Election bannerElection banner
Published:Updated:

'விஜய் எதை மனதில் வைத்து பேசுகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்' - எஸ். ஏ. சந்திரசேகர்!

எஸ்.ஏ.சந்திரசேகர் - விஜய்
எஸ்.ஏ.சந்திரசேகர் - விஜய்

விஜயின் கருத்துகள் சர்ச்சையை கிளப்புகிறது என்றால், அதற்கு எதிர்ப்பு வருகிறது என்றால் அவர் வளந்துகிட்டு வர்றார்னு அர்த்தம். காய்த்த மரத்தில்தான் கல்லெறிபடும்.

தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் என்பவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் நலம் விசாரிக்க நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று நாகர்கோவில் வந்தார்.

விஜய்
விஜய்

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சுபஸ்ரீ மரணத்தை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அதுபோல விஜயும் பேசியிருக்கிறார். அதற்கு எதிராக யார் பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை.

தமிழ்நாட்டுல பெண்ணுக்கு இப்படி ஒரு கதி நடந்திருக்கிறது. அதைப்பற்றி பேச எல்லா குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. அதுபோல நானும் பேசியிருக்கிறேன், விஜய்யும் பேசியிருக்கிறார். அரசியல் கருத்து நீங்களும் பேசலாம், நானும் பேசலாம். இந்த நாட்டில் பிறந்த அனைவரும் பேசலாம். அரசியல் சட்டத்திலே அதற்கு உரிமை கொடுத்திருக்கிறாங்க.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்

அனைவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமைன்னு இருக்கிறது. அதுபற்றி பேசிபவர்களைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மக்களுக்கு இடையூறாக பதாகை வைக்கக்கூடாது என டிராபிக் ராமசாமி மட்டுமல்ல கோர்ட்டும் சொல்லிக்கொண்டுதான் வருகிறது.

விஜய்யின் கருத்தால் பிகில் படத்திற்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. சமூகத்தில் நாங்க ஒருத்தரா இருக்கிறோம். சமூக சிந்தனையோடு சில கருத்துக்கள் சொல்கிறோம் அவ்வளவுதான். அதனால் படத்திற்கு எதிர்ப்பு வரும் என நான் நினைக்கவில்லை.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் மேடையில் ஒரு கருத்து பேசுகிறார் என்றால் எதை மனதில் வைத்து பேசுகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். விஜய்யின் கருத்துகள் சர்ச்சையை கிளப்புகிறது என்றால், அதற்கு எதிர்ப்பு வருகிறது என்றால் அவர் வளந்துகிட்டு வர்றார்னு அர்த்தம். காய்த்த மரத்தில்தான் கல்லெறிபடும். இளம் சினிமா இயக்குநர்கள் எங்களைவிட அதிக டெக்னாலஜியோடு வர்றாங்க. அவங்களுக்கு நான் அட்வைஸ் சொல்ல விரும்பல" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு