Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

#Entertainment

சேனல் சைட் டிஷ்

#Entertainment

Published:Updated:
சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

ஆன் ஸ்கிரீன்ல தாத்தா.... ஆஃப் ஸ்கிரீன்ல அப்பா! - புதுப்புது அர்த்தங்கள் பார்வதி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `புதுப்புது அர்த்தங்கள்' சீரியலுக்கு மருமகளாகி இருக்கிறார் தொகுப்பாளர் பார்வதி. ஆங்கரிங்கிலிருந்து சீரியலுக்கு வந்திருப்பவரிடம் பேசினோம்.

சேனல் சைட் டிஷ்

எப்படி இருக்கு சீரியல் அனுபவம்?

சீரியல்ல என்ட்ரி கொடுப்பேன்னு நினைச்சே பார்க்கல. ஆங்கரிங் பண்ணும்போது நான், நானா இருந்தேன். ஆனா, நடிக்குறப்போ அந்த கேரக்டராகவே மாறணும். வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்துலேயும் புது பிளாட்ஃபார்மை அமைச்சுக்கொடுக்கும், அப்பதான் நமக்குள்ள நமக்கே தெரியாம இருந்த விஷயங்கள் வெளிய வர்றதைப் பார்ப்போம். அப்படியான அனு பவத்தைத்தான் இப்ப நான் ரசிச்சிட்டு இருக்கேன்.

நடிகை தேவயானியோட நடிக்குறது எப்படி இருக்கு?

தேவயானி மேடம் தன்கூட நடிக்கிறவங்க மேல ரொம்ப அக்கறை எடுத்துப்பாங்க. அவங்க நடிச்ச `கோலங்கள்' சீரியல் என் ஃபேவரைட். அதுல புரட்சி பெண்ணா நடிச்சவங்க, இப்போ இன்னசென்ட் மாமியாரா நடிக்குறாங்க.. இப்போ க்யூட்டான புரட்சி பேசுற மருமகளா நான் வந்திருக்கேன்.

உங்க தாத்தாவா நடிக்கும் லியோனி எப்படி?

‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியல் ஷூட்டுலதான் நாங்க பார்த்துகிட்டோம். ‘உங்களைத் தெரியாதா... அதான் காலைலயே டிவில வந்துடறீங்களே’ன்னு என்னோட `வணக்கம் தமிழா' ஷோவை பத்தி பேசினாரு. எங்க தாத்தா ரொம்ப ஸ்வீட். ஆன் ஸ்கிரீன்ல அவர் எனக்கு தாத்தான்னா ஆஃப் ஸ்கிரீன்ல அப்பாவா இருக்காரு. அப்படியொரு பாண்டிங் எங்களுக்குள்ளே.

மாஸ்டர் ஃபேம் அர்ஜுன்தாஸ் உங்களை புரொபோஸ் பண்ணாரே... என்ன மேட்டர்?

அவரு எனக்கு புரொ போஸ் பண்ணது செம ஷாக். ஒரு ஷோவுக்கு வந்தாரு. அவருக்கு பேஸ் வாய்ஸுங்குறதால குட்டி ஸ்டோரி சாங்கை பாடச் சொன்னோம். அதுக்கப்புறம் ‘96’ மூவி ஃபேம் கௌரிகிட்ட புரொபோஸ் பண்ணச் சொன்னோம். நானே எதிர் பார்க்கலை. மனுஷன் என்கிட்டே புரொபோஸ் பண்ணிட்டாரு. ஒண்ணுமே புரியாம நான் முழிச்சதை உலகமே பார்த்திருக்கும். அவ்ளோதாங்க... அதுக்கு மேல ஒண்ணும் நடக்கலை.

பாடி ஷேமிங்... பழகிடுச்சுனா வலிக்காதுன்னு அர்த்தமில்லை!

உருவகேலி என்ற `பாடி ஷேமிங்' அனுபவத்தை சாமானிய பெண்கள் மட்டுமல்ல, செலிபிரிட்டி பெண்களும் அடிக்கடி சந்திக்கிறார்கள். அதிலும் மீடியா பிரபலங்களுக்கு அந்த அனுபவம் இன்னும் அதிகமிருக்கும். அப்படி உருவகேலிக்குள்ளான சின்னத் திரை பிரபலங்களின் அனுபவங்களும் அட்வைஸும் இங்கே....

சேனல் சைட் டிஷ்

அக்ஷயா கிம்மி: இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’யில் பெடலெடுத்த அக்ஷயா கிம்மி, `புதுப்புது அர்த்தங்கள்' சீரியலில் செம்ம பிஸி.

‘‘நான் மீடியால சக்சஸ்ஃபுல்லா இருந்தாலும் என்னைமாதிரி ப்ளஸ் சைஸ் ஆர்ட்டிஸ்ட் எல்லாருக்கும் இதே வாய்ப்பு அமையலையேங்குற ஆதங்கம் எனக்கு உண்டு. மீடியா முதல் பர்சனல் லைஃப்வரை ப்ளஸ் சைஸ் ஆர்ட்டிஸ்ட்ஸ் எதிர்கொள்கிற விஷயங்கள் கொஞ்சநஞ்சமில்லை. குண்டா இருக்குற எல்லாரும் சாப்பிட்டு சாப்பிட்டுதான் குண்டாகுறாங்கன்னு அர்த்தம் கிடையாது. அது ஒவ்வொருத்தருடைய உடல்வாகு. நான் செம்ம ஆக்டிவ்வான ஆளு. ஹெல்த்துல அக்கறை உள்ளவள். ஹெல்த்தி கான்ஷியஸ்ன்னுதான் சொன்னேன். மத்தபடி உடம்பைக் குறைக்கிற ஐடியாவெல்லாம் எனக்கு இல்ல. கண்ணு நல்லா இல்லைன்னு ஒருத்தருக்காகவும் காது நல்லா இல்லைன்னு இன்னொருத்தருக்காகவும் மாத்திகிட்டா கடைசியில நான் நானா இருக்க முடியாதே..! தோற்றத்துக்கும் திறமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை செல்லம்...’’ - ஹேப்பியாகச் சொல்கிறார் அக்ஷயா கிம்மி.

சேனல் சைட் டிஷ்

ஆர்த்தி: யூடியூப், இன்ஸ்டா என அட்ராசிட்டி பண்ணிக்கொண்டிருக்கிறார் ஆர்த்தி.

‘‘நானெல்லாம் எல்.கே.ஜி படிக்கிறப்போவே ஓட்டப் பந்தயத்துல ஓடியிருக் கேனாம். வளர்ந்த அப்புறமா என் அம்மா சொன்னாங்க. அந்தப் பந்தயத்துல நான்தான் கடைசியா வந்தேனாம். ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கலைன்னு வீட்டுல வந்து அழுத என்கிட்ட எங்கம்மா `ஒல்லியா இருக்குறவங்க ஓடினாங்க... ஆனா, குண்டா இருக்குற நீயும் ஓடி வந்து முடிச்ச இல்ல. அவங்க கொஞ்ச நேரத்துல ஓடி முடிச்சாங்க. ஆனா, நீதானே அதிக நேரம் ஓடியிருக்கே'ன்னு சொன்னாங்க. வெளித்தோற்றத்துல எப்படி இருந்தா என்னங்குற எண்ணத்தை சின்ன வயசிலேயே பேரன்ட்ஸ் சொல்லிக்கொடுத்துட்டா என்னை மாதிரி ‘டேக் இட் ஈஸி பாலிசியோட வாழலாம்.’

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், `அதென்ன குண்டான பொண்ணுங்க சினிமாவுல காமெடியனா மட்டும்தான் இருக்க முடியுமா'ன்னும் அடிக்கடி தோணியிருக்கு. என்னைப் பொறுத்தவரை நான் செலக்ட் பண்ற படத்துல நான்தான் ஹீரோயின். ‘உத்துப் பாக்காத மாமா... வெக்கமா இருக்கு’... இந்த ஒரே டயலாக் தான்... ஹீரோயினைவிட ‘அருக்காணியா’ நான்தானே மனசுல நிக்குறேன்... அப்போ நான்தானே ஹீரோயின்? மத்தவங்கள பாடி ஷேமிங் பண்றதால திருப்தி அடையற ஜந்துக்களை நெனச்சு டோன்ட் வொர்ரி. பீ ஹேப்பி’’ என்கிறார் ஆர்த்தி.

சேனல் சைட் டிஷ்

ஸ்டாண்டு அப் காமெடியன் சசிகலா: ஸ்டாண்டு அப் காமெடியன்களில் சசிகலாவுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

‘‘அதென்னங்க மத்தவங்க என்னைக் கலாய்க்குறது..? நானே என்னைக் கலாய்ச்சிப் பேன். ‘அடடே சிலிண்டர் சாரி கட்டி வருது’ ‘யானை மேல போகுது பாரு இன்னொரு யானை’ இப்படி என்னை நானே மேடையில கலாய்ச்சிப்பேன். என்னை நானே கலாய்ச்சிக்கிட்டா மத்தவங்க சிரிக்குறாங்களே...யாரையும் வேதனைப்படுத்தாம பெர்ஃபார்ம் பண்றதுல எனக்கு சந்தோஷம் தான்.

நிறைய பேருக்கு என்னோட பேரு சசிகலாங்கிறதே தெரியாது. குண்டா... கறுப்பா... டிவிலகூட நல்லா பேசுமே... இப்படிதான் அடையாளப்படுத்துறாங்க. அதோட வலி எப்படி இருக்கும்னு அந்த இடத்துல இருந்து பார்த்தாதான் தெரியும். எத்தனையோ இடங்கள்ல உருவத்தை வெச்சி கேலி பண்ணுறப்போ ரொம்ப வேதனைப்பட்டிருக்கேன். ஆனா பழகிடுச்சு. பழகிடுச்சுனா வலிக்காதுன்னு அர்த்தம் கிடையாது. மத்தவங்க கலாய்ச்சிடுவாங்களோங்குற பயத்துல தான் நானே முந்திகிட்டு என்னைக் கலாய்ச்சுக்குறேன். நான் மட்டும் இல்லீங்க.. என்னை மாதிரி நிறைய காமெடியன்ஸ் தங்களைத் தாங்களே கலாய்ச்சுகிட்டுதான் மத்தவங்களை சிரிக்க வைக்குறாங்க. அதை எல்லாருமே பிடிச்சு செய்யறாங்கன்னு நினைக்காதீங்க. அது எங்களுக்கு ஒரு முகமூடி, அவ்வளவுதான்’’ - சிரிக்கவைப்பவர், சிந்திக்கவும் வைக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நன்றி: 
https://www.barcindia.co.in/
நன்றி: https://www.barcindia.co.in/
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism