Published:Updated:

"த்ரிஷா காங்கிரஸுக்கு வந்தால் வரவேற்போம். ஆனால், அந்தக் கொள்கையை ஏற்பாரா?" - ஈ.வி.கே.எஸ் பேட்டி

த்ரிஷா

"த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் கட்சிக்கு எந்தப் பலமும் இல்லை. தாக்கமும் ஏற்படாது. அப்படிச் சேர்வதாக இருந்தால் கட்சியின் அந்தக் கொள்கையை அவர் ஏற்பாரா? காங்கிரஸில் நடிகர் சிவாஜி சேர்ந்தபோது சரியான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான்" - ஈவிகேஎஸ் பேட்டி

"த்ரிஷா காங்கிரஸுக்கு வந்தால் வரவேற்போம். ஆனால், அந்தக் கொள்கையை ஏற்பாரா?" - ஈ.வி.கே.எஸ் பேட்டி

"த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் கட்சிக்கு எந்தப் பலமும் இல்லை. தாக்கமும் ஏற்படாது. அப்படிச் சேர்வதாக இருந்தால் கட்சியின் அந்தக் கொள்கையை அவர் ஏற்பாரா? காங்கிரஸில் நடிகர் சிவாஜி சேர்ந்தபோது சரியான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான்" - ஈவிகேஎஸ் பேட்டி

Published:Updated:
த்ரிஷா

"அழகே பொறாமைப்படும் பேரழகி" என்று 'பாகுபலி' தேவசேனாவைப் பார்த்து வியந்ததுபோல, 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்திருக்கும் த்ரிஷாவின் புகைப்படங்களைப் பார்த்து புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், நடிகை த்ரிஷா காங்கிரஸில் சேரப்போவதாக தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே, தனுஷுடன் 'கொடி' படத்தில் அரசியல்வாதியாக போட்டா போட்டிக்கொண்டு நடித்த த்ரிஷா உண்மையிலேயே அரசியல் களத்தில் என்ட்ரி ஆகிறாரா அல்லது வெறும் வதந்தியா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் தொடர்புகொண்டு பேசினோம்.

த்ரிஷா
த்ரிஷா
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"யார் யாரோ த்ரிஷா காங்கிரஸில் இணையப்போகிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியில் அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. இந்தத் தகவல் உண்மையா என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், த்ரிஷா வருவதால் காங்கிரஸ் கட்சிக்கு பயனோ பலமோ உண்டாகும் என்று நான் நினைக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் பெரிய தாக்கமும் ஏற்படாது. காங்கிரஸ் மதசார்பற்றக் கட்சி. அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கட்சி. அதனால், மதசார்பின்மையையும் காங்கிரஸ் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு த்ரிஷா வந்தால் வரவேற்போம். இக்கொள்கைகளுடன் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்".

த்ரிஷா
த்ரிஷா

ஆனால், கட்சியில் இணையும் நடிகர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை காங்கிரஸ் கொடுப்பதில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே?

"காங்கிரஸ் கட்சிக்கும் திரையுலகத்தினருக்கும் பெரிய தொடர்புண்டு. அந்தக் காலத்திலிருந்தே கே.பி சுந்தராம்பாள், கண்ணதாசன், சிவாஜி கணேசன் போன்றவர்கள் காங்கிரஸில் இருந்துள்ளார்கள். எம்.ஆர்.ராதா போன்றவர்கள் காங்கிரஸை குறிப்பாக, காமராஜரை ஆதரித்திருந்திருக்கிறார்கள். காங்கிரஸில் நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை என்ற விமர்சனம் சரியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், காங்கிரஸில் சிவாஜி சேர்ந்தபோது சரியான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். சிவாஜி கட்சியின் தலைவராக வரவேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். அதனை காங்கிரஸ் செய்யவில்லை. சினிமாத்துறையைச் சேர்ந்த யார் கட்சியில் இணைந்தாலும் கட்சிக்கு பலம் என்பது அவர்கள் சேர்வதால் இல்லை. கட்சிக்காக செயலாற்றுவதைப் பொறுத்துதான் அமையும்".