Published:Updated:

“காதல் - என் வாழ்நாளில் போராடியும் கையில் சிக்காத ஒன்று!” - பாரதிராஜா

Director Bharathiraja answers common people's questions
பிரீமியம் ஸ்டோரி
Director Bharathiraja answers common people's questions

“அல்லிநகரம் சின்னச்சாமி உலகத்தைத் தெரியாதவன் பாரதிராஜா உலகுக்குத் தெரிந்தவன்!”

“காதல் - என் வாழ்நாளில் போராடியும் கையில் சிக்காத ஒன்று!” - பாரதிராஜா

“அல்லிநகரம் சின்னச்சாமி உலகத்தைத் தெரியாதவன் பாரதிராஜா உலகுக்குத் தெரிந்தவன்!”

Published:Updated:
Director Bharathiraja answers common people's questions
பிரீமியம் ஸ்டோரி
Director Bharathiraja answers common people's questions

நா. ராணி, திருச்சி-19. 

தங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ராதிகா, ராதா, ரேவதி இவர்களின் நடிப்புத் திறனை வரிசைப்படுத்துங்கள்.... 

* 1. ராதிகா 2. ராதா 3. ரேவதி என் அறிமுகங்களான மூவருமே முன்னணிக் கதாநாயகிகள்தான். ராதிகாவும் ராதாவும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் ரேவதி நடுவில் புகுந்துகொள்ள இடமுண்டு.

Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

எம். பரந்தாமன், ஆம்பூர்.

சூழ்திலைகளின் கண்டிப்பால் பிரிய முடியாமல்தானே வைரமுத்துவைப் பிரித்தீர்கள்.?

* எங்கள் அகராதியிலேயே இடம்பெற முடியாத சொல் இந்தப் பிரிவு. என் இரு கரங்களில் ஒன்று நேசக்கரம்; இன்னொன்று பாசக்கரம். கரங்கள் வலது இடதாக இருக்குமே தவிர, பிரிவு என்ற சொல்லுக்கு இடமே இல்லை.

ராஜசெல்வன், நாகை.

உங்களது இன்றைய வளர்ச்சியில் மறக்கவே முடியாத நபர் என்று யாரைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்...? (ஒருவர் மட்டும் ப்ளீஸ்!)

* என் வளர்ச்சியில் எத்தனையோ பேர் பங்கு கொண்டிருந்தாலும் ஒரே ஒரு மனிதனை மட்டும் மறக்க விரும்பவில்லை - மறக்க முடியாது. அந்த மனிதன் - சின்னச்சாமியாக இருந்து பாரதிராஜாவாக மாறியவன். இவன் வளர்ச்சிக்கு உதவிய விதத்தையும் கடந்துவந்த பாதையையும் நான் மறந்தால், இன்றைய நான் நானாக இருக்கமுடியாது.

கவி, அம்மையப்பன்.

மிக அழகாகச் சிரிக்சுத் தெரிந்த பெண், மிக ஆழமாக அழத் தெரிந்த பெண்.... இதில் யார் நடிப்புத்துறையில் பிரகாசிப்பார்?

* அழகாகச் சிரிக்கத் தெரிந்த மனத்துக்கு ஆழமாக அழவும் தெரிந்திருக்க வேண்டும். அழத் தெரிந்த மனத்துக்கு அழகாகச் சிரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இவையிரண்டு மட்டுமே பரிமாணம் அல்ல நடிப்புக்கு! இன்னும் எத்தனையோ நுணுக்கமான பாவங்கள், உணர்வுகள், அவற்றை வெளிப்படுத்தும் முறைகள் - இத்தனையும் இருந்தால்தான் நடிப்பில் பிரகாசிக்க முடியும் என்பதே உண்மை. ஆனால், தற்போதைய. திரையுலகில் மேற்கூறிய எந்தத் தகுதியும் இல்லாமலே சிலர் பிரகாசித்துக் கொண்டிருப்பதால் - நடிப்புத்துறை பிரகாசிப்பது சம்பந்தமான உங்கள் வினாவுக்கு நான் கேள்விக்குறியாகவே நிற்கிறேன்.

ஆர். ரமேஷ், கக்பம்.

'காதலுக்கு மதமில்லை' என்று திரையில் உணர்த்தும் நீங்கள், உங்கன் பிள்ளைகள் வேறு மதத்தாரை மணக்கச் சம்மதிப்பீரா?

* என் பிள்ளைகள் வேறு மதத்தாரை மணக்கச் சம்மதிக்க மாட்டேன். என்னை எப்படி என் தந்தை சுதந்திரமாக வளர்த்தாரோ அப்படித்தான் நான் என் பிள்ளைகளையும் வளர்க்கிறேன். கருத்துச் சுதந்திரம் உண்டு - அடிப்படைக் கட்டுப்பாடுகளுடன். இரு இதயங்கள் இணைய மதம் ஒரு தடையாக இருக்குமேயானால் உடைத்து வெளியேறுகிற உறுதி இரண்டு இதயங்களுக்கும் வேண்டும். அப்படி வெளியேறும்போது இணையவரும் எதிர் இதயமும் மதமில்லாமல்தானே வரவேண்டும். என் பிள்ளைகள் வேறு மதத்தாரை மணக்கச் சம்மதிக்க மாட்டேன். மதம் இல்லாமல் வரும் ‘மன’த்தால் மட்டுமே மணக்கச் சம்மதிப்பேன். காதல் என்பது விலையில்லாத விபசாரம் என்று சொல்பவர் கல்யாணத்தை விலைகொடுத்த விபசாரம் என்றும் சொல்லுவீர். நல்ல வார்த்தைகளை விபசாரம் என்ற வார்த்தை வரிகளுக்குள் இழுப்பதால் மட்டுமே அதன் புனிதம் கெட்டுவிடுவதில்லை.

Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

சாந்திப்ரியன், ஈரோடு-1.

'கடலோரக் கவிதைகள்' படத்தில் ஒரு காட்சி. சத்யராஜ் (சின்னப்பதசஸ்) உடல்நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருப்பார். அவரைச் சந்திக்க வந்த ரேகா (டீச்சர்) ஒரு வலம்புரிச் சங்கை அருகில் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்... அந்த வலம்புரிச் சங்கின் மெல்லிய சத்தம் கேட்டு சத்யராஜ் எழுந்துவிடுகிறார்(!) - இது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. ஆனால், Exaggeration ஆகத் தெரிகிறதே....

* Exaggeration - அதையே சில நயங்கள் என்றும் குறிப்பிடலாம். - இலக்கிய நயம் - கவிதை நயம் உரையாடல்களில் நயம் என்று கூறுவதுபோல் சினிமாவிலும் சில இடங்களில் நயங்களை ஒப்புக்கொள்ள வேண்டும். பார்ப்பதற்கு நன்றாக உள்ளது என்று ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா? அப்படி ஒப்புக்கொள்ள வைத்திருப்பதே அந்தச் சிந்தனைக்கான வெற்றிதான்! சின்னப்பதாஸ் பாடம் படிக்கிற காலத்தில் டீச்சருக்குக் குருதட்சணையாக, ஆழ்கடலில் மூழ்கி ஒரு வலம்புரிச் சங்கை எடுத்து வந்து கொடுக்கிறான். மூழ்கி எழுந்து ஓடிவந்த களைப்பில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அந்தச் சங்கைப் பற்றி அவளிடம் கூற. அதற்காக நீ ஏன் இப்படி மூச்சு வாங்கறே?" என்று அவள் கேட்கிறாள்.

"நான் விடுகிற மூச்சு இருக்கட்டும். இந்தச் சங்கு விடுகிற மூச்சைக் கேளுங்க" என்று அவன் கொடுக்க - அவள் அதை அவனுடைய இதயமாக நினைத்துக் காதில் வைத்துக் கேட்கிறாள்.

தன் பொக்கிஷமாக வைத்துக் கொள்கிறாள். இறுதி கட்டத்தில் - உடல்நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் சின்னப்பதாஸைச் சந்திக்க வந்த டீச்சர், படுக்கையருகே அவன் இதயமாக நினைத்து வாங்கி அதைத் தன் இதயத்தில் வைத்திருந்தாளே.... அந்த அன்பின் அடையாளமான வலம்புரிச் சங்கை அருகில் வைத்துச் செல்கிறாள். அந்தச் சங்கின் ஓசை - காதல் இதயத்தின் பெருமூச்சாகக் கிளம்பி நினைவற்றுக் கிடக்கும் அவன் செவிவழி பாய்ந்து இதயத்தை அடைந்து உணர்வுகளை விழிப்படைய வைக்கிறது என்பதுதான் அர்த்தம். அவள்மீது அவன் வைத்திருந்த அன்பு, அவள் அருகில் வந்து நின்றபோது இதமான வாசனையாக நாசியின் வழியே சென்று அவன் உணர்வுகளைச் சலனப்படுத்தியும் இருக்கலாம்!

“அல்லிநகரம் சின்னச்சாமி கனவுகளைச் சுமந்து சுகவாசியாக அலைந்தவன். பாரதிராஜா நிஜங்களைச் சுமந்து கொண்டு வேதனையுடன் அலைபவன்...."

Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

ஏ.எஸ். முத்து, த. அய்யன்கோட்டை.

அல்லி நகரம் சின்னச்சாமி - சென்னை பாரதிராஜா.... ஒப்பிடுங்களேன்.

* அல்லிநகரம் சின்னச்சாமி உலகத்தைத் தெரியாதவன். பாரதிராஜா உலகுக்குத் தெரிந்தவன். அல்லிநகரம் சின்னச்சாமி அகன்று விரிந்த ஆகாயத்தில் சுற்றித் திரிந்த பறவை. பாரதிராஜா பறக்க முடியாமல், சமூகக் கட்டுப்பாட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட ஜீவன். அல்லிநகரம் சின்னச்சாமி கனவுகளைச் சுமந்து சுகவாசியாக அலைந்தவன். பாரதிராஜா நிஜங்களைச் சுமந்து கொண்டு வேதனையுடன் அலைபவன். அல்லிநகரம் சின்னச்சாமி - வானமும் மலைகளும் மேகங்களும் நதிகளும் மரங்களும் - ஏன் மனிதர்களையும் சொந்தமாகக் கொண்டவன்.

