Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், ஸ்ரீதிவ்யா.

மிஸ்டர் மியாவ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், ஸ்ரீதிவ்யா.

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

‘காதல் கோட்டை’ இயக்குநர் அகத்தியனின் வீடும் உண்மையிலேயே காதல் கோட்டைதான்! அகத்தியனுக்கு மொத்தம் மூன்று மகள்கள். முதல் மகள் கனி, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் இயக்குநர் திருவையும், இரண்டாவது மகள் நடிகை விஜயலட்சுமி, ‘பண்டிகை’ படத்தின் இயக்குநர் ஃபெரோஸையும் காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். தற்போது மூன்றாவது மகளான நிரஞ்சனியும், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் காதல் திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களின் திருமணம், பிப்ரவரி மாதம் 25-ம் தேதி புதுச்சேரியில் நடக்கவிருக்கிறது.

இன்ஸ்டாகிராமை தனது புகைப்படங்களால் கிறங்கடிக்கும் நடிகை ரைசா, திடீரென ட்விட்டரில் ‘என்னை அழவைக்கும் திரைப்படம் ஒன்றைப் பரிந்துரை செய்யுங்கள்’ எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகர் விவேக், ‘சிவாஜி கணேசன் நடித்த ‘பாபு’ படத்தைப் பாருங்கள். நிச்சயமாக அழுவீர்கள்’ என ரிப்ளை செய்திருக்கிறார். பாவம்... நல்லா இருந்த புள்ள!

மிஸ்டர் மியாவ்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார், ஸ்ரீதிவ்யா. விஜய் ஆண்டனியுடன் ஒரு படம், கெளதம் கார்த்திக்குடன் ஒரு படம் கைவசமிருக்கின்றன. தற்போது, மலையாளத்தில் ப்ரித்விராஜுடன் ‘ஜன கண மன’ எனும் படத்தில் நடித்துவருபவர், எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை; நிறைய படங்களில் நடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

‘பிக் பாஸ்’ மற்றும் ‘குக்கு வித் கோமாளி’ மூலம் தனக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த பிறகு மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் வனிதா விஜயகுமார். சிறு வயதிலேயே பெரிய ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும், தனது இரண்டாவது இன்னிங்ஸுக்கு எந்த ஹீரோவின் உதவியும் தேவையில்லை என்று சோலோ ஹீரோயினாகவே தயாராகிவிட்டாராம். விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

உஷ்...

தாடி நடிகர் லாக்டௌன் காலத்தில் ரகசியமாக மறுமணம் செய்துகொள்வதற்கு முன்புவரை,அவருடைய மகன்கள் அவருடன் தொடர்பில் இருந்தார்கள். தற்போது அப்பா, புது மனைவியுடன் வசிக்கும் கடற்கரை சாலை வீட்டுப் பக்கமே அந்தப் பிள்ளைகள் எட்டிப் பார்ப்பதில்லை என்பதுடன், அப்பாவிடம் போனில் பேசுவதைக்கூடத் தவிர்த்துவிட்டார்களாம்!