்கும் படத்தை இயக்கினார். அதில் நடிப்பரசி சீனியரை அறிமுகமாக்கினார். படத்தின் ஷூட்டிங் நடந்த இடத்துக்குப் பக்கமாகவே

பெரிய்ய இடத்து வாரிசு ஒருவரின் பட ஷூட்டிங்கும் நடந்தது. அப்போது சில காட்சிகளை நேருக்கு நேராகக் கண்டவர்தான் நம்ம ஹீரோ. திடீரென்று வாரிசு நடிகர் அங்கு வந்தால்... லைட்ஸ், கேமரா இல்லாமல் நடிகை காட்டும் அடக்கமான பெர்ஃபாமென்ஸை கேட்கவே வேண்டாம். வாரிசு நடிகர் ஏரியாவைவிட்டு அகன்ற அடுத்த கணமே அதே படத்தில் நடித்த வெற்றிப்பெருமாள் நடிகரின் அறைக்குள் புகுந்து கொண்டு டமால் என்று அறைக் கதவை சாத்திக் கொண்டார் நடிப்பரசி! கேமரா படம் பிடிக்காத இந்த காட்சிகளை எல்லாம் அதிர்ச்சியாக பார்த்து வெறித்துக் கொண்டு சிகரெட் புகைத்தபடி சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார் படத்தின் டைரக்டரான நம்ம ஹீரோ. ஆனால் அதிர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.

நடிகரின் இந்த நேர்மை சீனியர் நடிகைக்கு ரொம்பவே பிடித்துப் போயிற்று. இப்படிப்பட்ட சகிப்புத்தன்மை உள்ளவரைத்தான் நடிகை இதுகாறும் சல்லடை போட்டுத் தேடிவந்தார். இதற்காகவே நம்மாளிடம் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். வாரிசு நடிகரின் நெருக்கம் தெரிந்தும் நம்மாளு அம்மணியின் அன்பில் நெகிழ்ந்து போனார். படத்தின் பணிமுடிந்தும் இன்ஷியலுடன் நட்பை தொடர்ந்தார் நடிகை. ஒருகட்டத்தில் வாரிசுக்கும், நடிகைக்கும் முட்டிக் கொள்ள... வாரிசை பழிவாங்க நினைத்தபோது நடிகையின் மனசில் பளிச்சென்று மின்னலாகத் தோன்றினார் நம்மாளு.

அப்புறமென்ன? இன்ஷியலையே தன் இன்ஷியலாக போட்டுக் கொண்டுவிட்டார்!

சீரியஸான விஷயங்களைக் கண்டால் சீறும் நடிகரான இவர், காமெடி என்றால் குஷியாகி விடுவார். முழுநீள ஜாலி படம் எடுத்தபோது பேஸ்மென்ட் ஸ்டிராங் நடிகையை ஒரு உசத்து உசத்திவிட்டார். புதுமுகம் என்ப தால் நடிகர் இழுத்த இழுப்புக்கெல்லாம் புன்னகைபூத்த முகத்தோடு வளைந்து கொடுத்தார் பேஸ்மென்ட் ஸ்டிராங்! அதன்பின் உச்சத்துக்குப் போனபிறகுகூட நன்றி மறவாமல் நடிகருக்கு அவ்வப்போது கைம்மாறு செய்து வந்தார். அதற்கு பிரதிபலனாகத்தான் நடிகையின் மார்க்கெட் கிட்டத்தட்ட விழுந்த பிறகும், ஊர் புகழும் நடிகர் படத்தில் அம்மணியை நடிக்க வைத்ததாகச் சொல்வார்கள்.

நடிகைகள், டைரக்டரைவிட ஹீரோக்களிடம் காட்டும் நெருக்கம் நம்மாளை அவ்வப்போது உறுத்தும். அப்படித்தான் கிரானைட் இடுப்பு நடிகையும், சப்பை மூக்கு நடிகையும் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்தபோது அவர்களை மையமாக்கி கனவு கண்டார். கனவு கைகூடும் வாய்ப்பும் சூழ்நிலையும் வாய்க்கவில்லை. அந்தக் கனவை அப்படியே அடிமனசில் தேக்கி வைத்திருந்தவர், தக்க தருணத்துக்காக காத்திருந்தார். அந்த நடிகைகள் குடும்பஸ்திரீ ஆனபிறகும் தன் பெட்டாலியனுக்குள் பாடுபட்டு இணைத்தேவிட்டார்! நடித்த படம் ஜெயிக்கக் காரணம் ஹீரோவா காமெடியனா என்று பல சமயங்களில் மோதல் வந்ததுண்டு. இங்கும் வந்தது. ஆரம்பத்தில் காமெடியின் இடம்தேடிப் போய் மரியாதை செய்துவிட்டு வந்தார். நடிகரின் இந்தப் பண்பை காமெடி வேறொருவரிடம் புகழ்ந்து தள்ளினார். ஆனால், அது காரியக்கார மரியாதை என்பது சீக்கிரமே காமெடிக்குத் தெரிய வந்ததாம். அது எப்படியென்றால்... காமெடிக்கும் ஹீரோவுக்கும் பொதுவான நபர் ஒருத்தர் உண்டு. அவரோடு ஹீரோ பானம் பருகிக்கொண்டிருந்த சமயம்... காமெடி பற்றிப் பேச்சு வந்ததாம். நம்மாளு 'உற்சாகத்தில்' காமெடியைப் பற்றி தாறுமாறாகத் திட்டித்தீர்க்க... பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த நபரோ காமெடிக்கு செல்போன் போட்டு நடிகர் பேசுவதை லைவ்வாக போட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் இருவருமான காம்பினேஷன் கொஞ்ச நாளைக்கு இல்லாமலே இருந்தது. ஒருவழியாக குடும்ப நண்பர்கள் சிலர் கூடிப் பேசி இருவருக்கும் இடையில் சமாதானம் ஏற்படுத்த... நடுவில் குளிர்காய்ந்த ஒரு காமெடிக்கு கல்தாவானது!

அந்த சமயத்தில் இண்டஸ்ட்ரியில் எல்லாரும் வெளிப்படையாக முணுமுணுத்துக் கொண்ட கேள்வி இதுதான்.

''அவங்க அப்படி... இவரு இப்படி... அதென்னப்பா இல்வாழ்க்கை ரகசியம்?''

இந்த கேள்விக்கு இண்டஸ்ட்ரியிலேயே விளக்கமும் கிடைத்து வந்தது.

''பேப்பர்ல புரிந்துணர்வு ஒப்பந்தம்னு நாம படிக்கறதில்லையா? அதேபோலத்தான் கையெழுத்தாகாமலே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கு! 'உன்னை நான் கண்டுக்கலை. என்னை நீ கண்டுக்காதே' என்கிற ஆறெழுத்து மந்திரம்தான் அது!''

நல்லா போட்டாங்க ஒப்பந்தம், போங்க!

-நோட்டம் தொடரும்..