Published:Updated:

`மோடியால் மட்டுமே இது சாத்தியம்!' - ஆதரித்த அமலா பால்; எதிர்த்த சித்தார்த் #Kashmir

காஷ்மீர் விவகாரம் தேசிய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

Siddharth
Siddharth

இதையடுத்து, மோடி தலைமையிலான மத்திய அரசு, தற்போது காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாகத்தான் மத்திய அரசின் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என தற்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது . இது தொடர்பான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

அமலா பால்
அமலா பால்

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பல சினிமா பிரபலங்களும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கையை வரவேற்கும் விதமாக, ``மத்திய அரசின் இந்த முடிவு, உண்மையிலே ஆரோக்கியமான ஒன்று. இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கையை எடுப்பதற்கு மோடியால் மட்டுமே முடியும். நாடு சமாதானம் பெற வேண்டுகிறேன்'' எனத் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், நடிகை அமலா பால். இதைத் தொடர்ந்து ட்விட்டரில் போஸ்ட் பகிர்ந்த நடிகர் சித்தார்த், ``இந்த நாடானது அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒருவரின் தலைமையைக் கொண்டுள்ளது. இதெல்லாம் திசைதிருப்பும் வேலை. இதையெல்லாம் தெரிந்துகொண்டேதான் செய்கிறார்கள்'' என தன் தரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.