Published:Updated:

`சமூக நீதிக்காகக் குரல்கொடுத்ததைப் பெருமையாக நினைக்கிறேன்!’ -சூர்யாவுக்கு சத்யராஜின் வாழ்த்து

கலிலுல்லா.ச

ஒரு பிரபல நடிகனாக, ஒரு மாஸ் ஹூரோவாக இருந்துட்டு குரல் கொடுக்குறதுங்கிறது, அதுக்குள்ள சில கஷ்டங்கள் இருக்கு; அதுக்குள்ள சில இழப்புகள் இருக்குது. சில சங்கடங்களை, எதிர்ப்புகளை சந்திக்கவேண்டியிருக்கும்.

சத்யராஜ்
சத்யராஜ்

`புதிய கல்விக் கொள்கை’ தொடர்பாக சூர்யாவின் பேச்சுகள் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடித்த 'காப்பான்' இசை வெளியீட்டு விழாவில், பாடலாசிரியர் கபிலன், `சூர்யா பேசியதை, ரஜினி பேசியிருந்தால், மோடி கேட்டிருப்பார்’ என கொளுத்திப்போட, `நான் பேசவேண்டுமென்றில்லை; சூர்யா பேசியதை மோடி கேட்டுவிட்டார். நான் சூர்யாவின் கருத்தை ஆமோதிக்கிறேன்” என்று ரஜினி பதிலளித்தார். இந்தச்சூழலில், சூர்யாவின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். நடிகர் சத்யராஜ் காணொளி காட்சி மூலமாகத் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.

சூர்யா
சூர்யா

இதுதொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், ``சூர்யா பிறந்தாள் வாழ்த்துகள். நீ ஒரு வயசு இருக்குறவரைக்கும் உன்ன தூக்கிக் கொஞ்சியிருக்கேன். உன்னுடைய எத்தனையோ பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லியிருக்கேன். எல்லாமே வந்து போன்ல சொல்லியிருப்பேன். இல்ல, வாட்ஸ்அப் மூலமா சொல்லியிருப்பேன். ஆனா இப்போ, இந்தப் பிறந்தநாள் வாழ்த்த சமூக வலைதளம் வழியா சொல்லக் காரணம், `இன்னைக்கு நான் உன்னப் பாத்து பெருமைப்படுறேன். `ஒரு சமூக நீதிக்காக நீ கொடுத்த குரல், ஒரு சராசரி மனிதனுக்கு இருக்கிற பொதுவான உணர்வு. நமக்கு ஏன் வம்பு அப்படிங்கிறது, பெரிய அளவுல வளர்ந்து நல்லா சம்பாதிச்சுட்டோம்னா நமக்கு ஏன் வம்புங்கிறது அதிகமாயிடும்.

எத்தனையோ பேர் குரல் கொடுக்குறாங்க. நானும் அப்படி குரல்கொடுக்குற சமூகப் போராளிகளுக்குப் பின்னாடி, ஓரமா நின்னு குரல்கொடுத்திருக்கேன். ஒரு பிரபல நடிகனாக, ஒரு மாஸ் ஹீரோவாக இருந்துட்டு குரல் கொடுக்குறதுங்கிறது, அதுக்குள்ள சில கஷ்டங்கள் இருக்கு; அதுக்குள்ள சில இழப்புகள் இருக்குது. சில சங்கடங்களை, எதிர்ப்புகளை சந்திக்கவேண்டியிருக்கும். அத நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

சத்யராஜ்
சத்யராஜ்

அதக்கூட நுனிப்புல் மேஞ்சி, மேலோட்டமாகச் சொல்லாம, ஆழமா இறங்கி, அலசி ஆராய்ஞ்சி, என்ன சொல்லணுமோ அந்த கருத்த நீ பதிவு செஞ்சிருக்க. அதனால, இந்தப் பிறந்தநாளுக்கு உன்னுடைய வயசுல பெரியவன்கிறதுனால, உன்ன வாழ்த்துறேன். உன்னுடைய துணிச்சலை நான் வணங்குகிறேன்” என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.