Published:Updated:

டியர் காம்ரேட்ஸ்! | உலக சினிமா #MyVikatan

Dear Comrades!

கஞ்சிக்கு வழியில்லாமல் கும்பிக் கொதித்து கிடக்கிறோம்.இங்கே ஒரு கூட்டம் உயர் மதுவைக் குடித்து கொழுத்து கிடக்கிறது.

டியர் காம்ரேட்ஸ்! | உலக சினிமா #MyVikatan

கஞ்சிக்கு வழியில்லாமல் கும்பிக் கொதித்து கிடக்கிறோம்.இங்கே ஒரு கூட்டம் உயர் மதுவைக் குடித்து கொழுத்து கிடக்கிறது.

Published:Updated:
Dear Comrades!

1962 ஜூலை 2 அன்று 'சோவியத் ரஷ்யா' நாட்டில் நொவோசெர்கெஸ்க் என்ற பகுதியில் நடந்த படுகொலை தாக்குதலை விவரிக்கும் திரைப்படம் ' டியர் காம்ரேட்ஸ்!'. இயக்குநர் ஆந்த்ரே கான்கெலாவ்ஸ்கி உருவாக்கத்தில் மிகச்சிறப்பாக படுகொலைத்தாக்குதலை ஆய்வு செய்திருக்கிறது 'டியர் காம்ரேட்ஸ்!'.

அதிபர் நிகிதா க்ருஷோவ் ஆட்சி காலத்தில் சோவியத் ரஷ்யாவின் அவல நிலை திரைப்படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் வெளிப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்டாலின் ஆட்சியில் நிலவிய பொற்காலத்தையும் எடுத்துரைக்கிறது.

ஸ்டாலின் ஆட்சி பற்றிய அமெரிக்க ஏகாதிபத்திய ஊடக விமர்சனங்களுக்கு ஆகச்சிறந்த எதிர்வினையாற்றி இருக்கிறார் இயக்குநர் ஆந்த்ரே கான்கெலாவ்ஸ்கி. நொவோசெர்கெஸ்க் மின்சார லோகோமொட்டிவ் தொழிற்சாலை பணியாட்கள் முறைப்படி அறிவித்து வேலைநிறுத்தம் செய்கிறார்கள். வேலைநிறுத்தத்தின் முக்கிய அம்சம் 'ஊதியக்குறைப்பு' மற்றும் 'அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை ஏற்றம்'.

1962 ஜூலை 2 அன்று அமைதியாகத் தொடங்கிய பேரணி இறுதிக்கட்டத்தில் வட்டார கட்சி அலுவலகத்தை ஆக்ரோஷமாக முற்றுகை இடுகிறது. வட்டார கட்சி அலுவலகத்தில் முக்கிய நபர்கள் முதலாளித்துவ மனநிலையில் வேலைநிறுத்தத்தை அணுகுகிறார்கள். உயர்ரக மது வகைகளை குடித்து கூத்தடிக்கிறார்கள்.

அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் லூட்மியுலா என்ற பெண்மணி மேற்கண்ட களியாட்டங்களில் கலந்து கொள்ளாமல் மனம் வெதும்புகிறார். வட்டார கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பேரணியினர் பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததால் கொதிப்படைகின்றனர். அதில் சிலர் அத்து மீறி அலுவலத்திற்குள் நுழைகிறார்கள். உடனே குடித்து கும்மாளமிட்டவர்கள் பாதுகாப்பாக பதுங்குகின்றனர்.

'கஞ்சிக்கு வழியில்லாமல் கும்பிக் கொதித்து கிடக்கிறோம்.இங்கே ஒரு கூட்டம் உயர் மதுவைக் குடித்து கொழுத்து கிடக்கிறது' என சிலர் வன்முறையில் இறங்குகிறார்கள். இதைச்சாக்காக வைத்து ராணுவமும்,கேஜிபி உளவுப்படையும் இணைந்து வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு' போல் குறி பார்த்து சுடுகிறான் ஒரு கேஜிபி. சொந்த மக்களையே சுட்டுக் கொல்லும் ராணுவத்தையும் கேஜிபியையும் கண்டு அதிர்கிறார் லூட்மியுலா. 26 பேர் படுகொலை செய்யப்பட்டு 87 பேர் படுகாயம் அடைகிறார்கள். பேரணியில் வந்த பொதுமக்களில் தனது 18 வயது மகளும் இருந்ததால் அவளைத் தேடி அலைகிறார் லூட்மியூலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லூட்மியுலா மகளைத் தேடி அலையும் பயணம் திரைக்கதையில் பெரும் பகுதியாக இடம் பெற்றுள்ளது. வாய்த்த இடத்தில் குருஷோவ் ஆட்சி காலத்து அவலங்களை வசை பாடி, ஸ்டாலின் ஆட்சி பெருமைகளை துதி பாடி இருக்கிறார் இயக்குநர் ஆந்த்ரே கான்கெலாவ்ஸ்கி. 4:3 கருப்பு வெள்ளை சட்டகங்கள் மூலம் பார்வையாளர்களை கதையின் களத்திற்கும் காலத்திற்கும் வெகு எளிதாக கடத்தி விடுகிறார்.

'டியர் காம்ரேட்' சோவியத் வரலாற்றின் ஒரு துளி.

பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் ரசித்த திரைப்படம்.

Director  Andrei Konchalovsky
Director Andrei Konchalovsky

Directed by Andrei Konchalovsky

Screenplay by Andrei Konchalovsky, Elena Kiseleva

Produced by Andrei Konchalovsky, Olesya Gidrat, Alisher Usmanov

Starring Julia Vysotskaya, Sergei Erlish, Yuliya Burova, Vladislav Komarov, Andrey Gusev

Cinematography Andrey Naydenov

Edited by Sergei Taraskin, Karolina Maciejewska

Production company Andrei Konchalovsky Studios

Release date 7 September 2020 (Venice)

Running time 121 minutes

Country Russia

Language Russian

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்களுடைய படைப்புகளை my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

உங்கள் படைப்புகள் எப்படி இருக்க வேண்டும் : இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism