Published:Updated:

``உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும்போது..." `ஜெய் பீம்' படத்துக்கு அன்புமணி கண்டனம்!

பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஜெய் பீம் திரைப்படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது ஜெய் பீம் திரைப்படம். எளிய மக்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை குறித்த நிஜமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. படத்துக்கு பல தரப்பலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணமிருந்தன. சமீபத்தில் திரைப்படத்தின் ஒரு காட்சியில் வன்னியர் சங்கம் குறித்த அடையாளம் ஒன்று இருந்தது, சர்ச்சையானபின் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஜெய் பீம் திரைப்படம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அன்புமணி அறிக்கை
அன்புமணி அறிக்கை
அன்புமணி அறிக்கை
அன்புமணி அறிக்கை
அன்புமணி அறிக்கை
அன்புமணி அறிக்கை
அன்புமணி அறிக்கை
அன்புமணி அறிக்கை

அந்த அறிக்கையில்,

"ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்கு திட்டமிட்டு இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும் இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இதே உணர்வும் மனநிலையும் மேல் உள்ள நிலையில் தங்களிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால்தான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுத வேண்டியிருக்கிறது. அடக்குமுறை யார் மீது கட்டவிழ்த்து பட்டாலும் அவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்" எனத் தொடங்கி, "படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை அளிக்கும் ரசிகர்கள்தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தை காட்டினால் அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக் கூடும். இவை எதுவுமே தேவையில்லை. கலைக்கும், உங்களின் படைப்பிற்கும் நீங்கள் நேர்மையானவராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் உங்களை நோக்கி மேலே எழுப்பப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். அதுதான் மக்களின் கோபத்தை தணிக்கும். மிக்க நன்றி" என முடிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு