Published:Updated:

'பிரதமரைக் கொல்ல சதி என்பது பி.ஜே.பி-யின் கட்டுக்கதை!'' - கனகராஜின் ஆதாரங்கள்

'பிரதமரைக் கொல்ல சதி என்பது பி.ஜே.பி-யின் கட்டுக்கதை!'' - கனகராஜின் ஆதாரங்கள்

'பிரதமரைக் கொல்ல சதி என்பது பி.ஜே.பி-யின் கட்டுக்கதை!'' - கனகராஜின் ஆதாரங்கள்

'பிரதமரைக் கொல்ல சதி என்பது பி.ஜே.பி-யின் கட்டுக்கதை!'' - கனகராஜின் ஆதாரங்கள்

'பிரதமரைக் கொல்ல சதி என்பது பி.ஜே.பி-யின் கட்டுக்கதை!'' - கனகராஜின் ஆதாரங்கள்

Published:Updated:
'பிரதமரைக் கொல்ல சதி என்பது பி.ஜே.பி-யின் கட்டுக்கதை!'' - கனகராஜின் ஆதாரங்கள்

''என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?''

''நீ மோடிக்கு எதிராகச் சிந்தித்தாயா...?''

''இல்லை! மக்களுக்கு ஆதரவாகத்தான் சிந்தித்தேன்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரெண்டும் ஒண்ணுதான்.... நட ஸ்டேசனுக்கு...''

- 'பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய நக்சல் ஆதரவாளர்கள் 5 பேர் கைது!' என்ற பரபர செய்தியை அடுத்து, இணையதளங்களில் வெளியாகும் இதுபோன்ற மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. 

மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நக்சல் ஆதரவாளர்களாகக் கருதப்படும் நபர்களின் வீடுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், மனித உரிமைகளுக்காகப் போராடும் வெர்னான் கன்சால்வாஸ், அருண் பெரைரா, கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட 5 பேரை 'நக்சல் ஆதரவாளர்கள் - பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியவர்கள்' (அர்பன் நக்சல்) என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவ்விவகாரம் குறித்துப் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான கனகராஜ், ''அரசுக்கு எதிராகப் போராடுவதும், தேசத்துக்கு எதிராகப் போராடுவதும் வேறு வேறு. ஆனால், மத்திய பி.ஜே.பி அரசோ, மக்கள் நலன் சார்ந்து அரசுக்கு எதிராகப் பேசுகிறவர்களைப் பயமுறுத்துவதற்காக இதுபோன்ற சர்வாதிகார நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 

ஒரு ஜனநாயக நாட்டில், அரசுக்கு எதிராகப் போராடுவதற்குக்கூட உரிமை இல்லையா? ஜனநாயகம் என்றால் என்ன...?
'நக்சல்கள், பிரதமரைக் கொல்ல முயற்சி செய்தார்கள்' என்றெல்லாம் சரமாரியாகக் குற்றம் சாட்டுகிறார்களே... இதற்கெல்லாம் தகுந்த ஆதாரங்கள் வைத்திருக்கிறார்களா? வெறும் துண்டு பேப்பரை வைத்துக்கொண்டு, 'பிரதமரைக் கொல்ல சதி செய்ததற்கான ஆதாரம் இதோ...' என்று காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

'என்னைக் கொல்ல பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்தார் மணிசங்கர் அய்யர்' என்று கடந்த வருடம் குஜராத் தேர்தலின்போது, பிரதமரே நேரடிக் குற்றச்சாட்டை வைத்தார். ஆனால், அதற்கான ஆதாரம் என்ன... அந்தக் குற்றச்சாட்டு இப்போது என்ன ஆனது... என்பதுபோன்ற விஷயங்களை சிந்தித்துப் பார்த்தால், பி.ஜே.பி-யின் பொய்ப் பித்தலாட்டங்கள் என்னவென்று தெரியவரும். 'ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி தேர்தல்களில் வாக்கு அறுவடை செய்துவிட வேண்டும்' என்பது மட்டும்தான் அவர்களது ஒரே லட்சியம்! 

உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கு முன்பு, கான்பூர் ரயில் விபத்தில் நிறையப் பேர் இறந்துபோனார்கள். அப்போது பேசிய பிரதமர் மோடி, 'இந்த விபத்தினை ஏற்படுத்தியவர்கள் நேபாள் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ய பி.ஜே.பி-க்கு வாக்களியுங்கள்' என்றார். பின்னர், விபத்து குறித்த விசாரணை முடிவில் ரயில்வே டி.ஜி.பி கூறும்போது, 'இது விபத்துதான். இதன் பின்னணியில் மனித செயல்கள் எதுவும் இல்லை' என்றார்.

கேரள வெள்ளப் பெருக்கின்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் உதவி செய்ததாகப் பொய்யான படங்களை இணையதளங்களில் வெளியிட்டார்கள். 'அந்தப் புகைப்படங்கள் கேரளாவில் எடுக்கப்பட்டவை அல்ல' என்பதை ஆதாரத்துடன் நிரூபித்த பிறகு புகைப்படம் பதிவேற்றம் செய்வதை விட்டுவிட்டு, 'கேரள வெள்ளப் பெருக்குக்குக் காரணம் ஐயப்பனின் கோபம்தான்' என்று மனசாட்சியே இல்லாமல் பேச ஆரம்பித்தனர்.

மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 'எங்கள் ஆட்சியில், குறைவான அமைச்சர்களோடு நிறைவான மக்கள் பணி ஆற்றுவோம்' என்றார்கள். இப்போதைய மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை என்னவென்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். 
பண மதிப்பிழப்பு விவகாரத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூட மனம் இல்லாமல்தானே, அதுகுறித்து பாராளுமன்றம் உருவாக்கிய ரிப்போர்ட்களையே முடக்கிவைத்துள்ளார்கள். 

ஒட்டுமொத்தமாக இந்த சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், பி.ஜே.பி-யினர் மக்கள் உணர்ச்சிவசப்படும் அளவுக்குக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவார்கள். மக்களின் சிந்தனையை மறக்கடிக்கும் விதத்தில் இவர்கள் கூறிவரும் பொய்கள் தேர்தல் சமயங்களில் நல்ல பலனையும் கொடுப்பதால், தொடர்ந்து இப்படிச் செய்துவருகிறார்கள். 

பண மதிப்பிழப்பு விவகாரத்தில், கடுமையான தோல்வியை சந்தித்திருக்கும் மத்திய பி.ஜே.பி அரசு, அதனை மறைக்கவும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறார்கள். அதன் ஒருபகுதியாக, 'ஆட்சிக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை சட்டத்தின் மூலமாகவும் முடக்கப் பார்க்கிறார்கள்.' அந்தவகையில்தான், 'பிரதமரைக் கொல்ல சதி' என்ற குற்றச்சாட்டின்பேரில் 5 பேரைக் கைது செய்திருக்கிறார்கள்... 'ஊபா' சட்டம் என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்'' என்கிறார் தெளிவாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism