Published:Updated:

`உங்களது உண்மையான திட்டம் என்ன?!’ - அமித் ஷாவுக்கு நடிகர் சித்தார்த்தின் கேள்வி

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டம் தீவிரமாகியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதைப் பகிர்ந்து சித்தார்த் கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.

சித்தார்த்
சித்தார்த்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர் சித்தார்த்தும் தனது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். நாடு முழுவதும், இச்சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் தீவிரமாகியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதைப் பகிர்ந்து சித்தார்த் கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

குடியுரிமைச் சட்டம் குறித்துப் பேசிய அமித் ஷா, ``குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன. சிறுபான்மை சமூகத்திலிருக்கும் மக்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்கிற பேச்சுக்கே இடமில்லை. மசோதாவில், அத்தகைய நிலைப்பாடுகள் ஏதுமில்லை” என்று கூறியிருந்தார்.

இந்தச் செய்தியைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் சித்தார்த், `ஒருவரின் மதத்தை அடிப்படையாகக்கொண்டு யார் அகதி என்றும் யார் அகதி இல்லை என்றும் கூறுவீர்கள் (CAA); அதன்பிறகு, ஒருவரின் மதத்தை அடிப்படையாகக்கொண்டு யார் இந்தியன் என்றும் யார் இந்தியன் இல்லை என்றும் கூறுவீர்கள்.

நீங்கள் செய்வதை ஏன் நேர்மையாக ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். உங்களது உண்மையான திட்டத்தை எங்களிடம் கூறுங்கள்' என்று ட்வீட் செய்துள்ளார்.