பாரதிராஜாவுக்கு வானமும் மலைகளும் மேகங்களும் நதிகளும் மரங்களும் - ஏன் மனிதர்களும் தூரமாகிப் போய்விட்ட விஷயங்கள்.

பி.கே. மனோகர், பட்டுக்கோட்டை. 

தாங்கள் அறிமுகப்படுத்தும் புதுமுகங்களுக்கு ஊதியம் கொடுப்பதில்லை எனக் கூறுகிறார்கள். உண்மையா? 

* ஆமாம். வெறும் ஊதியம் அளிப்பதில்லை.  ஊக்கமும் சேர்த்து அளிக்கிறேன். 

கே. பார்த்தசாரதி, குன்னூார் 

ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் வளர்ச்சியைப் பற்றி..? 

* திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இன்றைய சினிமாவில் - வியாபாரச் சந்தைப் போட்டியில் வெற்றிக்கொடி நாட்டினாலும் அவர்களின் அடிப்படைச் சிந்தனையில் ஒரு சினிமா தர்மம் இருக்கத்தான் செய்யும். ‘அவள் அப்படித்தான்' படத்தை இயக்கிய ருத்ரய்யாவைப் போல் ஆகிவிடக் கூடாதே என்கிற பயமும் அவர்களுக்கு இருக்கிறது. திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்றாலே சினிமாவில் ஒரு பயம் குடிகொண்டிருந்தது.

உலகத்தின் தலைசிறந்த இயக்குநர்கள், ஆங்கிலப் படங்கள் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே பார்த்து - படித்து வெளியேறுகிற அவர்கள் மக்களுக்குப் புரியாத வகையில் படம் எடுத்து ‘விருது படம்’ என்று சொல்லிவிடுவார்கள் என்கிற பயம் இருந்தது. ஆனால், ‘எங்கள் சிந்தனை நவீன சினிமாவின் மீது இருந்தாலும், வியாபாரச் சந்தையிலும் போட்டியிட முடியும்' என்று நிரூபித்து அவர்களைப் பற்றிய பழைய முடக்கு வாதத்தை முறித்தெறிந்திருப்பதன் உதாரணம்தான் இன்றைய திரைப்படக் கல்லூரி இயக்குநர்களான ஆபாவாணன், அரவிந்தராஜ், உதயகுமார், பிரபாகரன், பி.ஆர். தேவராஜ் போன்றவர்கள். 

எஸ்.எச். ஷேக்தாவூத், திருச்சி-8. 

காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படமெடுக்கும் தாங்கள் இளமையில் காதல் பிரச்னையில் சிக்கியிருக்கிறீர்களா? கொஞ்சம் மனம்விட்டுத்தான் சொல்லுங்களேன்!

* காதலைப் பிரச்னை என்று கூறியது மட்டுமல்லாமல் அது ஏதோ பயங்கரமான ஒன்று சிக்கியிருக்கிறீர்களா என்றும் கேட்கிறீர். காதல் - என் வாழ்நாளில் போராடியும் கையில் சிக்காத ஒன்று! இன்னும் அது ஒரு கனவுப் பிரதேசமாகவே இருக்கிறது.

அந்தக் கனவுகளே காதலுக்குப் பல பரிமாணங்கள் கூறுகின்றன. நல்லவேளை... அது நிஜமாகி - காதலைப் பற்றி உண்மை தெரிந்தால் இந்தக் கேள்விக்கு நான் எப்படிப் பதில் சொல்லியிருப்பேனோ...!

ச. ஐயப்பன், சேத்தூர். 

வெள்ளை நிறத்தின்மேல் நீங்கள் மோகம் கொண்டதற்கு உங்கள் கடந்த கால வாழ்க்கையில் ஏதாவது பாதிப்பு உண்டா? 

* ஒரு காலத்தில் என் மனது வெள்ளை; என்னைச் சுற்றியிருந்த மக்களெல்லாம் வெள்ளை. நிகழ்கால வாழ்க்கையில அது கிட்டவில்லை. பழைய வாழ்க்கையின் பாதிப்பே இந்த வெள்ளை.... புரிகிறதா ஏன் இந்த சென்னை என்று? 

Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

கே.ஆர். பவானி, கும்பகோணம்.

அடுத்த பிறவியில் தாங்கள் எதுவாக அல்லது யாராகப் பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?

* என் தகப்பனுக்கும் தாய்க்கும் சின்னச்சாமியாகப் பிறந்து - பாரதிராஜாவாக வளர்ச்சி பெற்று வாழவே விரும்புகிறேன்.

ஜி.வி. வசந்தகுமார், கோயம்புத்தூர்:45,

டி.வி-யில் ஆங்கிலச் செய்தி (டெல்லி) வாசிப்பவர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?

* ஆங்கிலச் செய்தி வாசிப்பவர்.? தமிழில் செய்தி வாசிப்பவர்களில் என்னைக் கவர்ந்தவர் ஷோபனா ரவி என்று நான் சொல்லக்கூடிய வாய்ப்பை இழக்க வைத்து விட்டீர்களே... ஆங்கிலச் செய்தி வாசிப்பவர்களில் என்னைக் கவர்ந்தவர் ரின்னி கண்ணா...

சாந்திப்ரியன், ஈரோடு-1.

எதைப் பற்றி உங்களுக்குக் கவலையில்லை?

என் தொழில்ரீதியாக அல்லாமல் என்னைப் பற்றி வரும் விமரிசனங்களைப் பற்றி

ஜெ. முருகுசுந்தர், சுவாமிமலை,

"என் இனிய தமிழ் மக்களே..." என்கிற தாங்கள், தமிழ் தெரிந்த் நடிகர்களுக்கு கொடுக்காமல், (டப்பிங்கை நம்பி) வேற்று மொழியினருக்கு அதிக வசப்புத் தருவது ஏன்?

* நான் அறிமுகப்படுத்திய பாக்யராஜ் - பஞ்சாபி - கார்த்திக்-ஒரியா, பாண்டியன் - மராட்டி, சந்திரசேகர் - வங்காளி, "நிழல்கள் ரவி - ராஜஸ்தானி, ஜனகராஜ் மற்றும் கவுண்டமணி கூர்க் என்பதுதானே உங்கள் கருத்து?

'மதி ஜி. குணசேகரன், சென்னை-108.

‘நியூடெல்லி', 'ஒரு சி.பி.ஐ. டைரி குறிப்பு' ‘1927’ போன்ற மாறுபட்ட கதையம்சங்களைக் கொண்ட திரைப்படங்களால், மலையாளப் படவுலகம் இந்தியாவில் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழில் அதுபோன்ற வித்தியாசமான படங்கள் வெளிவராததற்கு தமிழ்ப்பட இயக்குநர்களிடம் கற்பனை வளம் குறைந்துவிட்டது என்ற என் கருத்துக்குத் தங்கள் பதிலென்ன?

* வளம் ஒன்றும் குறைந்துவிடவில்லை. "வீடு' "வேதம் புதிது’ போன்ற தரமான படங்களைத் தந்தது தமிழகம்தான். அவற்றை நீங்கள் வரவேற்றிருந்தால் நாங்களும் ‘டைரி’ எழுதியிருப்போம்.

Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

சி.கே.கே. கிருஷ்ணன், கரூர்-1

ஒரு நடிகனை இயக்குகிறபோது ஏற்படும் அதே உணர்ச்சி (அதாவது அதே மனப்பான்மை)தான் ஒரு நடிகையை இயக்கும்போதும் ஏற்படுமா?!

* என்னப்யா கேள்வி இது?! நடிகையை இயக்கும் மனப்பான்மையோடு ஒரு நடிகனை இயக்கினால் அந்த நடிகனுக்குப் பெண்மைத்தனம் வந்துவிடாதா..? அது போலவே, ஒரு நடிகனை இயக்கும் மனப்பான்மையோடு ஒரு நடிகையை இயக்கினால் அந்த நடிகைக்கு ஆண்மைத்தனம் வந்துவிடாதா?

கணபதி ஷங்கர், சேலம்-1

உங்கள் சிஷ்யரான பாக்யராஜும், அவரது சிஷ்யரான பாண்டியராசனும் சொந்தமாக இசையமைக்கும்போது குருநாதரான தாங்கள் ஏன் மியூஸிக் போடக்கூடாது? (‘அந்த ‘விஷப் பரீட்சை’ வேண்டாம்’ என்ற பதில் கூடாது, ப்ளிஸ்)

* பாக்யராஜூம் பாண்டியராஜனும் கதை வசனமெழுதி நடிக்கவும்கூடத்தான் செய்கிறார்கள். நீங்கள் அதையெல்லாம் குறிப்பிடாமல் இசையை மட்டும் குறிப்பிடுவது ஏன்.? (சும்மாதான் கேட்டேன்... உள்நோக்கம் எதுவும் இல்லை என்று சமாளித்துக் கொள்ளாதீர்கள்)

ஜி. திருமாறன், கஞ்சனூர்.

நீங்கள் ஏன் அடிக்கடி கட்சி மாறுகிறீர்கள்? முதலில் எம்.ஜி.ஆரை என்னுடைய 'அன்பு ஆசைத் தலைவர்' என்று அழைத்தீர்கள். இப்போது ஏன் கருணாநிதியை அழைக்கிறீர்கள் (எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என்று கூறக்கூடாது) ஏன் அவர்களுடைய அரசியல் வாரிசு இல்லையா?

* அன்பு, நட்பு, மனித நேசம் - இதுதான் என் கட்சி.... என்னை நேசிப்பவர்மீது நான் பாசம் காட்டுகிறேன். என்னிடம் அன்பு செலுத்துபவர்களை நான் மதிக்கிறேன். இந்த 'அன்பு’ என்கிற ‘கட்சியிலிருந்து’ நான் என்றும் மாறியதில்லை, மாறவும் மாட்டேன்!

Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

கே.ஆர். தேவேந்திரன், கொணவட்டம்.

‘பனியன் விளம்பரத்துக்குப் பயன்படுத்தவேண்டிய நடிகர்களையெல்லாம் மக்களிடம் வோட்டுக் கேட்க அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது மக்களை ஏமாற்றுவது போன்றது’ என்று பி.எச். பாண்டியன் கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

* மக்கள் திலகம் நாடாண்டபோது சட்டசபையில் சபாநாயகராக இருந்தவரா இப்படிக் கூறினார்..?! பி.எச்.பாண்டியன் என்ற பெயரை சபாநாயகர் என்று நாமகரணம் செய்தவரே ஒரு நடிகர்தானே.? திரையுலக முன்னணி நடிகர்கள் சிலர் ஏதாவது ஒர் அரசியல் கட்சியில் சேர்ந்து மேடையேறி, மக்கள் மத்தியிலும் கட்சித் தொண்டர்களிடமும் கிடைக்கும் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு தேர்தலில் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று கட்சித் தலைமையை மிரட்டி, தர மறுத்தால் வேறு கட்சிக்குச் செல்வது போன்ற துரோகச் செயல்களால் உண்மையான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும், ‘இந்தக் கூத்தாடிகளையே நம்பக்கூடாது' என்ற கருத்துக்குள்ளாவது பற்றி உங்கள் கருத்து என்ன? (‘நான் எந்தக் கட்சியும் இல்லை’ என்று மழுப்பாதீர்கள்).

* கட்சியில் தங்களுக்குள்ள செல்வாக்கை வைத்துக் கொண்டு தேர்தல் காலங்களில் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென்று தலைமையை அரசியல்வாதிகள் மிரட்டுவதும், நடிகர்கள் தங்களுக்குள்ள ரசிகர்களின் செல்வாக்கை வைத்துக் கொண்டு தங்களுக்கு இத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென்று தலைமையை மிரட்டுவதும் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத விதியாகிவிட்டது. தானிக்குத்தீனி சரி போயிந்தி பாபு...

என். சாமிநாதன், கும்மிடிப்பூண்டி.

பாரதிராஜா என்றாலே முன்கோபக்காரர் என்றல்லவா கூறுகிறார்கள்?

* ஆம். நான் முன்(னாள்) கோபக்காரன் (கருத்து): கலைஞர் எங்கேயோ கூறக் கேட்டது - உங்களுக்குப் பதிலளிக்கக் கடனாக எடுத்துக் கையாண்டிருக்கிறேன்.

ஆர். வெங்கடேசன், திருத்துறைப்பூண்டி,

தங்களிடம் உதவியாளர்களாக இருந்த சிலர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அரசியலில் குதித்துத் தனியாகவோ, கூட்டாகவோ குறிப்பிட்ட அளவு ரசிகர்களைச் சேர்த்துப் பயனடைவது நன்றாகத் தெரிந்தும் தாங்கள் ஏன் அரசியலில் குதிக்கவில்லை?

*எனக்கு அரசியல் தெரியாது.

கே. செந்தில்வேல், சூலூர்ப்பேட்டை,

பாக்யராஜ், செல்வராஜ், நிவாஸ், இளையராஜா - இவர்கள் நால்வரும்தான் தங்கள் ஆரம்ப காலப் படங்களின் அஸ்திவாரங்கள் எனக் கூறினால் ஒப்புக்கொள்வீர்களா?

* எனக்கு ஆரம்ப அஸ்திவாரமல்ல... ஆணிவேரே ராஜ்கண்ணுதான். நான் அடிமரம். அதில் முளைத்த கிளைகள்தான் பாக்யராஜ், செல்வராஜ், நிவாஸ். அந்தக் கிளைகளில் அமர்ந்து கூவுவதற்கு வந்த குயில்தான் இளையராஜா.

சுந்தர் சுந்தரி, கோவை-2

தங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா அல்லது சிதம்பரம் ஆட்சியா? திருச்செங்கோடு ஆட்சி என்று சமாளிக்க வேண்டாம்.

* சில நேரம் சிதம்பரம்... சில நேரம் மதுரை. ஆட்சி எதுவாக இருந்தாலும் குடிமக்கள் செளகரியமாகத்தான் இருக்கிறார்கள்.

இரா. தெய்வசிகாமணி, திண்டுக்கல்-3.

‘நீங்கள்தான் அடைக்கலம் தரவேண்டும்' என்று உங்களுடைய கஷ்டங்களையெல்லாம் சொல்லி ஒருவருக்குக் கடிதம் எழுதுகிறீர்கள். அந்தக் கடிதத்துக்கு எந்தவிதப் பதிலும் இல்லாத நிலையில் - மூன்று வருடங்களுக்குப் பிறகு அவரிடம் மீண்டும் அதே கஷ்ட நிலையில் நீங்கள் இருக்கம்போது, கேள்வி கேட்கச் சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன கேள்வி கேட்பீர்கள்?

தெய்வசிகாமணி! மூன்று வருடங்களுக்கு முன் நீங்கள் இதே ஜூனியர் விகடன் மூலம் கேள்வி கேட்டிருந்தால் அப்போதே பதிலளித்திருப்பேனே!

Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

ரவிராஜா, திருவண்ணாமலை.

திரையுலகில் நுழைவதற்குமுன் ஒரு ரசிகராகத் தாங்கள் எழுதிய முதல் கடிதம் யாருக்கு.?

* இயக்குநர் ஸ்ரீதரை ரசித்திருக்கிறேன். கடிதம் எழுதியதில்லை. 'அவள் ஒரு தொடர்கதை’ பார்த்து விட்டு இயக்குநர் சிகரம் பாலசந்தருக்கு எழுதியதுதான் நான் ரசிகனாக எழுதிய முதல் கடிதம்!

சி. குணசேகரன், திருச்சூர்.

‘Indian Roads are not meant for Speed.’ இதை உணர்த்து இனிமேலாவது அதிவேகத்தில் காரை ஓட்டாமல் இருப்பீர்களா?

* Foreign Cars are not meant for Indian Road. இதைத் தெரிந்துகொள்ள பல லட்சம் நஷ்டம்.

கணபதி ஷங்கர், சேலம்-1.

'பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து’ வின்னிங் காம்பினேஷன் மீண்டும் உகுவாகுமா? எப்போது?

* அதை வின்னிங் காம்பினேஷன் என்று எப்படி முடியும்? ஒவ்வொருவரும் அவரவர் களத்தில் சூரர்கள். விளையாட்டுப் போட்டியில் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பல பந்தயங்களில் கலந்துகொண்டு பதக்கம் பெறுகிறார்கள். அந்த வீரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே குழுவாக நாட்டுக்குப் பதக்கங்கள் பெற்றுத் தருகிறார்கள். அதற்காக அந்தக் குழுதான் வின்னிங் காம்பினேஷன் என்ற அவர்களின் திறமையை ஒட்டுமொத்தமாக எப்படி எடை போடமுடியும்? அவரவர் பாணியில் மூவரும் தனித் திறமை பெற்றவர்கள். தனியாகவே வின்னிங் பேர்ஸ்ட்டைத் தொட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆர். காசிலிங்கம், கண்டமனூர்,

கடந்த எம்.ஜி.ஆச் ஆட்சிக்கும், கலைஞர் ஆட்சிக்கும் உள்ள மாற்றம் என்ன?

மக்களும் மாறியிருக்கிறார்கள், மந்திரிகளும் மாறியிருக்கிறார்கள்.

ஆர். இளையச்செல்வன், பூலாம்பாடி,

திரைப்படத்துறையில் இன்றைய உடனடித் தேவை?

* வளமான கற்பனை...

விழியரசி, மேல்பட்டி,

ஷூட்டிங்கில் தங்களது கீழ்நிலை உதவியாளர்களின் ஐடியாவை, அவர்கள் தாங்களாகவே சொல்லும்போதோ அல்லது தாங்களே கேட்டோ செயல்படுத்திய அனுபவம் உண்டா?

* நிறைய உண்டு. சினிமா என்பது தனி மனித சிந்தனை அல்ல, ஒரு கூட்டு முயற்சிதான் என்பது என் ஆழ்ந்த அபிப்பிராயம். உடன்பாடாக இருந்தால், அவர்களின் கற்பனைக்குக் குஞ்சலம் கட்டுவதும் உண்டு; படாவிட்டால் தலையில் குட்டுவதும் உண்டு,

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

கு. கண்ணன், சென்னை-24.

சில நடிகர்கள், டைரக்டர்கள் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கிறார்கள். நீங்களும் சொந்தமாகப் பத்திரிகை ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா?

* எனக்கென்று சொந்தமாகப் பல நூறு பத்திரிகைகள் இருக்கும்போது, எதற்காக இன்னொரு பத்திரிகை.

அ. நவ்சாத், மொரப்பூர்.

கணவனை மாற்றும் நடிகைகளுக்கும், கட்சி மாறும் தலைவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

* கணவனை மாற்றிய நடிகை மீண்டும் அந்தக் கணவனிடம் போவதில்லை. ஆனால் அரசியல்வாதி.? ஆக, நடிகைகளே பெட்டர்!

பூநசி. மேதாவி, பூங்குளம்.

தமிழ்ப் படங்களுக்குத் தேசிய விருது கிடைக்காமல் போனதற்கு, தேர்வுக் குழுவில் இடம்பெற்ற நீங்கள்தான் காரணம் என்று குறை கூறப்படுகிறதே?

* நான் மட்டும் எப்படிக் காரணமாக முடியும்? தேர்வுக்குழுவில் நடுவர்களாக இருந்த பதினான்கு பேரின் ஒட்டுமொத்த கருத்து இது.

ஆர். வேலுமணி, கடலூர்-2.

சினிமா... சினிமா.... சினிமா... இந்த சினிமாவில் அப்படி என்னதான் இருக்கிறது?

இப்படி மூன்று முறை அழுத்தமாகக் கேட்க வைத்திருக்கிறதே.... அதுதான் சினிமா!

கதிரவன்மைத்தன், அம்மாபேட்டை ‘நிழல்கள்’ பாரதிராஜா மீண்டும் வருவாரா? (பார்த்து நாளாயிற்று!)

* சமீபத்தில் டி.வி-யில் வந்தாரே... பார்க்கவில்லை? எ.ரபி, லெப்பைக்குடி.

காதலிப்பது போல நடித்து, கடைசியில் கட்சி மாறும் பெண்களைப் பற்றி உங்களின் கருத்து என்ன?

* காதலித்தால்தானே கட்சி மாறக்கூடாது? அப்படிக் காதலிப்பதாக நடித்தவர் கட்சி மாறினால் அதில் என்ன தவறு? நடிப்புக் காதலை உண்மையென்று நம்பியவர் மீதுதான் கோளாறு.

Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

பெ. அருள், கடலூர்-1.

கார் விபத்தில் அடிபட்டு மயக்கமடைந்து மீண்டும் நினைவு திரும்பி விழித்தபோது, முதன்முதலில் யாருக்கு நன்றி சொன்னீர்கள்? தாங்கள் வனங்கிய தெய்வத்துக்கா அல்லது தங்களைக் காப்பாற்றிய தங்கள் மகனுக்கா?

* ஒரு அரணாக நின்று என்னைக் காப்பாற்றிய என் அந்நிய நாட்டு காருக்குத்தான்! தெய்வம் என் கார் ரூபத்தில் வந்து காப்பாற்றியது போல் ஒரு பிரமை!

ஏ.டபிள்யூ ஷேக் அலாவுதீன், அண்டக்குளம்.

‘நிழல்கள்’ படம் பற்றித் தாங்கள் கூறும்போது ‘நானும் சிலரும் மலையில் ஏறிச் செல்கிறோம். சில படிகள் முன்னால் ஏரி நான் ஓர் அழகிய காட்சியைப் பார்க்கிறேன். பின்னால் வந்தவர்களால் காண முடியவில்லை. முன்னால் சென்றது என் குற்றமா? நின்றுகொண்டு மேலே வர மறுத்த அவர்கள் குற்றமா?’ எனக் கவிநயத்துடன் கூறிய தாங்கள், ‘ரஜினியை வைத்துச் சங்கராச்சாரியார் படமா (‘கொடி பறக்குது’ விமரிசனம்) எடுக்க முடியும்?’ என ஒரு வரியில் உணர்ச்சிவசப்படக் காரணம்?

* உங்களுடைய கருத்துக்களை என்மீது திணிக்க இந்தப் பகுதியைப் பயன்படுத்தாதீர்கள். ‘ரஜினியை வைத்துச் சங்கராச்சாரியார் படமா எடுக்க முடியும்' என்று நான் சொன்னதேயில்லை.

என். வீரபாண்டியன், கருக்களாச்சேரி.

'கலைஞர் ஆட்சி - 100 நாள் சாதனை... நடுநிலையான விமரிசனம் தேவை!

* பல வைர விழாக்களையும் பல பவள விழாக்களையும் தாண்டி ஓடக்கூடிய படத்துக்கு நூறு நாட்களிலேயே விமரிசனம் எதற்கு?

ஏ. அழகுராஜன், அய்யம்பாளையம்.

திரையுலக வாழ்வில் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு முன்னேறி வந்த சந்தர்ப்பத்தில், தவறு ஏதும் புரியாமலேயே... நீங்கள் அடைந்த மிகப் பெரிய அவமானமாக எதையேனும் இன்றைக்கும் நினைவில் வைத்திருக்கிறீர்களா?

* பல ஆண்டுகளுக்கு முன்பு ‘சர்வர் சுந்தரம்' படத்தின் பிரத்தியேகக் காட்சி ஏவி.எம். ஸ்டுடியோவில் திரையிடப்பட்டபோது, அப்படத்தைக் காண என்னை அழைத்துச் சென்ற நண்பர் உள்ளே வரச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.... பின்தொடர்ந்து நானும் உள்ளே சென்று படத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். இடைவேளை விட்டு விளக்குகள் எரிய... அந்நிய முகமான என்னைக் கண்டு அப்போது அந்த நிறுவனத்தில் வேலையில் இருந்த ஒருவர் என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியேற்ற உத்தரவிட... அது உடனடியாக நிறைவேற்றப்பட்டது. என்னை அழைத்துச் சென்ற நண்பர் அதனைக் கண்டும் காணாமல் விட்டுவிட... படத்தின் நாயகன் சுந்தரத்தின் சோகத்தைவிட நான் அதிக சோகத்துடன் வெளியேறினேன். ஆனால், எனக்கு இந்தச் சம்பவம் கொடுத்த மனோதிடம்தான் என் இன்றைய நிலை.

சுந்தர் சுந்தரி, கோவை-2.

மயிலு - குயிலு... ஒப்பீடுங்கள்!

* மயில் - மழையில் ஆடும் குயில் - வெயிலில் பாடும் என்னுடைய மயில் வெயிலில் ஆடியது. என்னுடைய குயில் மழையில் பாடியது.

Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

பெ. இராசசேகர், ஒகளுர்.

திரையுலகில் கண்டுகொள்ளக் கூடியவை எவை? கண்டுகொள்ளக் கூடாதவை எவை?

* கண்டுகொள்ளக் கூடியவை - திரையில் நடப்பவை. கண்டுகொள்ளக் கூடாதவை - திரைக்குப் பின்னால் நடப்பவை.

எஸ். ரவி, காவேரிப்பட்டணம்.

திரைப்படத் தணிக்கை முதை பற்றி...?

* தணிக்கை என்பது தனி 'கை' அல்ல! அது நான்கு பேரின் நம்பிக்கை. தும்பிக்கையைத் தொட்டுவிட்டு வால் என்று சொன்னவர்களும் உண்டு, வாலைத் தொட்டுவிட்டு கால் என்று சொன்னவர்களும் உண்டு. பாவம் யானை. பாவம் பாகன்! பாகன் யார் என்று தெரிகிறதா..? டைரக்டர்!

பி. குணசேகரன், பழங்கோட்டை

தமிழக மக்களுக்கு ஜெயலலிதாவின் தலைமை தேவைதானா?

* இதற்கு நான் விரிவாகப் பதில் சொல்ல வேண்டுமானால் 250 பக்கமுள்ள ஒரு புத்தகம் எழுத வேண்டும்... இல்லை, இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படம் எடுக்க வேண்டும்.

கோ. மதிவாணன், புதுச்சேரி-4.

ஒரு காட்சியைத் திரைப்படத்தில் எக்ஸ்பிரஸ் செய்வதற்கும், தொடர்கதையில் 'எக்ஸ்பிரஸ்' செய்வதற்கும் ஒரு எழுத்தாளர் என்கிற முறையில் உங்கள் கருத்து என்ன?

* திரைப்படத்தில் 'எக்ஸ்பிரஸ்' வேகத்தில் எக்ஸ்பிரஸ் செய்யமுடியும்.... தொடர்கதையில் 'பாசஞ்சர்’ வேகத்தில்தான் எக்ஸ்பிரஸ் செய்ய முடியும்.

ஆம்பல் அரசன், பூனா-18.

‘வேதம் புதிது’ படம் ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் உணர்வுகளைப் பாதித்துவிட்டது. இதன்மூலம் நீங்கள் ஒரு நாத்திகர் என்பதை நிரூபித்துவிட்டீர்களாம். உண்மையிலேயே நீங்கள் ஒரு நாத்திகரா?

* உங்களுக்குப் பதில் சொல்வதற்காகவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்காகப் பாடி வைத்திருக்கிறார். கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கதைக்கு உதவாத வெறும் பேச்சு... கஞ்சிக்கு இல்லாதவர் கவலையைப் போக்க கருத வேண்டியதை மறந்தாச்சு. ..

மேலைநாடுகளில் உள்ள இளைஞர்களெல்லாம் விஞ்ஞானத்தைப் பற்றியும், விண்வெளியைப் பற்றியும், கம்ப்யூட்டரைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்க, நம்மவர்கள் நடிகர் - நடிகைகளின் உருவ ஒற்றுமையையும், வயதையும் ஆராய்ந்து கொண்டு ரசிகர் மன்றங்களை அமைத்துத் தங்களது அபிமான நடிகர்களுக்கு ‘கட் அவுட்’ வைப்பதிலேயே காலம் கடத்துகிறார்களே...இந்த இருபதாம் நூற்றாண்டுக்குள் இந்த இளைஞர் சமுதாயம் திருந்திவிடுமா?

நீங்கள் குறிப்பிடும் கலை வெறி மேலைநாடுகளிலும் இல்லாமல் இல்லை. முத்தமிடுவதும் முடிதொட்டுப் பார்ப்பதும் அங்கும் உண்டு. ஆனால், கலையில் அவர்கள் வாழ்க்கையைச் கரைத்துவிடவில்லை. அந்த மனோபாவம் இந்த நூற்றாண்டுக்குள் வரும் என்று நம்புகிறேன். அடுத்த நூற்றாண்டு அதிக தூரமில்லை... இன்னும் பத்தாண்டுகளே...

Director Bharathiraja answers common people's questions
Director Bharathiraja answers common people's questions

எஸ். பாலாஜி, சென்னை-33.

இந்து மதத்தில் நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடத்திருக்கக்கூடிய சில சிறு தவதுகளை மிகைப்படுத்தி வியாபார நோக்குடன் நீங்கள் படம் எடுக்கிறீர்கள். அதுபோல் மற்ற மதங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் படம் எடுக்கத் துணிவு உண்டா? (உம் - கிறிஸ்தவர், முஸ்லிம் எல்லோரும்தானே இந்தியாவில் வசிக்கிறோம்.)

என் வீட்டு மூலையில் உள்ள ஓட்டடையைத் உடைத்தெறிய எனக்கு உரிமையுண்டு. பக்கத்து வீட்டு ஜன்னலுக்குள் தலையை நுழைத்துச் சுவாசிக்க எனக்கு உரிமை இல்லை.

ஜெ.முருகுசுந்தர், சுவாமிமலை.

நீங்கள் அறிமுகப்படுத்தியவர்களில் (நடிப்பில்) மிகச் சிறந்தவர்களை வரிசைப்படுத்துங்கள் (சிக்கலான கேள்வியோ?)

1.கிராமங்கள் 2.மலைகள் 3.மேகங்கள் 4.நதிகள் 5.பூக்கள் 6.பறவைகள்

என்.சங்கரன், திருநெல்வேலி.

எது கடினம், கேள்வி கேட்பதா பதில் சொல்வதா?

புத்திசாலியிடம் கேள்வி கேட்பதும், முட்டாளுக்குப் பதில் சொல்வதும் கடினம்.

- ஜூனியர் விகடன் டீம்

(18.10.1989 முதல் 08.11.1989 ஆகிய தேதிகளில் ஜூனியர் விகடன் இதழ்களிலிருந்து...)