Published:Updated:

`அவர்கள் செய்யும் நன்மைக்கு கைக்கொடுக்கிறோம்': கோவை விஜய் - அஜித் ரசிகர்களின் நட்பு!

விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள்
News
விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள்

கோவை அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் விஜய் ரசிகர்கள் நடத்தும் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக பங்களித்து வருகின்றனர்.

அஜித் – விஜய் ரசிகர்கள் என்றாலே சமூகவலைதளங்களில் எதிரும், புதிருமாகத்தான் இருப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் கோவை விஜய் – அஜித் ரசிகர்கள் அதை உடைத்து வருகின்றனர்.
விஜய் விலையில்லா விருந்தகம்
விஜய் விலையில்லா விருந்தகம்

விஜய் ரசிகர்கள் சார்பில், அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் `விஜய் விலையில்லா விருந்தகம்' என்ற பெயரில் ஏழை மக்களுக்கு தினசரி அன்னதானம் செய்து வருகின்றனர். அங்கு அடிக்கடி பங்களிப்பு செய்வது அஜித் ரசிகர்கள் தான்.

அஜித் பிறந்தநாள், அஜித் படம் ரிலீஸ், அஜித் குடும்பத்தில் ஏதாவது நிகழ்ச்சி என்று எதுவாக இருந்தாலும், அன்றைய தினம் விஜய் விலையில்லா விருந்தகத்தில் அன்னதானம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில்,

விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள்
விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள்

அஜித் திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளைக் கடந்திருப்பதை முன்னிட்டு அவர் ரசிகர்கள் இன்று விஜய் விலையில்லா உணவகத்தில் பங்களிப்பு செய்துள்ளனர். இதனால் கோவையில் விஜய் – அஜித் ரசிகர்கள் பயங்கர ஒற்றுமையுடன் உள்ளனர்.

இதுகுறித்து அஜித் ரசிகரான அடங்காத அஜித் குரூப் ரெட் பிரித்தன், “விஜய் ரசிகர்கள் பலர் என் நண்பர்களாக உள்ளனர். எங்களுக்கு ஏதாவது என்றால் அவர்கள் தான் நிற்பார்கள். அவர்களுக்கு ஏதாவது என்றால் நாங்கள் நிற்போம். ஒருசிலர் தான் எங்களுக்குள் மோதல் என்கின்றனர். உண்மையில் எந்த மோதலும் இல்லை. நாங்கள் இருவரும் ஒன்றுதான்.

விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள்
விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள்

நாங்கள்தான் பெரியவர்கள் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை. அஜித் சார் திரைப்பயணம் 30. ஆண்டுகளை எட்டியதால் இன்றைக்கு கொஞ்சம் ஸ்பெஷல். மாதமாதம் அங்கு நாங்கள் பங்களிக்கிறோம். அவர்கள் செய்யும் நல்லதுக்கு நாங்கள் கைக்கொடுக்கிறோம் அவ்வளவுதான்.” என்றார்.

விஜய் விலையில்லா உணவகம் கோவை மாவட்ட பொறுப்பாளர் சம்பத் கூறுகையில், “மக்களுக்கு ஏதாவது பிரயோஜனமாக செய்ய வேண்டும் என்பதால் தான் மன்றம் தொடங்கியுள்ளோம். தமிழ்நாட்டில் 12 இடங்களில் விலையில்லா விருந்தகம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்து ரசிகர்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். எந்த ரசிகரும், இன்னொரு ரசிகரிடம் மோத மாட்டோம்.

விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள்
விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள்

சமூகவலைதளங்களில் பொழுது போகாதவர்கள் சிலர் வேண்டுமானால் மோதலாம். எந்த நல்லது கெட்டதாக இருந்தாலும் நாங்கள் ஒற்றுமையுடன் கலந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் போகிற பாதையில் வேறுபாடு இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.” என்றார்.