Published:Updated:

கோவை: `இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி; மன உளைச்சல்!’ - நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

மாணவி சுபஸ்ரீ
News
மாணவி சுபஸ்ரீ

நீட் தேர்வு பயத்தால், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 19 வயது மாணவி தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:

கோவை: `இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி; மன உளைச்சல்!’ - நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

நீட் தேர்வு பயத்தால், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 19 வயது மாணவி தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி சுபஸ்ரீ
News
மாணவி சுபஸ்ரீ

கோவை ஆர்.எஸ்.புரம், வெங்கடசாமி சாலை கிழக்குப் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சுமதி. இந்தத் தம்பதியருக்கு 19 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருந்தார். சுபஸ்ரீ கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தனியார் அகாடமி ஒன்றில் பயிற்சி எடுத்துவந்தார்.

மாணவி வீட்டில்..
மாணவி வீட்டில்..

கொரோனா வைரஸ், ஊரடங்கு காரணமாக நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, `செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும்’ என அறிக்கப்பட்டிருந்தது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, `நீட் உள்ளிட்ட தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், `நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

இந்நிலையில், நீட் தேர்வு பயத்தால் சுபஸ்ரீ மன உளைச்சலில் இருந்தார் என கூறப்படுகிறது. அவர் நேற்று மாலை அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சுபஸ்ரீயின் தாயார் சுமதி அளித்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், மாணவி தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மாணவி வீட்டில்...
மாணவி வீட்டில்...

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர்கள் சி.ஆர் ராமசந்திரன், நா.கார்த்தி எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.