Published:Updated:

`அப்போ கொடுத்த வாக்குறுதியை முதல்வரானதும் நிறைவேத்திட்டார் ஸ்டாலின் சார்!’ - சிறுமியின் நெகிழ்ச்சி

டி.எம்.செல்வகணபதி
News
டி.எம்.செல்வகணபதி

``பாதை இல்லாம பள்ளிக்கூடம்கூட போக முடியாத நிலையில, இங்கிருந்து படிக்கப் போகும் என்னைப் போன்ற மாணவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தோம். இதை யார்கிட்ட சொன்னா சரியாகும்னு தெரியாம புலம்பித்தான் நான் கண்ணீரோடு அந்த வீடியோவில் பேசினேன்.’’

சேலம், மேட்டூர் பகுதி, வண்டிக்காரன் காட்டுவளவு பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் சுவாதி, 7-ம் வகுப்புப் படித்து வருகிறார். இவர், பள்ளிக்கூடத்துக்குச் செல்ல பாதை இல்லாமல் அவதியுற்று வருவதாகக் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் முன்னர் பகிரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், சுவாதியிடம் உடனடியாகத் தொலைபேசி வாயிலாகப் பேசி, பாதை அமைக்க வழிவகை செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தார்.

அதன் அடிப்படையில், தி.மு.க தலைமையிலான அரசு அமைந்த உடன், தற்போது சிறுமிக்குக் கொடுக்க வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு அளித்து, அதன் மூலம் பேரூராட்சி பொது நிதியிலிருந்து 15 லட்சம் செலவில் 800 மீட்டர் சாலை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

`அப்போ கொடுத்த வாக்குறுதியை முதல்வரானதும் நிறைவேத்திட்டார் ஸ்டாலின் சார்!’ - சிறுமியின் நெகிழ்ச்சி

அதைத் தொடர்ந்து, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் டி.எம்.செல்வகணபதி, சாலை அமைப்பதற்கான பணியைத் தொடங்கி வைத்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத் தற்போது நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவி சுவாதியிடம் பேசியபோது, ``முதல்வர் ஐயா எங்க பகுதி மக்களுக்கு பெரும் உதவி செஞ்சு கொடுத் திருக்காங்க. இதை நாங்க மறக்க மாட்டோம். பாதை இல்லாம பள்ளிக்கூடம்கூட போக முடியாத நிலையில, இங்கிருந்து படிக்கப் போகும் என்னைப் போன்ற மாணவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தோம். இதை யார்கிட்ட சொன்னா சரியாகும்னு தெரியாம புலம்பித்தான் நான் கண்ணீரோடு அந்த வீடியோவில் பேசினேன். இப்போ அந்த வீடியோ மூலம் ஒரு நல்லது நடந்திருக்கிறது சந்தோஷமா இருக்கு" என்றார் நன்றியும் நெகிழ்ச்சியுமாக.