Published:Updated:

இருக்கிற வரைக்கும் சிரிப்போம்! - கவுண்டமணி

Actor Goundamani's Interview
News
Actor Goundamani's Interview
Vikatan

நிஜத்துலயும் மனுஷன் செம்ம ரகளையா பேசிருக்காரு..! :-)

ந்தியாவில் இன்று அதிகம் சம்பாதிக்கிற நடிகர் இவர்தான் என்று பேச்சு. இவருடைய கால்ஷீட் கிடைத்த பிறகுதான் படத்துக்குப் பூஜை! இவர் வந்து இறங்கும்போது, ஹீரோக்களுக்கு இணையாக 'செட்' சலசலத்து அடங்குகிறது. இளம் நடிகைகள் சிலரை இவரோடு இணைத்துக் கிசுகிசுக்கிறார்கள்!

ஜகஜகவென நைலக்ஸ் லுங்கி, ஒரு பட்டன் கூடப் போடாத சட்டையோடு வீட்டில் உட்கார்ந்திருந்தார்... கவுண்டமணி! லேசான தொந்தியைத் தாண்டி, மூன்று முழ நீளத்துக்கு ஒரு தங்கச் சங்கிலி; தங்க பிஸ்கட் கோத்துப் போட்டிருக்கிறார்! வயது 63 என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். அதன் ஒரே அடையாளம், முன் தலையின் வழுக்கை மட்டுமே!

"நடிக்க வந்தது எப்படி...?"

"நமக்குச் சொந்த ஊரு உடுமலைப்பேட்டை. சினிமாவுக்கும் நமக்கும் ரொம்ப லாங்கு! வீட்ல விவசாயம் பார்த்தாங்க. அவங்க யாரும் 'டாக்கீஸ்' பக்கம்கூடப் போனதில்லே. சின்ன வயசுல நடிக்கணும்னு வெறி எனக்கு! காமெடியா, வில்லனா, ஹீரோவா... அதெல்லாம் முடிவு பண்ணலே! நடிகனாயிடணும்; அதான் லட்சியம். 12 வயசுல நாடகக் கம்பெனியில சேர்ந்தேன். பாய்ஸ் கம்பெனியிலேர்ந்து ஜோதி நாடக சபா வரைக்கும் எல்லாத்துலயும் இருந்தேன்; எல்லா வேஷமும் போட்டேன். கூச்சம், பயமெல்லாம் போய், நம்மால முடியும்கிற தைரியம் வந்தது. அப்பதான் சினிமா சான்ஸும் வந்தது!"

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP