Published:Updated:

`இயக்குநரின் அரசியல் கருத்துகளுக்கு நாட் ஓகே; படத்துக்கு ஓகே!' -ஸ்மிருதி இரானியின் `தப்பட்' ஆதரவு

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

`` `எங்களுக்கும் இதுபோல நடந்திருக்கிறது. ஆனால், இன்று நாங்கள் சந்தோஷமாக இல்லையா என்ன' என்று எத்தனை முதிய பெண்கள் தங்களுடைய மகளிடமும் மருமகளிடமும் கூறியிருப்பார்கள்'' என்று வருத்தப்பட்டிருக்கிறார் ஸ்மிருதி.

குடும்ப வன்முறைகளுக்கு எதிரான, குறிப்பாக மனைவியை அடிக்கும் கணவர்களின் இயல்பை `நாட் ஓகே' என்று திட்டவட்டமாகச் சொல்லும் `தப்பட்' இந்திப் படத்தின் டிரெய்லரை, அது வந்த நாள் முதலே அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் பாராட்டியிருப்பவர், மத்திய ஜவுளித்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி.

`தப்பட்' படத்தின் டிரெய்லரை தன் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த ஸ்மிருதி, ``பெண்கள்தான் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்கிற அறிவுரையை நம்மில் எத்தனை பேர் கேட்டிருப்போம். ஏழைப் பெண்களின் கணவர்கள் மட்டும்தான் மனைவியை அடிக்கிறார்கள் என்று நம்மில் எத்தனை பேர் நினைத்திருப்போம்? படித்த ஆண்கள், மனைவியை கை ஓங்கமாட்டார்கள் என்று இன்னும் எத்தனை பேர் நம்பிக்கொண்டிருக்கிறோம்?'' என்று குடும்ப வன்முறைக்கு எதிரான தன் ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். தொடர்ந்து அவர் எழுதியிருக்கிற வரிகள், குடும்ப வன்முறையில் பெண்களின் கையறு நிலையை உரக்கச் சொல்வதாக இருக்கின்றன.

`இந்த வீடியோ, என் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது!' - பெண்ணின் பதிவால் நெகிழ்ந்த டாப்ஸி

`` `எங்களுக்கும் இதுபோல நடந்திருக்கிறது. ஆனால், இன்று நாங்கள் சந்தோஷமாக இல்லையா என்ன?' என்று எத்தனை முதிய பெண்கள் தங்களுடைய மகளிடமும் மருமகளிடமும் கூறியிருப்பார்கள்'' என்று வருத்தப்பட்டிருக்கிற ஸ்மிருதி, `` `தப்பட்' படத்தின் டைரக்டர் அனுபவ் சின்ஹா, அரசின் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான கருத்துகள் கொண்டவர் என்றாலும், இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம்'' என்றிருக்கிறார்.

Tapsee Pannu - Thappad
Tapsee Pannu - Thappad
`` `ஒரு எமோஷன்ல' மனைவியை அடிப்பவர்கள், தன் மேலதிகாரியை அடிக்க முடியுமா?''- `தப்பட்' எழுப்பும் கேள்வி

படம் பற்றிய ஸ்மிருதியின் பதிவை, குடும்ப வன்முறையை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை எவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் மேடம்' என்று பலரும் பாராட்ட, `ஒரு ஃபெமினிஸ்ட் மினிஸ்டரிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?' என்கிற ஒரு சில பின்னூட்டங்களும் இருக்கின்றன.

ஸ்மிருதியின் போஸ்டை லைக் செய்துள்ள `தப்பட்' டைரக்டர் அனுபவ் சின்ஹாவும், படத்தின் நாயகி டாப்ஸி பன்னுவும் நன்றி தெரிவித்திருப்பதோடு ``தப்பட்'டை உங்களுக்குத் திரையிட்டுக் காட்ட விரும்புகிறோம்' என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஸ்மிருதியின் அரசியல் தாண்டிய பெருந்தன்மையைப் பாராட்டி சிலரும், `அவர்களைப் பாராட்ட வேண்டிய அவசியமில்லை' என சிலரும் பின்னூட்டத்தில் கடுகடுத்திருக்கிறார்கள்.

கலை, அரசியலுக்கு அப்பாற்பட்டதல்லவா?

அடுத்த கட்டுரைக்கு