Published:Updated:

காதலே நிம்மதி - விகடன் விமர்சனம்

Kaadhale Nimmadhi - Vikatanreview
பிரீமியம் ஸ்டோரி
Kaadhale Nimmadhi - Vikatanreview

‘காதலர்கள் படும் அவஸ்தை’களை அனுபவிக்கும் ஒரு ‘காதல்’ படம்..!

காதலே நிம்மதி - விகடன் விமர்சனம்

‘காதலர்கள் படும் அவஸ்தை’களை அனுபவிக்கும் ஒரு ‘காதல்’ படம்..!

Published:Updated:
Kaadhale Nimmadhi - Vikatanreview
பிரீமியம் ஸ்டோரி
Kaadhale Nimmadhi - Vikatanreview

ருதலைக் காதல், பார்க்காமல் காதல், பேசாமல் காதல், டெலி போனில் காதல். என்று பரிசோதனைச் சாலை எலி போல, காதலை பார்ட் பார்ட்டாக ஆராய்ச்சி செய்கிற சீஸன் இது! வந்திருப்பது - காதலிக்காத இருவர் ‘காதலர்கள் படும் அவஸ்தை’களை அனுபவிக்கும் ஒரு ‘காதல்’ படம்!

சும்மா சொல்லக்கூடாது... அறிமுகமே ஆகாத இருவரையும் (சூர்யா - கவிதா) காதலர்கள் என்று குடும்பத்தார் நம்புவதில் ஆரம்பித்து, க்ளைமாக்ஸ்.

கோர்ட் ஸீன் வரை திரைக்கதையைச் சாமர்த்தியமாகவே அமைத்திருக்கிறார்கள்!நாசருக்கு தங்கை மீது ஏற்படும் ஒரு சின்ன சந்தேகம், இத்தனை பூதாகாரமாக வெடிக்குமா என்று சந்தேகம் எழலாம். ஒரு கைக்குட்டை ஏற்படுத்தும் சந்தேகத்தை வைத்துக் கொண்டு, ஆனானப்பட் ஷேக்ஸ்பியரே ‘ஒத்தெல்லோ’ நாடகம் எழுதியிருக்கிறார். அப்புறமென்ன..?!

கோயிலில் கவிதாவை நாசர் தேடும் காட்சியில், நாசரின் கண்ணுக்குள் புகுந்து கொள்ளும் உணர்வைகாமிரா உதவியோடு படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுத்துவது இந்திர ‘டச்’!

Kaadhale Nimmadhi - Vikatanreview
Kaadhale Nimmadhi - Vikatanreview

நாசருக்கென்றே ஒரு கதாபாத்திரம்! ஆனால், ‘இவ்வளவு மூர்க்கமான அவசரக்குடுக்கையாகவா ஒரு அண்ணன் இருப்பான்...?’ என்று நினைக்கும் அளவுக்கு, எல்லைகளைப் பல இடங்களில் மீறுகிற குணச்சித்திரம்! தேவா வேறு தன் பங்குக்கு நாசர் வரும்போதெல்லாம். ஏதோ ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் அளவுக்குப் பின்னணி மியூஸிக் போடுகிறார்!

பாவம் சூர்யா... ஏதோ விசாரணைக் கைதி போல் செமத்தியாக படம் அடி வாங்குகிறார்! மற்றபடி, இந்த இரண்டாவது பட இயக்குநரும் சூர்யாவைத் தளுக்காகவே பயன்படுத்துவதால், மாஸ்டர் சிவகுமாரின் Potential-ஐ இன்னும் அளவிட முடியவில்லை!சாருஹாசன் சார்...

கொட்டுகிற மழையில் கவிதாவை வெளியே தள்ளும் ஸீனில் அனாயாசமான அந்த முகபாவம்... நடுங்கும் குரல்... பின்னிவிட்டீர்கள்!படத்தை டூயட், ரொமான்ஸ், குறும்பு என்று நகர்த்த வழியில்லாத தவிப்பு  டைரக்டருக்கு! இரண்டு ரீலுக்கு, ஒரு ரீல் பாட்டு போடுகிறார்.

டைரக்டரிடம் ஊட்டச்சத்து, புரதம், வைட்டமின்ஸ் எல்லாமே இருக்கு! அப்படியிருக்க, தெருவெங்கும் ரஜினி போஸ்டர்களை ஒட்டிவைத்து ஒரு கோரஸ் பாட்டு இந்தப் படத்துக்கு தேவையா..?

கடைசியில் படம் சக்ஸஸ் ஆனால், அதற்கு ஒரே காரணம் - படத்தில் வரும் சூப்பர் ஸ்டார் போஸ்டர்தான் என்று யாராவது சொன்னால், டைரக்டருக்கு எவ்வளவு  கடுப்பாக இருக்கும்.?!

புதுக் கதாநாயகி கவிதா, படம் முழுக்க அழுது சிவந்த முகத்தோடு வருகிறார்.

ஆனால், உணர்ச்சிகளைத் தீவிரமாகக் காட்டும்படியான, இயல்பான, கவனத்தை ஈர்க்கும் முகம்.‘என்ன படிக்கிறே...?’ என்று முரளி கேட்டவுடன், ‘ப்ளஸ் டூ’வென அந்தப் பிஞ்சுக் குழந்தை ரொம்பப் புத்திசாலித்தனமாகப் பேசுவது... வீட்டில் மண்டை வெடிக்க சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் முரளி வந்துவிட, மற்றவர்கள் விநாடி நேரத்தில் ‘மூடு’ மாறுவது...

Kaadhale Nimmadhi - Vikatanreview
Kaadhale Nimmadhi - Vikatanreview

இப்படி ‘மினிமினி’யாச ரசிக்க வைக்கும் யதார்த்தம் நிறைய!‘முரளி - சூர்யா இணைந்து நடிக்கும்’ என்ற டைட்டில் பறைசாற்றினாலும், முரளிக்குக் கௌரவத் தோற்றம்தான்! க்ளைமாக்ஸில் முக்கியமாக வந்தாரே, பிழைத்தாரோ!

பிளாட்பாரம் டிக்கெட்டின் பின்பக்கத்தில் எழுதிவிடக்கூடிய அளவுக்குச் சின்னக் கதை! அதை இரண்டரை மணி நேரத்துக்குத் தொய்வில்லாமல் இழுத்துவிட்டதில் டைரக்டருக்கு வெற்றிதான்!

- விகடன் விமர்சனக்குழு

(08.02.1998 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism