Published:Updated:

போதையில் பெண்மீது சிறுநீர் கழித்த நபர் கைது; `விமானத்தில் நடந்தது இதுதான்!' - விவரிக்கும் டாக்டர்

சுகதா சாட்டர்ஜி
News
சுகதா சாட்டர்ஜி

`அவர் சுயநினைவில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இது குறித்து நான் விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்தபோது மிஸ்ரா என்னைப்பார்த்துச் சிரித்தார். விபரீதத்தை அவர் புரிந்துகொண்டதாக தெரியவில்லை.' - டாக்டர் சுகதா சாட்டர்ஜி

Published:Updated:

போதையில் பெண்மீது சிறுநீர் கழித்த நபர் கைது; `விமானத்தில் நடந்தது இதுதான்!' - விவரிக்கும் டாக்டர்

`அவர் சுயநினைவில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இது குறித்து நான் விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்தபோது மிஸ்ரா என்னைப்பார்த்துச் சிரித்தார். விபரீதத்தை அவர் புரிந்துகொண்டதாக தெரியவில்லை.' - டாக்டர் சுகதா சாட்டர்ஜி

சுகதா சாட்டர்ஜி
News
சுகதா சாட்டர்ஜி

அமெரிக்காவிலிருந்து புதுடெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்ற பயணி, குடிபோதையில் தனது பக்கத்து சீட்டிலிருந்த 70 வயது மூதாட்டிமீது சிறுநீர் கழித்துவிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தாலும், கடந்த 4-ம் தேதிதான் ஏர் இந்தியா நிறுவனம் இது குறித்து முறைப்படி டெல்லி போலீஸில் புகார் செய்தது. அதுவும் மூதாட்டி இந்தச் சம்பவம் குறித்து டாடா குழுமத்தின் தலைவருக்குப் புகார் செய்த பிறகே, இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது. விமானத்தில் நடந்த சம்பவத்தை அப்படியே விமானப் பணியாளர்கள் மறைத்துவிட்டனர்.

சங்கர் மிஸ்ரா
சங்கர் மிஸ்ரா

நடந்த சம்பவத்துக்காக மிஸ்ரா மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, மூதாட்டிக்கு ரூ.15,000 கொடுத்து செட்டில் செய்திருந்தார். இதற்கிடையே, டெல்லி போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்தவுடன் சங்கர் மிஸ்ரா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு இரவில் பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட மிஸ்ராவுடன் விமானத்தில் அவருக்கு அருகில் மற்றொரு இருக்கையில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சுகதா சாட்டர்ஜி பயணம் செய்தார். அவர் நடந்த சம்பவம் குறித்து அளித்தப் பேட்டியில், ``அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, `நான் ஏன் குடித்தேன் தெரியுமா, நான் ஏன் குடித்தேன் தெரியுமா..?' என்று ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்ப என்னிடம் மிஸ்ரா கேட்டுக்கொண்டே இருந்தார். இதே கேள்வியை பணிப்பெண்களிடமும் கேட்டார்.

சுகதா சாட்டர்ஜி
சுகதா சாட்டர்ஜி

அவர் சுயநினைவில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். இது குறித்து நான் விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்தபோது மிஸ்ரா என்னைப்பார்த்து சிரித்தார். விபரீதத்தை அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. அவர் அதிக நேரப் பயணம் மற்றும் சரியாகத் தூக்கம் இல்லாத காரணத்தால், இரவில் நன்றாக உறங்க வேண்டும் என்பதற்காகக் குடித்ததாகவும் தெரிவித்தார். நடந்த சம்பவம் குறித்து பணிப்பெண்களிடம் புகார் செய்தும் எதுவும் நடக்கவில்லை. சக பயணிக்குத் தார்மீக ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் சொல்கிறேன்" என்று தெரிவித்தார். அதோடு இரண்டு பக்க புகார் கடிதத்தையும் டாடாவுக்கு அனுப்பியிருக்கிறார். இந்தச் சம்பவத்தால் சங்கர் மிஸ்ராவின் வேலையும் பறிபோய்விட்டது.