Published:Updated:

திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்; கல்லூரி மாணவி அடித்துக் கொலை! - இளைஞரைத் தேடும் போலீஸ்

குற்றம், கொலை
News
குற்றம், கொலை

உறவினர் பெண்ணான கல்லூரி மாணவி ஒருவரை அடித்துக் கொலைசெய்த இளைஞரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Published:Updated:

திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்; கல்லூரி மாணவி அடித்துக் கொலை! - இளைஞரைத் தேடும் போலீஸ்

உறவினர் பெண்ணான கல்லூரி மாணவி ஒருவரை அடித்துக் கொலைசெய்த இளைஞரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

குற்றம், கொலை
News
குற்றம், கொலை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மகள் சினேகா. அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்துவந்தார். இவருக்கு தூரத்துச் சொந்தமான கட்டடத் தொழிலாளி கண்ணன் என்பவர் சினேகாவைக் காதலித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சினேகாவின் வீட்டுக்கு வந்தவர், அவரைத் திருமணம் செய்துவைக்குமாறு குடும்பத்தாரிடம் பேசியிருக்கிறார். இதற்கிடையே சினேகாவும், கண்ணனை விரும்பியதாகக் கூறப்படுகிறது.

சினேகாவுக்கு அக்கா ஒருவர் இருக்கும் நிலையில், அவரின் திருமணத்தை முடித்த பிறகு, இது குறித்துப் பேசிக்கொள்ளலாம் என்று கண்ணனிடம் கூறியிருக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ளாத கண்ணனோ, உடனே இருவருக்கும் பதிவுத் திருமணமாவது செய்துவைக்கும்படி கூறியிருக்கிறார். ஆனாலும், இதற்கு சினேகாவின் தாத்தா எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர் தாத்தாவை கண்ணன் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சாக்கோட்டை போலீஸார் கண்ணனை எச்சரித்து அனுப்பினர். தாத்தாவைத் தாக்கியதால் கோபமடைந்த சினேகா, கண்ணனுடன் பேசுவதையே தவிர்த்துவந்திருக்கிறார். அதன்பின்பு, இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது.

 காரைக்குடி
காரைக்குடி

இதனால் கடந்த சில தினங்களாகவே கண்ணன் விரக்தியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கண்ணன் சினேகாவிடம் கொடுத்துவைத்திருந்த தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களைக் கொண்டு வந்து தருமாறு கேட்டிருக்கிறார். உடனே, அவற்றை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் மாத்தூர் பகுதிக்குச் சென்றிருக்கிறார் சினேகா. அப்போது, மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த கண்ணன், டூ வீலரில் மறைத்துவைத்திருந்த இரும்புக்கம்பியால் சினேகாவின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.

கொலை
கொலை

அதில் படுகாயமடைந்த சினேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாக்கோட்டை போலீஸார், சினேகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவுசெய்து, கண்ணனைத் தேடிவருகின்றனர்.

திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில், இளைஞர் கல்லூரி மாணவியைப் படுகொலை செய்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.