Election bannerElection banner
Published:Updated:

இளைஞர்களை ஈர்க்கவில்லையா கம்யூனிஸ்ட் கட்சிகள்? - டி.ராஜா 'லாஜிக்'!

டி.ராஜா
டி.ராஜா

ஜே.என்.யு-வையும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தையும் குறிவைத்துத் தாக்கினார்கள். இன்னும் நிறைய இளைஞர்கள் இடதுசாரி இயக்கத்துக்கு வர வேண்டும்.

தமிழகக் குக்கிராமம் ஒன்றில் பிறந்த டி.ராஜா, பாரம்பர்யமிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்.

அரசுப் பணியைத் துறந்துவிட்டு, இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர் ஆகிவிட்ட டி.ராஜா, மாநிலங்களவை உறுப்பினராக இருமுறை செயல்பட்டவர். சென்னைக்கு வந்திருந்த ராஜாவிடம் வாழ்த்துகள் தெரிவித்து, பேசத் தொடங்கினேன்.

"உங்களுக்கு அரசியல் சிந்தனை எப்போது ஏற்பட்டது?"

"எங்கள் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் விழா நடைபெறும். அம்பேத்கர் படம் வைத்திருப்பார்கள். அதில், அவர் படித்து வாங்கிய பட்டங்களைப் போட்டிருப்பார்கள். அதுதான் என் கவனத்தை ஈர்த்தது. இவ்வளவு பெரிய படிப்புகளை எப்படி அவர் படித்திருப்பார் என்று ஆச்சர்யப்படுவேன். அந்தப் பகுதியில் காங்கிரஸுக்கு நல்ல செல்வாக்கு. காமராஜர், குடியாத்தம் தொகுதியில் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக இருந்தார். பொதுவுடைமை இயக்கமும் அந்தப் பகுதியில் இருந்தது. அப்போதுதான், தி.மு.க வளர்ந்துவந்தது. https://bit.ly/2KAlKjb

இளைஞர்கள் எழுச்சிபெறுகிறார்கள், அவர்கள் இடதுசாரிகளின் பக்கம் திரும்புகிறார்கள் என்கிற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.

திராவிட இயக்கத்தின் வீச்சு எங்கள் கிராமத்திலும் இருந்தது. என் தம்பிகளுக்குக் கருணாநிதி, கருணாகரன், கண்ணதாசன், கலையரசன் என்று பெயர் வைத்தார்கள். காங்கிரஸ் இயக்கம், திராவிடர் இயக்கம், பொதுவுடைமை இயக்கம், அம்பேத்கரிய இயக்கம் என நான்கு இயக்கங்களுக்கு மத்தியில் நான் வளர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு மார்க்ஸியக் கொள்கைகளில் ஒரு தெளிவு கிடைத்தது, ஈர்ப்பு அதிகரித்தது."

"உங்கள் இணையர் ஆனி ராஜாவுடனான சந்திப்பு குறித்தும், உங்கள் திருமணம் குறித்தும் சொல்லுங்கள்..."

"1985 முதல் 1990 வரை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பொதுச்செயலாள ராக இருந்தேன். அந்தக் காலகட்டத்தில், கேரளாவில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை பெண்கள் பேரணி நடைபெற்றது. அதில் பேசுவதற்காகச் சென்றேன். அங்குதான் ஆனியைச் சந்தித்தேன். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, பல போராட்டக் களங்களில் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். இருவரும் நேசிக்க ஆரம்பித்தோம். தமிழகத்தில் தோழர்கள் நல்லகண்ணு, ப.மாணிக்கம், கேரளாவில் தோழர் பி.கே.வாசுதேவன் நாயர் ஆகியோர் எங்கள் திருமணம் குறித்துப் பேசினார்கள். கேரளாவில் திருமணம். சென்னை பாலன் இல்லத்தில் வரவேற்பு. இருவரும் வேறு சாதி, வேறு மதம், வேறு மாநிலம், வேறு மொழி..."

இளைஞர்களை ஈர்க்கவில்லையா கம்யூனிஸ்ட் கட்சிகள்? - டி.ராஜா 'லாஜிக்'!

"இளைஞர்களை ஈர்க்கும் கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லையே?"

"அப்படியென்றால், மோடி அரசை யாராவது கேள்வி கேட்டால், அவர்களை தேசவிரோதி என்றும், நகர்ப்புற நக்சல்பாரிகள் என்றும் முத்திரை குத்துவது ஏன் நடக்கிறது? இளைஞர்கள் எழுச்சிபெறுகிறார்கள், அவர்கள் இடதுசாரிகளின் பக்கம் திரும்புகிறார்கள் என்கிற அச்சம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. அதனால்தானே ஜே.என்.யு-வையும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தையும் குறிவைத்துத் தாக்கினார்கள். இன்னும் நிறைய இளைஞர்கள் இடதுசாரி இயக்கத்துக்கு வர வேண்டும். அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய நேரத்தில், உரிய மட்டத்தில், உரிய பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும் என்கிற சிந்தனை கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது இருக்கிறது. அதனால்தான், எங்கள் கட்சியின் உயர்மட்ட அமைப்புகளுக்கு இப்போது இளைஞர்களைக் கொண்டுவந்துள்ளோம்."

> தனது குழந்தப் பருவம் தொடங்கி கம்யூனிஸ்ட் கட்சிகளின் தற்போதைய நிலை வரை விரிவாகப் பேசியிருக்கிறார் டி.ராஜா. 'தெருவிளக்கு முதல் தேசத்தின் நாடாளுமன்றம் வரை...' https://www.vikatan.com/news/politics/cpi-general-secretary-d-raja-exclusive-interview எனும் ஆனந்த விகடன் நேர்காணலில் முழுமையாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு