Published:Updated:

"அர்ஜுன் சம்பத்துக்குச் சிறையில் ஸ்கெட்ச்!" - கைதானவர்களின் பின்னணி

"அர்ஜுன் சம்பத்துக்குச் சிறையில் ஸ்கெட்ச்!" - கைதானவர்களின் பின்னணி

"அர்ஜுன் சம்பத்துக்குச் சிறையில் ஸ்கெட்ச்!" - கைதானவர்களின் பின்னணி

"அர்ஜுன் சம்பத்துக்குச் சிறையில் ஸ்கெட்ச்!" - கைதானவர்களின் பின்னணி

"அர்ஜுன் சம்பத்துக்குச் சிறையில் ஸ்கெட்ச்!" - கைதானவர்களின் பின்னணி

Published:Updated:
"அர்ஜுன் சம்பத்துக்குச் சிறையில் ஸ்கெட்ச்!" - கைதானவர்களின் பின்னணி

ந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சக்தி சேனா நிறுவனர் அன்பு மாரி உள்ளிட்ட இந்து அமைப்பினர்களின் உயிருக்குக் குறிவைக்கப்பட்டதால், பதற்றத்துடன் காணப்படுகிறது கோவை.  

கடந்த 1-ம் தேதி, கோவையில் உள்ள இந்து அமைப்பினர் சிலரை கொலைசெய்யும் சதித்திட்டத்தோடு, ஆலப்புழா எக்ஸ்பிரஸில் கும்பல் ஒன்று கோவை புறப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்தக் கும்பலின் சதித்திட்டத்தை முறியடிக்க காவல் துறையின் பல்வேறு பிரிவினர் கூட்டாகக் களம் இறங்கினர். ஆலப்புழா எக்ஸ்பிரஸில் வந்த அந்தக் கும்பல் கோவையில் காலடி எடுத்துவைத்ததும் சுற்றிவளைத்தது போலீஸ். கோவை என்.ஹெச் ரோட்டைச் சேர்ந்த ஆஷிக், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில், சென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்த சம்சுதீன், சென்னையைச் சேர்ந்த சலாவூதீன் உள்ளிட்ட ஐந்துபேர் அடங்கிய அந்தக் கும்பலை போலீஸார் கைதுசெய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அனைவரின் மீதும் கடந்த 2-ம் தேதி, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் சிலரிடம் பேசினோம், ``ஆஷிக்தான் இந்த முயற்சியின் தொடக்கப் புள்ளியாக இருந்துள்ளார். ஏற்கெனவே பள்ளி மாணவிகள் பிரச்னையில் சிக்கி போக்ஸோ சட்டத்தின்கீழ் சிறைக்குப் போனவர் ஆஷிக். சிறையிலிருந்த சமயத்தில், அவருக்கு ஃபாருக் கொலை வழக்கு குற்றவாளிகளோடு அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர்கள் ஆஷிக்கிடம், மதவெறியைத்  தூண்டியதாகத் தெரிகிறது. பின்னர், `நம் மதத்துக்கு எதிராகப் பேசுபவர்களைச் சும்மாவிடக் கூடாது’ என்கிற நோக்கில், ஹீரோயிஸ மனநிலையில் சிறையிலிருந்து வெளிவந்த ஆஷிக், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இஸ்லாமிய மதவாதிகளைத் தேடி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அப்படித்தான் ஜாபர் சாதிக் அலி, இஸ்மாயில், சம்சுதீன், சலாவூதீன் உள்ளிட்டோர் அறிமுகமாகியுள்ளனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர்களில் இஸ்மாயில் `ஐ.எஸ்.ஐ.எஸ்’ அமைப்பின் தீவிர ஆதரவாளர். அவர் அந்த அமைப்பில் ரகசிய உறுப்பினராகவும் இருந்துள்ளார். மற்ற நபர்களும் `ஐ.எஸ்.ஐ.எஸ்’ அமைப்பில் பற்றுள்ளவர்களாகவே இருந்துள்ளார்கள். இந்தக் கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, `நாம், நம் மதத்துக்கு எதிராகப் பேசுபவர்களை அடக்க வேண்டும் என்ற புள்ளியில் வந்து நின்றிருக்கிறது. அப்போதுதான் ஆஷிக், கோவையில் உள்ள இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா நிறுவனர் அன்பு மாரி ஆகியோர் குறித்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். `இவர்கள் இருவரும் தொடர்ச்சியாகச் சமூக வலைதளங்களில் இஸ்லாம் மதத்தைக் கேவலமாகச் சித்திரித்து முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசிவருகிறார்கள்; அவர்களைப் போட்டுத்தள்ள வேண்டும்' என்று அவர்களிடம் ஆஷிக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. மற்றவர்களும் அதற்குச் சம்மதம் தெரிவிக்க உடனடியாக ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்கள். 

இந்தத் தகவலைத் தன் கூட்டாளிகளான கோவையைச் சேர்ந்த ஆட்டோ பைசல் மற்றும் குனியமுத்தூரைச் சேர்ந்த அன்வர் ஆகிய இருவரிடமும் சொல்லியிருக்கிறார். அவர்களும் ஓகே சொல்ல, ஆட்டோ பைசல் தன்னுடைய ஆட்டோவிலேயே போய் தீர்த்துக் கட்டிவிடலாம் என்று ஐடியாவும் கொடுத்துள்ளார். இதற்காக ஐந்து அரிவாள்களையும் ரெடி செய்திருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைக் கண்காணித்துவரும் உளவுத் துறை இந்தச் சதித்திட்டத்தை ஸ்மெல் பண்ணி, அலெர்ட் ஆகிவிட்டது. சீக்ரெட்டாக, ஸ்பெஷல் டீம் ஃபார்ம் பண்ணி அவர்கள் ஐந்து பேரையும் வளைத்துப் பிடித்துவிட்டோம். இதற்குத் துணைபோக இருந்த ஆட்டோ பைசலையும் அரெஸ்ட் செய்துவிட்டோம். அன்வரைத் தேடி வருகிறோம்'' என்றார்கள்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர் அகமது கபீரிடம் பேசினோம், "குண்டுவெடிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் முகமது ஆஜம் என்பவரது திருமணம் கடந்த 28 ம் தேதி, கோவையில் நடந்தது இவர்கள் அனைவருமே அந்த நிகழ்வுக்காகச் வந்தவர்கள்தாம். திருமணத்துக்குச் சென்றவர்களை கொலை செய்ய வந்ததாகச் சொல்லி கைது செய்திருக்கிறது போலீஸ். இதில் ஆஷிக் மீது மட்டும்தான் இதற்குமுன்பு வழக்கு உள்ளது. மற்றவர்கள் மீது எந்த வழக்குகளும் கிடையாது. ஆனால், அனைவரின் மீதும் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். எதன் அடிப்படையில் இப்படியான வழக்குகளைப் பாய்ச்சுகிறார்கள் என்றே தெரியவில்லை. இது முற்றுலும் தவறான போக்கு.

இந்து பண்டிகைகள் நெருங்கும்போதெல்லாம் கோவையில் பதற்றம் ஏற்படாமலிருக்க இப்படித் தவறான வழக்குகளை சித்திரிப்பதை போலீஸ் வழக்கமாகக் கொண்டுள்ளது. கொலை செய்ய வந்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

போலீஸ் சொல்வதைப் பார்த்தாலே தெரியும் அது அப்பட்டமான கதைதான் என்று. அப்படியே கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது என்று பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருக்கலாம். ஏன் சம்பந்தமே இல்லாமல் தேசத்துரோக வழக்கு பதிவு செய்து முஸ்லிம்களை ஒட்டுமொத்த தேசத்துக்கும் எதிரானவர்களாக போலீஸ் காட்டுகிறது என்பது புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் இவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்ஸோடு தொடர்புப்படுத்தி வழக்குகளைப் போடுவதன் மூலம் அவர்களை வில்லனாகவும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை ஹீரோவாகவும் சித்திரிக்கிறது போலீஸ். மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து பதற்றமான சூழலை ஏன் உருவாக்குகிறார்கள் என்று புரியவில்லை" என்றார் ஆதங்கத்தோடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism