Published:Updated:

"ஆக்சன் ஹீரோவாக ஆசை!" - விஜய்

An Exclusive Interview's Vijay
பிரீமியம் ஸ்டோரி
An Exclusive Interview's Vijay

``இத்தனை நாள் ஜாலியா இருந்தேன்... இப்போ பயமாயிருக்கு!

"ஆக்சன் ஹீரோவாக ஆசை!" - விஜய்

``இத்தனை நாள் ஜாலியா இருந்தேன்... இப்போ பயமாயிருக்கு!

Published:Updated:
An Exclusive Interview's Vijay
பிரீமியம் ஸ்டோரி
An Exclusive Interview's Vijay

பால்கனியுடன் கூடிய அலங்காரமான ஹால்... வலதுபக்கம் அரைவட்டமடித்து மேலேறும் மாடிப்படிகள்... ‘சிகரம்’ படத்தில் எஸ்.பி.பி-யின் வீடாக வருமே, அது  - விஜய்யின் நிஜ வீடு!‘பூவே உனக்காக’ படத்தில் ஆரம்பித்து ‘லவ் டுடே’, ‘ஒன்ஸ்மோர்’, ‘நேருக்கு நேர்’... சமீபத்திய ‘காதலுக்கு மரியாதை’ என்று தொடர்ச்சியான ஐந்து ஹிட் படங்கள் விஜய்யை ஓரே தூக்காகத் தூக்கிவிட்டது! இனி... ரஜினி, கமல் மாதிரியே விஜய் படங்களையும் விநியோகஸ்தர்கள் மொத்தமாக ‘அவுட் ரைட்’ பர்சேஸுக்கே வாங்கிக்கொள்வதாக முடிவெடுத்திருக்கிறார்கள்!

ரிம்லெஸ் கண்ணாடி போட்டிருந்த விஜய் முகத்தில், ஒன்றரை மாதத்துக்குப் பின் ஒரு நாள் ஓய்வு கிடைத்த சந்தோஷம்....

An Exclusive Interview's Vijay
An Exclusive Interview's Vijay

“நான்பாட்டுக்கு டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை நடிச்சுக் கொடுத்துட்டு, எந்தப் பொறுப்பும் இல்லாமல் இத்தனை நாள் ஜாலியா இருந்தேன். திடுதிப்னு இப்போ புதுசா கழுத்தில் ஒரு மாலை போட்டு, ‘இது கழன்று கீழே விழாம விளையாடு‘ங்கிறாங்க. பயமாயிருக்கு! ‘ஐயோ... மாலை கழன்று விழாம அடுத்த ஸ்டெப் வைக்கணுமே... அதுக்கடுத்த ஸ்டெப்பும் வைக்கணுமே‘னு டென்ஷன் கலந்த பயமாயிருக்கு. சரியா பண்ணணும்கிற பொறுப்பு வந்திருக்கு. இதை எல்லாத்தையும் மீறிக் கழுத்தில் மாலை விழுந்த சந்தோஷம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது...”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வார்த்தைகளைத் தேடித் தேடி, படு அடக்கமாகப் பேசுகிறார்!“சாதாரணமாகவே நான் ரொம்பப் பேசமாட்டேன். கூச்சம் அதிகம். ‘என்ன தலைக்கனம் பாரு... வாய் திறந்து எதுவும் பேசமாட்டேங்கிறானே‘னு சிலர், என் காதுபடவேகூடத் தவறாகப் பேசியிருக்காங்க. நீங்களே சொல்லுங்க... சுபாவத்தை எப்படி மாத்திக்க முடியும்...?"விஜய், ப்ளஸ் ஒன் படிக்கும்போது அவரது சினிமா ஆசையால் வீட்டில் ஒரு பெரிய யுத்தமே நடத்திருக்கிறது!“என்னாங்க பண்றது...? அப்பாவுக்கு என்னை டாக்டராக்கிப் பார்க்கணும்கிற கனவு. நமக்கோ, படிப்பே ஏறமாட்டேன்னுடுச்சு! மனசெல்லாம் சினிமா, சினிமாதான்.

ஸ்கூல் போறப்போ, பாதி நாள் உதயம் தியேட்டர்லதான் ஃப்ரெண்ட்ஸோட உட்கார்ந்திருப்பேன். நல்ல படமோ, படுமோசமான படமோ, எல்லாத்தையுமே பார்த்துட்டு வந்து... ஏன், அந்தப் படம் ஜெயிக்கலேன்னு ஃப்ரெண்ட்ஸோட விவாதம் பண்ணிக்கிட்டிருப்பேன். ஒரு வகையில், அந்த அனுபவம் இன்னிக்கு நான் என் படத்துக்குக் கதை கேட்கிறப்போ உபயோகமா இருக்கு!”ஸ்கூல் வயசிலேயே சில படங்களில் சின்ன வயசு விஜயகாந்த்தாக நடித்தாலும் ‘நாளைய தீர்ப்பு’ படம்தான் விஜய் ஹீரோவாக அறிமுகமானது. ‘காதலுக்கு மரியாதை’யோடு பதினேழு படங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

An Exclusive Interview's Vijay
An Exclusive Interview's Vijay

ஆக்ஷன் ஹீரோவாக ஆரம்பித்த விஜய், கடைசியில் மென்மையான காதல் ஹீரோவாக சக்ஸஸ் ஆனது, அவரே எதிர்பார்க்காத ஆச்சரியம்!“காதல் படங்களுக்கு இது ஒரு பீரியட்...! அதனாலதான் இப்படிப்பட்ட கிளாஸிக்கல் படங்கள் சக்ஸஸ் ஆகுது. பட், என்னோட கனவெல்லாம் ஆக்ஷன் ஹீரோவாகிறதுதான்! இந்தியாவுல மட்டுமில்லே, இன்டர்நேஷனல் லெவல்லயே ஆக்ஷன் ஹீரோக்கள்தானே நிலைச்சு நிக்கறாங்க...” தெளிவாக இருக்கிறார்!“ஒவ்வொரு டைரக்டர்கிட்டேயும் ஒவ்வொரு விஷயத்தைக் கத்துக்கிட்டிருக்கேன். பாசில் சார் அடிக்கடி ஒரு விஷயம் சொல்வார்.... ‘ஆச்சரியமோ, துக்கமோ... அந்த எமோஷனை அப்படியே மனசுக்குள்ளே நடிச்சுப் பார்.... வெளியில நடிக்காதே... அதுவே முகத்தில் போதுமான எக்ஸ்பிரஷனைக் கொண்டுவந்துடும்‘பார். கண்ணை ‘ஆ’னு திறந்து ஆச்சரியப்படறதெல்லாம் அவருக்குச் சுத்தமா பிடிக்காது! என்னோடு வொர்க் பண்ணிய அத்தனை பேருமே, எனக்கு ஒருவிதத்தில் குருவா இருந்திருக்காங்க!”

சிக்கன், ஃபிஷ் என்று நான் - வெஜ்ஜை ஒரு வெட்டு வெட்டுவது, அப்பா - அம்மாவை உட்கார வைத்துவிட்டு அடுப்பங்கரை சென்று தோசை போடுவது, ‘ஹாய் ஓல்டு லேடி’ என்று ஆச்சி லில்லியோடு செல்லமாக ஃப்ரெண்ட்ஷிப் கொண்டாடுவது, நேரம் கிடைத்தால் சிம்பிளாகக் குனிந்து, நிமிர்ந்து சில ஃப்ளோர் எக்ஸர்சைஸ், கவிதைப் புத்தகங்கள், இன்டர்நெட்டில் உலக சினிமா செய்திகளை வரவழைத்துப் பார்ப்பது... விஜய்க்குப் பிடித்தமான விஷயங்கள்! காதல் பற்றி நாலைந்து கவர்ஸ்டோரி எழுதலாம். அவ்வளவு பேசுகிறார்.“‘பூவே உனக்காக’ ஹீரோ சொன்ன மாதிரி, காதல் ஒரு இனிமையான ஃபீலிங்தான். ஆனா, வாழ்க்கையில் ஒரே ஒரு தரம் பூக்குற பூன்னு எல்லாம் பொய் சொல்லமாட்டேன்.

பாலலோக் ஸ்கூல்ல படிக்கிற காலத்திலேயே ஒரு பொண்ணுமேல எனக்குத் தீவிரக் காதல் இருந்தது!

நான் அதிகமா பேசாத, கூச்ச சுபாவமா இருக்கிறதாலேயோ என்னவோ... படபடன்னு பேசி, துறுதுறுனு. வளைய வர்ற பெண்கள் என்னைச் சீக்கிரமாவே கவர்ந்துடுவாங்க. அவளும்கூட அந்த வகையில்தான் என்னைக் கவர்ந்தா. அப்புறம் காலேஜ் போனப்போ, வேற சூழல்... வேற குரூப்... அங்கேயும் அதே போல ஒரு துறுதுறுப்பான பொண்ணு என்னை டிஸ்டர்ப்பண்ண வந்து சேர்ந்தா. பட், இதெல்லாம் ஒரு ஆழமான ‘பேஸ்’ இல்லாத அந்த வயசு இனக்கவர்ச்சி! காதல் அப்படியில்லையே... காதல் பத்தி விளக்கம் சொல்லணும்னா, நான் படிச்ச ஒரு புதுக் கவிதையையே சொல்றேன். என்னை ரொம்ப பாதிச்ச கவிதை!

அண்ணாந்து இமை திறந்துவிழிகளின்மேல் வாங்குகிற மழைதான் காதல்....அதன் சுகம் கொடுமையானது!”

“லவ்ஸ் உண்டா...?” என்று கேட்டால் மட்டும், “அட என்னங்... நான் சின்னப் பையனுங்க. அதெல்லாம் இல்லீங்கோ...” என்று கோயமுத்தூர் பாஷையில் சிரித்துவிட்டு “மம்மீ” என்று அம்மாவை சப்போர்ட்டுக்குத் தேடுகிறார்!

- லோகநாயகி

படங்கள் - கே. ராஜசேகரன்

(25.01.1998 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism