Published:Updated:

மிஸ்டர் மியாவ்

‘ஈஸ்வரன்’ படத்துக்கு முன், ஒரு பைலிங்குவல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் சுசீந்திரன். படத்துக்குத் தமிழில் ‘ஷிவஷிவா’ என்றும், தெலுங்கில் ‘ஷிவடு’ என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

* ‘ஜெமினி’, ‘வின்னர்’, ‘வில்லன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை கிரண், ‘சகுனி’, ‘ஆம்பள’ ஆகிய சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங் களில் நடித்தார். சமீபகாலமாக, படங்கள் எதிலும் நடிக்காத அவர் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டுவருகிறார்.

கிரண்
கிரண்

* ‘கங்காரு’ மலையாளப் படத்தின் மூலம் திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஓவியா, ஒரு சில படங்கள் மட்டுமே மலையாளத்தில் நடித்தார். பிறகு, தமிழில்தான் அதிக கவனம் செலுத்திவந்தார். ஆனாலும், சினிமாவைவிட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இவருக்குப் புகழைப் பெற்றுத்தந்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஓவியாவின் லெவலே மாறிவிடும் என்றார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார் ஓவியா. ‘பிளாக் காபி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அமெரிக்கவாழ் மலையாளிப் பெண்ணாக நடித்திருக்கிறாராம்.

ஓவியா
ஓவியா

* ‘ஈஸ்வரன்’ படத்துக்கு முன், ஒரு பைலிங்குவல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் சுசீந்திரன். படத்துக்குத் தமிழில் ‘ஷிவஷிவா’ என்றும், தெலுங்கில் ‘ஷிவடு’ என்றும் பெயரிட்டிருக்கிறார்கள். தமிழ் வெர்ஷனில் ஜெய்யும், அவருக்கு ஜோடியாக ‘கென்னடி கிளப்’ படத்தில் அறிமுகமான மீனாட்சியும் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு வெர்ஷனில் ஆதியும் நிக்கி கல்ராணியும் நடித்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

* ‘சைக்கோ’ படத்துக்குப் பிறகு, ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கத் தொடங்கினார் மிஷ்கின். நடிகர் விஷாலுக்கும் அவருக்கும் மனக்கசப்பு வரவே, அந்தப் படத்திலிருந்து வெளியேறினார். அதன் பிறகுதான், ‘பிசாசு 2’ படத்துக்கான அறிவிப்பு வெளியானது. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிகை பூர்ணா, பேயாக நடிக்கவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

* வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரின் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி, ஹிட் அடித்த தெலுங்குப் படம், ‘F2.’ இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை ‘F3’ என்ற பெயரில் தொடங்கவிருக்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய அனில் ரவிப்புடியே இதையும் இயக்க... அதே நடிகர்கள் இதிலும் நடிக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு