Published:Updated:

கோவை: கல்யாண் ஜூவல்லர்ஸ், தி.மு.க பிரமுகர்கள்மீது நோய்த் தொற்றுப் பரவல் சட்டத்தில் வழக்கு பதிவு!

 கோவிட்-19
News
கோவிட்-19

கோவை கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் தி.மு.க பிரமுகர்கள்மீது நோய்த் தொற்றுப் பரவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:

கோவை: கல்யாண் ஜூவல்லர்ஸ், தி.மு.க பிரமுகர்கள்மீது நோய்த் தொற்றுப் பரவல் சட்டத்தில் வழக்கு பதிவு!

கோவை கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் தி.மு.க பிரமுகர்கள்மீது நோய்த் தொற்றுப் பரவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 கோவிட்-19
News
கோவிட்-19

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 406 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனாவால் நடக்கும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

கொரோனா
கொரோனா

இந்நிலையில், காந்திபுரம் 100 அடி சாலையிலுள்ள கல்யாண் ஜூவல்லர்ஸ் ஊழியர் ஒருவருக்குச் சில நாள்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கடை மூடப்பட்டது.

இதையடுத்து, அங்கு பணியாற்றிவரும் 90-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 51 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர். ``ஒரே நாளில் 51 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஒரு வாரத்துக்குள் அந்தக் கடைக்குச் சென்றவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’’ என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, அஜாக்கிரதையாகச் செயல்பட்டு, நோய் பரப்பியதற்காக கல்யாண் ஜூவல்லர்ஸ்மீது சுகாதாரத்துறையினர் சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் அடிப்படையில், கல்யாண் ஜூவல்லர்ஸ்மீது நோய்ப் பரவல் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் ரத்தினபுரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல, தி.மு.க-வில் புதிதாக நியமிக்கப்பட்ட கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள் பதிவியேற்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது, முன் அனுமதியில்லாமல் ஏராளமானோர் கூடி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததாக,

தி.மு.க பிரமுகர்கள்
தி.மு.க பிரமுகர்கள்

தி.மு.க மாவட்ட பொறுப்பாளர்கள் சி.ஆர்.ராமசந்திரன், தென்றல் செல்வராஜ், சேனாதிபதி, நா.கார்த்திக் எம்.எல்.ஏ ஆகியோர்மீது நோய்த் தொற்றுப் பரவல் சட்டத்தின்கீழ் காட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.