Published:Updated:

சிவாஜி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

Sivaji Ganesan - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Sivaji Ganesan - A Reporter's Diary

மற்றவர்களின் சேஷ்டைகளைக் கவனிப்பதால்தான் அவரால் விதவிதமாக நடிக்க முடிகிறது!

சிவாஜி - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

மற்றவர்களின் சேஷ்டைகளைக் கவனிப்பதால்தான் அவரால் விதவிதமாக நடிக்க முடிகிறது!

Published:Updated:
Sivaji Ganesan - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Sivaji Ganesan - A Reporter's Diary

செட்டில் எங்கிருந்தாலும் என்னை அழைத்து அன்பாகப் பேசுவார் சிவாஜி. சாதாரணமாக யாருடனாவது பேச ஆரம்பிக்கும்போது அவர்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையாக விசாரிப்பார். `மம்மி செளக்கியமா? டாடி செளக்கியமா?' என்று பரிவுடன் கேட்பார்.

மற்றவர்களின் `மேனரிஸ'ங்களை உன்னிப்பாகக் கவனித்து வைத்துக் கொள்வார். ஒருவர் சிகரெட் பிடித்தால் கூட எப்படிப் பிடிக்கிறார் என்று பார்த்துக் கொள்வார்.ஒரு முறை எந்தெந்தக் குணாதிசயங்கள் உள்ளவர்கள் எப்படி சிகரெட் பிடிப்பார்கள் என்று சுமார் பதினைந்து வகையாக சிகரெட் பிடித்துக் காட்டினார்! இப்படி மற்றவர்களின் சேஷ்டைகளைக் கவனிப்பதால்தான் அவரால் விதவிதமாக நடிக்க முடிகிறது.

ஷூட்டிங்கில் தன் பாகம் எடுத்து முடிக்கும்வரை செட்டை விட்டு வெளியே போகமாட்டார்.

Sivaji Ganesan - A Reporter's Diary
Sivaji Ganesan - A Reporter's Diary

நிருபர்களைச் சந்தித்தால் அரசியல் விஷயமாக விவாதிப்பார். ஜிம்மி கார்ட்டர், கென்னடி, ரீகன், ரஷ்ய கோஸிஜின், ஈரான் - ஈராக் சண்டை, இந்திரா காந்தி மற்ற தலைவர்கள் - யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேசுவார். தவறு இருந்து சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்வார். இவரிடம் எந்த விஷயமானாலும் பேசவோ, கேட்கவோ நான் தயங்கியதில்லை.

ஒரு சமயம் எங்கள் துணை ஆசிரியருக்கு உதவியாக இவரைப் பேட்டி காணச் சென்றேன். அப்போது நான் கற்றுக்குட்டி!இடையே நான், ``சிவாஜி சார்! மற்ற நடிகர்களுடன் கூட நடித்தால் ஷாட்டில் அவர்களை ஏன் `ஓவர் ஷேடோ' செய்கிறீர்கள்? அவர்கள் அத்தனை கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே!" என்று கேட்டுவிட்டேன்.

(அப்போது அவர் சில படங்களில் அப்படித்தான் செய்து கொண்டிருந்தார்.)என் கேள்வியை வாங்கிக் கொண்ட சிவாஜி என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். உடனே `டக்'கென்று ``யூ ஆர் கரெக்ட்! காமிரா முன்னால் நிற்பதை நான் ஒரு பாக்ஸிங் ரிங்கில் நிற்பது போலவே கருதுகிறேன். என்னோடு யார் நின்றாலும் அவர்களை நான் 'வின்' பண்ணத்தான் முயலுவேன். அது ஒரு `சாலஞ்ச்' மாதிரி" என்றார்.

இது போன்ற தர்மசங்கடக் கேள்விகளை இவரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். இவருக்குக் கோபமே வராது. செட்டில் இவரைச் சந்திக்கச் சென்றால் விறுவிறு என்று விஷயத்தைப் பேசிப் பத்திரிகையாளர்களை அனுப்பி விடுவார்.பத்திரிகை அவசரம் தெரிந்தவர்!

- பாலா

(16.11.1980 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism