Published:Updated:

``இனத்துக்காகவும் மொழிக்காகவும் போராடுற ஒரே தமிழன் சீமான்தான்" - இயக்குநர் தங்கர்பச்சான்

இயக்குநர் தங்கர்பச்சான்

மத்திய அரசு தமிழர்களை வெறுப்புக்குள்ளாக்கும் வேலையை தான் தொடர்ந்து செஞ்சுட்டு இருக்கு....

``இனத்துக்காகவும் மொழிக்காகவும் போராடுற ஒரே தமிழன் சீமான்தான்" - இயக்குநர் தங்கர்பச்சான்

மத்திய அரசு தமிழர்களை வெறுப்புக்குள்ளாக்கும் வேலையை தான் தொடர்ந்து செஞ்சுட்டு இருக்கு....

Published:Updated:
இயக்குநர் தங்கர்பச்சான்
ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த யூடியூப் தொடரில் இயக்குநர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் என தங்கர் பச்சானைச் சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலிலிருந்து...
இயக்குநர் தங்கர்பச்சான்
இயக்குநர் தங்கர்பச்சான்

நீங்கள் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்ப அரசியல்னா ஒரு கட்சில நம்மல இணைச்சிட்டு, கொடி பிடிச்சிட்டு, அவங்க சொல்ற வேலையெல்லாம் கேட்டு நடக்கனும். நான் பேசறது எழுதுறது எல்லாமே அரசியல்தான். இன்னைக்கு ஓட்டு போடுறதுக்கே எல்லாம் காசு கொடுக்கனும். ஆனா ஆரம்பத்தில் அப்படி இல்லை. அப்படி காசு கொடுத்து ஆட்சிக்கு வர்றவன் கொள்ளையடிக்க தான் பார்ப்பான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போதுள்ள மத்திய அரசின் செயல்பாட்டைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மத்திய அரசு தமிழர்களை வெறுப்புக்குள்ளாக்கும் வேலையை தான் தொடர்ந்து செஞ்சுட்டு இருக்கு. அதுல ஒன்னு தான் இந்தி திணிப்பு. எல்லா மாநிலங்களும் சேர்ந்தது தான் மத்திய அரசு. ஆனா அவங்க மாநிலத்துக்கான அதிகாரங்கள மதிக்கிறதே இல்ல. மாநிலத்துக்கான பங்கீட்ட கூட தரதில்ல. நீட்ல தொடங்கி நிறைய விஷயங்கள் சொல்லலாம். அவர்கள் நினைக்கும் ஒரு மொழிக்கொள்கை இங்கு கொண்டு வரவே முடியாது. தமிழர்கள் விட மாட்டார்கள்.

இயக்குநர் தங்கர்பச்சான்
இயக்குநர் தங்கர்பச்சான்

நீங்கள் நடிகர் அஜித் குமாருடன் நிறைய படங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். அவரைப் பற்றி...

அஜித்குமார் வேறு ஒரு கிரகத்துல வாழ்ந்துட்டு இருக்கார். பணம் போட்ட ப்ரொடியூசரையும் பார்க்க மாட்டார். படத்துக்கு வரும் பார்வையாளர்களையும் பார்க்க மாட்டார். அவர்களால் தான் நாம் இவ்வளவு உயரதுக்கு வந்திருக்கோம்'ன்ற விஷயத்தையே அவர் மறந்துட்டாரு. இது இன்னைக்கு இருக்க முன்னணி நடிகர்கள் எல்லாத்துக்குமே பொருந்தும். அவங்களுக்கு இவ்ளோ கொடுத்த மக்களுக்கு அவங்க திருப்பி என்ன கொடுத்தாங்க…

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீமானைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

இனத்துக்காகவும் மொழிக்காகவும் போராடுற ஒரே தமிழன் சீமான் தான். ஆனா சமீப காலமா அவர் கட்சிய விட்டு நிறைய பேரு வேற கட்சிக்கு போறாங்க. அவரு மேல எனக்கு சில குறைகள் இருந்தாலும், தமிழுக்காக அவர் போராடுறது எனக்கு சந்தோஷம். ஆனா அவரு கையில அதிகாரம் போகனும்னா, அவரோட இந்த செயல்பாடு பத்தாது.

5. விஜயகாந்த் மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறதா?

நல்லவங்களுக்கு எல்லாம் அரசியல்ல இடம் இல்லை. அந்தக் கட்சி கூட இப்ப அவரு கையில இல்லையே. அவர் உடல்நலம் எல்லாம் சரியாகி, மீண்டும் கட்சி கைக்குள்ள வந்து தனியா நின்னாருனா, கண்டிப்பா அவரு முதல் இடத்துக்கு வருவாரு. இப்போதைக்கு அவருக்கு அரசியல் எல்லாம் வேணாம். நல்ல நினைவோட பழையபடி திரும்பி வந்தாலே போதும். அவரு மட்டும் அரசியலுக்கு வராம இருந்திருந்தா இன்னும் கூட நல்லா இருந்திருப்பாரு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism