Published:Updated:

`தோல்விக்கு நாங்களும் பொறுப்பு’ - 100-க்கும் அதிகமான காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

ராகுல் காந்தி
News
ராகுல் காந்தி

காங்கிரஸின் தோல்விக்கு தாங்களும் பொறுபேற்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்கிறோம் எனப் பல மாநிலங்களில் உள்ள மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்

Published:Updated:

`தோல்விக்கு நாங்களும் பொறுப்பு’ - 100-க்கும் அதிகமான காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா

காங்கிரஸின் தோல்விக்கு தாங்களும் பொறுபேற்று தங்களின் பதவிகளை ராஜினாமா செய்கிறோம் எனப் பல மாநிலங்களில் உள்ள மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்

ராகுல் காந்தி
News
ராகுல் காந்தி

சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸுக்கு வெறும் 52 இடங்கள் மட்டுமே கிடைத்தன. கடந்த மே 25-ம் தேதி தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

காங்கிரஸ் கூட்டம்
காங்கிரஸ் கூட்டம்

ஆனால், அவரின் ராஜினாமாவை காரிய கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் தன் முடிவில் தொடர்ந்து மாறாமல் இருந்தார் ராகுல். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், ராகுல்காந்தி ராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் ராகுல்காந்தி ராஜினாமா அறிவித்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் தன் முடிவிலிருந்து மாறாமல் உள்ளதால் அவரைப்போலவே தாங்களும் ராஜினாமா செய்கிறோம் எனப் பல மாநிலங்களில் உள்ள மூத்த தலைவர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளனர்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

முதலாவதாக மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் கமல்நாத், ``மத்தியப்பிரதேசத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸின் தோல்விக்கும் நான் பொறுப்பேற்கிறேன். ராகுல்காந்தியின் முடிவுதான் சரியானது. அவரை பின்தொடர்ந்து நானும் என் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளேன்” என அறிவித்தார். ஆனால் அவரின் ராஜினாமாவை ராகுல்காந்தி ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரைத் தொடர்ந்து காங்கிரஸின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் விவேக் டன்காவும் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அது தொடர்பாக அவரின் ட்விட்டர் பக்கத்தில், ``நாம் அனைவரும் நம் பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும். அனைவரும் ராகுல் காந்திக்கு கை கொடுத்து அவர் புதிய அணியைத் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். நான் கமல்நாத்தின் கருத்தை வரவேற்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

கமல்நாத்
கமல்நாத்

இவரின் கருத்தைப் பின்பற்றி நாடு முழுவதும் உள்ள பல தலைவர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸின் செயலாளரும், ராஜஸ்தான் மாநிலப் பொறுப்பாளருமான தருண் குமார், பொதுச் செயலாளர் தீபர் பபாரியா, கோவா காங்கிரஸ் தலைவர் க்ரிஷ் சோடன்கர், தெலங்கானா மாநிலச் செயல் தலைவர் பூனம் பிரபாகர், டெல்லி செயல் தலைவர் ராஜேஷ், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஸ்ரீநிவாஸ் போன்ற பலரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். கடந்த இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 130 நிர்வாகிகள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.