Published:Updated:

"காந்தியைக் கொலை செய்தவரை ஹீரோவாக சித்தரிக்க முயன்றால்..." - கோட்சே குறித்த படத்துக்கு எதிர்ப்பு

கோட்சேவாக அமோல் கோலே

Why I killed Gandhi' என்ற படத்தை தேசிய அளவில் தடை செய்யவேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"காந்தியைக் கொலை செய்தவரை ஹீரோவாக சித்தரிக்க முயன்றால்..." - கோட்சே குறித்த படத்துக்கு எதிர்ப்பு

Why I killed Gandhi' என்ற படத்தை தேசிய அளவில் தடை செய்யவேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Updated:
கோட்சேவாக அமோல் கோலே

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. அமோல் கோலே நடித்துள்ள Why I killed Gandhi என்ற குறும்படம் வரும் 30-ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் நாதுராம் கோட்சேவாக நடித்துள்ள அமோல் கோலே இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார். ஆனாலும் அப்படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானாபட்டோலே இது தொடர்பாக அளித்த பேட்டியில், "மகாராஷ்டிராவில் அப்படம் வெளியாக தடைவிதிக்கவேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுப்போம்.

நானாபட்டோலே
நானாபட்டோலே

காந்தியைக் கொலை செய்தவரை ஹீரோவாக சித்தரிக்க முயன்றால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். காந்திஜியையும், அவரது கொள்கையும் நாட்டிற்கு தெரியும். காந்திஜி உலகம் முழுவதும் போற்றப்படுகிறார்" என்று தெரிவித்தார். இதே போன்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கமும் Why I killed Gandhi' படத்தை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் Why I killed Gandhi என்ற படத்தில் காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே புகழப்பட்டுள்ளார். மகாத்மா காந்தி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பாராட்டப்படும் தலைவராக இருக்கிறார். காந்திஜியின் கொள்கை அன்பு மற்றும் தியாகத்தின் அடையாளமாக விளங்குகிறது. படம் வெளியானால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியடையும். கோட்சே நாட்டில் உள்ள யாராலும் மதிப்பு கொடுக்க தகுதியற்றவர். எனவே அப்படத்தை தடை செய்யவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.