Published:Updated:

வெற்றிக்கொடிகட்டு! - விகடன் விமர்சனம்

Vetri Kodi Kattu - Vikatanreview
பிரீமியம் ஸ்டோரி
Vetri Kodi Kattu - Vikatanreview

பார்த்திபன் - வடிவேலு காமெடி காம்பினேஷன் தனி (ஸ்)மைல்கல்! ;-)

வெற்றிக்கொடிகட்டு! - விகடன் விமர்சனம்

பார்த்திபன் - வடிவேலு காமெடி காம்பினேஷன் தனி (ஸ்)மைல்கல்! ;-)

Published:Updated:
Vetri Kodi Kattu - Vikatanreview
பிரீமியம் ஸ்டோரி
Vetri Kodi Kattu - Vikatanreview

வெளிநாடு போய்ச் சம்பாதிக்க ஆசைப்படும் கிராமத்து ஏழை இளைஞர்கள் எத்தனையோ பேர் உள்ளூர் ஏஜெண்டிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துபோகும் பரிதாப நிலையை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார் டைரக்டர் சேரன்.

கூடவே, உள்ளூரில் வியர்வை சிந்தி உழைத்தாலே வாழ்க்கையில் உயர்ந்து விட முடியும் என்பதையும் முரளி, பார்த்திபன் பாத்திரங்கள் மூலம் எடுத்துரைத்திருக்கிறார். 

Vetri Kodi Kattu - Vikatanreview
Vetri Kodi Kattu - Vikatanreview

பார்த்திபனின் குடும்பத்தில் ஏற்படும் அந்தஸ்து பிரச்னை, முரளியின் குடும்பத்தில் உருவாகும் பொருளாதார நெருக்கடி என்று எடுத்த எடுப்பில் கதைக்குள் வேகமாக நுழைந்துவிடுகிறார்!

ஏமாந்த விவரம் தெரிந்தால் தங்கள் குடும்பம் ஒடிந்துபோய் விடும் என்பதால் முரளியின் ஊருக்கு பார்த்திபனும் பார்த்திபனின் ஊருக்கு முரளியும் சென்று சமாளிக்கிறார்கள்.

அதன் பிறகே கதையில் கொஞ்சம் தொய்வு!

பார்த்திபன் பால்பண்ணை வைத்தும், முரளி ஒட்டல் ஆரம்பித்தும் வெற்றிக் கொடி கட்டுகிறார்கள்! ஒட்டுமொத்தமாக பாத்திரப் படைப்பில் 'பாரதி கண்னம்மாவின்' பார்த்திபனும் 'பொற்காலத்தின்' முரளியும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறார்கள். பார்த்திபன் - வடிவேலு காமெடி காம்பினேஷன் தனி (ஸ்)மைல்கல்! 

Vetri Kodi Kattu - Vikatanreview
Vetri Kodi Kattu - Vikatanreview

பணம் கட்ட வந்து துபாய் போகிற உற்சாகத்தில் இருக்கும்போதும் சரி, பணத்தைப் பறிகொடுத்துவிட்டு ஊர் போய் மரியாதை இழந்து, நொந்து நூலாகிக் கதறும்போதும் சரி..

நம்மைப் பதறவைக்கிறார் சார்லி. அசத்தலான குணச்சித்திர நடிப்பு! சேரனால் ஒரு கிராமத்துக் குடும்பத்தை அப்படியே கண்முன் நிறுத்த முடிகிறது.

Vetri Kodi Kattu - Vikatanreview
Vetri Kodi Kattu - Vikatanreview

குறிப்பாக, முரளியின் குடும்பம் அச்சுஅசலாக அதன் ஒவ்வோர் அசைவும் மகனை மலைபோல் நம்பும் குடும்பத்தை நினைவுபடுத்துகிறது.

அம்மாவாக மனோரமா... சொல்ல வேண்டுமா என்ன? அசத்திவிடுகிறார் ஆச்சி! பார்த்திபனின் குடும்பத்தில் அவர் மனைவி மீனாவும் தங்கை மாளவிகாவும் பிரச்னைகளை இயல்பாக அணுகியிருக்கிறார்கள்.

தேவாவின் இசையில் 'கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு' மனசில் நிற்கிறது வரிகளும் அழகு! மறுபடியும் சமூகப் பிரச்னையை அலசியிருக்கிறார் சேரன்.

தொடரட்டும் இந்தப் பணி!

 - விகடன் விமரிசனக் குழு 

(16.07.2000 தேதி வெளியிடப்பட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism