Published:Updated:

ஜெயலலிதா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

Jayalalitha - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Jayalalitha - A Reporter's Diary

போலி கெளரவம் பிடிக்காதவரை காலம் எப்படி மாத்திருச்சுல்ல!

ஜெயலலிதா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

போலி கெளரவம் பிடிக்காதவரை காலம் எப்படி மாத்திருச்சுல்ல!

Published:Updated:
Jayalalitha - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Jayalalitha - A Reporter's Diary

வெண்ணிற ஆடையில் ஜெயலலிதா நடித்துக் கொண்டிருக்கும்போது அவரை முதலில் நான் சந்தித்தேன். பின்னர், ஒய்.ஜி.பி. நாடகக் குழுவில் நான் சேர்ந்து நடித்தபோது ஜெயலலிதாவோடு அதிகம் பழகியிருக்கிறேன்.

அந்தச் சமயத்தில்தான் எனக்குத் திருமணம் நிச்சயமானது. ஸ்டூடியோவில் அவரைச் சந்தித்து என் திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன்.

அதைப் பார்த்துவிட்டு, ``பாலா! நீங்க எல்லாம் ரொம்ப லக்கி! கல்யாணம்... குடும்பம் என்று செட்டில் ஆகிவிடுகிறீர்கள்..." என்றார்.

அவர் ஏன் அப்படிச் சொன்னார்? தான் அப்படிக் கல்யாணம்... குடும்பம் என்று வர முடியாமல் சினிமாவில் வந்து சிக்கிக் கொண்டோமே என்றா?" என்று நான் சிந்திக்கலானேன்.

Jayalalitha - A Reporter's Diary
Jayalalitha - A Reporter's Diary

அதில் உண்மையும் இருந்தது. கான்வென்ட்டில் நன்றாகப் படித்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையை, தாய் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து சினிமாவில் நடிக்க வைத்தால்...

ஜெயலலிதா சினிமாவில் பெயரும் புகழும் பணமும் சம்பாதித்திருக்கலாம் - அது வேறு. எனக்கென்னவோ அவர் சினிமா துறைக்கு வராதிருந்தால் நன்றாகப் படித்து ஒரு டாக்டராகவோ, ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ நிச்சயமாக ஆகியிருப்பார் என்றே தோன்றுகிறது.

அப்போது அவருக்கு சினிமாவில் நடிப்பதும் பிடிக்காத ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், அவர் தாய் சந்தியா வைத்த குறியும் தப்பவில்லை. ஜெயலலிதா பெரிய நட்சத்திரமானார்.

ஒரு முறை ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது இவரைப் பேட்டி காணச் சென்றேன். நான் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.அந்தச் சமயம் சிவ பூஜையில் கரடியாக, அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஒரு பிரபல நடிகர் அங்கு வந்து சேர்ந்தார்.

அவரைக் கண்டதும் நான் மரியாதைக்காக என் நாற்காலியை விட்டு எழுந்தேன். இதைக் கண்ட ஜெயலலிதா , ``உட்காருங்கள் பாலா! இப்போது நீங்கள் என் கெஸ்டாக வந்திருக்கிறீர்கள்... எழுந்திருக்கத் தேவையில்லை!" என்றார்.

போலி கெளரவம் இவருக்குப் பிடிக்காதது. படம் வரைவதில் விருப்பம் அதிகம். மற்றவர் மனம் நோகாமல் சுமுகமாக - அதே சமயம் ஒரு கம்பீரத்துடன் பேசுவார்.

ஷூட்டிங்கின்போது ஓய்வு கிடைத்தால் ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டேயிருப்பார். நிறையப் படிப்பார். நாட்டு நடப்பைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டிருக்கிறார். அதற்கு துக்ளக்கில் அவர் எழுதி வந்த சுவையான கட்டுரைகளே சான்று. 

- பாலா

(28.12.1980 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism