Published:Updated:

``சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதம் செய்தால் பாம்புகளை எறிவோம்!" - பழங்குடியின மக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பழங்குடியின மக்கள் போராட்டம்!
பழங்குடியின மக்கள் போராட்டம்!

நடிகர் சூர்யாவிற்கும், படத்தை பார்த்து உடனடியாக குறைகளை களைய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி... - பழங்குடியின மக்கள்

பழங்குடியின மக்களின் கஷ்டத்தையும், அவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சித்தரவதை செய்யும் காவல்துறையினரின் செயலையும் பதிவு செய்த நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம், ஓடிடியில் வெளியாகி தமிழகம் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மற்றொரு பக்கம் இப்படத்தை பாமகவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். படத்தில் இடம்பெற்ற காலண்டர் காட்சிக்காக இயக்குனர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜெய்பீம் படத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழக நாடோடிகள் பழங்குடி கூட்டமைப்பை சேர்ந்த மக்கள்,எலி, பாம்புகளை தூக்கிக்கொண்டும், வாத்தியங்களை இசைத்தபடியும் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்திருந்தனர்.

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் மகேஸ்வரி, "நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தின் மூலம் எங்கள் இன்னல்கள் குறித்து வெளியே பரவலாக தெரிந்தது. இந்த படத்தை பார்த்த தமிழக முதல்வர் உடனடியாக நாடோடி மக்களை தேடிச்சென்று குறைகளை அறிந்து நிவர்த்தி செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆணையிட்டார்.

அந்த அடிப்படையில் அதிகாரிகள் எங்கள் குறைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றி நிவர்த்தி செய்து வருகிறார்கள். ஜெய்பீம் படம் மூலம் எங்கள் பிரச்னைகளை சுட்டிக்காட்டிய நடிகர் சூர்யாவிற்கும், படத்தை பார்த்து உடனடியாக குறைகளை களைய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி. நடிகர் சூர்யாவுக்கு எதிராக சில அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரை மிரட்டுகின்றனர்.

நடிகர் சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதம் செய்ய யாரவது நினைத்தால் அவர்கள் மீது பாம்புகளை எறிவோம்." என்றார்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் அருகே பதாதைகளை ஏந்தி சூர்யாவுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து முழக்கமிட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு