Published:Updated:

நீலகிரி: அரசுப் பள்ளி சத்துணவில் `மோட்டா ரக' அரிசி... சிரமத்தில் மாணவர்கள்!

`மோட்டா ரக' அரிசி
News
`மோட்டா ரக' அரிசி

நீலகிரியில் அரசுப் பள்ளிகளில் சத்துணவுக்கு `மோட்டா ரக' அரிசி விநியோகம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

நீலகிரி: அரசுப் பள்ளி சத்துணவில் `மோட்டா ரக' அரிசி... சிரமத்தில் மாணவர்கள்!

நீலகிரியில் அரசுப் பள்ளிகளில் சத்துணவுக்கு `மோட்டா ரக' அரிசி விநியோகம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`மோட்டா ரக' அரிசி
News
`மோட்டா ரக' அரிசி

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கான மதிய சத்துணவு சமைக்க வழக்கம்போல இந்தமுறையும் அரிசி விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. சத்துணவுப் பணியாளர்களும் அந்த அரிசியைச் சமைத்து மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு பரிமாறியிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான மாணவ மாணவிகள் உணவை உட்கொள்ள முடியாமல் சிரமப்பட்டதுடன், சாதத்தை வீணாகக் கீழே கொட்டியிருக்கின்றனர்.

கலவை சாதம்
கலவை சாதம்

இது குறித்து நம்மைத் தொடர்புகொண்டு பேசிய பெற்றோர், "கோத்தகிரி அருகிலுள்ள நடுநிலைப் பள்ளியில் என்னுடைய இரண்டு பிள்ளைகளும் படித்துவருகிறார்கள். கூலி வேலைக்குச் சென்றுதான் படிக்க வைக்கிறோம். நாள்தோறும் பள்ளியில் மதிய சத்துணவை எங்கள் பிள்ளைகள் உண்டுவருகிறார்கள். தற்போது வழங்கும் சாதத்தை விழுங்கவே முடிவதில்லை என வீட்டுக்குவந்து புலம்பினார்கள். பள்ளிக்குச் சென்று பார்த்தபோது மோட்டா ரக கொட்டை அரிசி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். பிஞ்சுக் குழந்தைகளுக்கு வழங்கும் சத்துணவில்கூட இப்படிச் செய்தால் எங்களைப் போன்றவர்களின் குழந்தைகள் என்ன செய்வார்கள்" என புலம்பினர்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம், ``மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிகளில் இந்தமுறை கொட்டை அரிசியைத்தான் வழங்கியிருக்கிறார்கள். எத்தனை மணி நேரம் வேகவைத்தாலும் இந்த அரிசி வேகுவதில்லை. மாணவர்கள் சாப்பிட முடியாமல் தவித்துவருகின்றனர். மீறி சாப்பிட்டால் மாணவர்களுக்குச் செரிமானம் ஆகாமல் போகுமோ என்ற பயமும் இருக்கிறது. என்னுடைய சர்வீஸில் குழந்தைகளுக்கு அரசு மூலம் இப்படி ஒரு மோசமான அரிசியை வழங்கியதில்லை" என்றார்.

மோட்டா ரக கொட்டை அரிசி
மோட்டா ரக கொட்டை அரிசி

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்தைத் தொடர்புகொண்டு பேசினோம். "பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரிசி அனைத்தும் உணவுப்பொருள் வழங்கல்துறை மூலமே விநியோகம் செய்யப்படுகிறது. எந்த குடோனில் இந்த அரிசி பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார்.