Published:Updated:

``சதி செய்து வீழ்த்துற அளவுக்கெல்லாம் ஜெயக்குமார் ஒர்த் கிடையாது!" சி.ஆர் சரஸ்வதி

``சதி செய்து வீழ்த்துற அளவுக்கெல்லாம் ஜெயக்குமார் ஒர்த் கிடையாது!" சி.ஆர் சரஸ்வதி
``சதி செய்து வீழ்த்துற அளவுக்கெல்லாம் ஜெயக்குமார் ஒர்த் கிடையாது!" சி.ஆர் சரஸ்வதி

இறுதியாக ஜெயக்குமார் வந்தார். ``எல்லா எனக்குத்தான் காத்திருக்கீங்கன்னு தெரியும். நான்தான் வந்து பேசுறேன்னு சொன்னனே" என்றவர் நேரடியாக ஒலிப்பெருக்கிகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்தார். ``ம்ம் கேளுங்க என்ன கேக்கப் போறீங்கனுதான் தெரியுமே" என்றதும் அங்கே மெல்லிய சிரிப்பலை.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவது போன்ற ஆடியோ உரையாடல் நேற்று வெளியாகி, சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. `அ.தி.மு.க-வின் முகமாக ஊடகங்களில் தொடர்ந்து பேசிவரும் அமைச்சர் ஜெயக்குமார், இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார்?' என ஒட்டுமொத்த ஊடக நிருபர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். செல்பேசியில் தொடர்ந்து அவருக்கு அழைப்புகள் வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் `முத்தலாக்' சட்ட மசோதாவை எதிர்த்து ராமநாதபுரம் தொகுதி எம்.பி. அன்வர் ராஜா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய புத்தகத்தின் வெளியீட்டு விழா அ.தி.மு.க சார்பில் சென்னைக் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் டி.ஜெயக்குமார் நிருபர்களைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

உடனடியாக, பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல கலைவாணர் அரங்கில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் நிருபர்கள் முகாமிட்டார்கள். நானும் அங்கே சென்றேன். 4 மணி முதல் கலைவாணர் அரங்கம் உள்ளே வரும் ஒவ்வொரு காரையும் வேகமாக அணுகினோம். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி என ஒவ்வொரு முறையும் காரின் அருகே சென்று நிருபர்கள் ஏமாந்ததுதான் பாக்கி. இறுதியாக, ஜெயக்குமார் வந்தார். ``எல்லாரும் எனக்குத்தான் காத்திருக்கீங்கன்னு தெரியும். நான்தான் வந்து பேசுறேன்னு சொன்னனே" என்றவர், நேரடியாக ஊடக மைக்குகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்தார். ``ம்..கேளுங்க, என்ன கேக்கப் போறீங்கனுதான் தெரியுமே" என்று அவர் குறிப்பிட்டதும் அங்கே மெல்லிய சிரிப்பலை எழுந்தது. பெண்ணுடன் அவர் பேசிய ஆடியோ விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார் ஜெயக்குமார். ``நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண்ணுடன் இருப்பது போல, மார்பிங் செய்து, அந்தப் படத்தை ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் பரப்பினார்கள். அதைப் பற்றி சைபர் கிரைமில் புகாரளித்து மூன்று பேரைக் கைது செய்தார்கள். அதுல தோத்துப் போனவங்க, தொடர்ந்து என்னை இலக்காக்கினாங்க. அதன் தொடர்ச்சிதான் இந்த ஆடியோ" என்றார். ``இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள்" எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``சசிகலா குடும்பமும், தினகரனைச் சேர்ந்தவர்களின் சதியும்தான் இதுபோன்ற ஆடியோ வெளியாவதற்குக் காரணம்" என நேரடியாகக் கூறினார் ஜெயக்குமார். அந்தக் குரல் தன்னுடையது அல்ல என்று அவர் மறுத்தார். எழும்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போதும், ``மாஃபியா கும்பல் மார்பிங் வேலை செய்கிறது" என்றார். அவரின் மறுப்புகளுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக, ``சிறு நரிகளுக்கு அஞ்சுகிறவன் நானல்ல; நாங்கள் சிங்கங்கள்" என்றார். இதுகுறித்து, ``டி.டி.வி. தினகரன் தரப்பு என்ன  கூறுகிறது?" என்பதைத் தெரிந்துகொள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதியிடம் பேசினேன்.

``அமைச்சர் ஜெயக்குமாருக்கு சதி செய்து அவரை வீழ்த்துற அளவுக்கெல்லாம் அவர் `ஒர்த்' கிடையாது. எங்களுக்கு வேற வேலை இல்லையா... அவர் யார் வீட்டுக்குப் போறாரு, என்ன பண்றார்னுதான் நாங்க பார்த்துகிட்டு இருக்கோமா. அவர் பேசின ஒரு ஆடியோ பதிவு எங்க ஊடகத்துக்கு வந்தது. அதை மக்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்த்தோம். சின்னம்மாவையும், எங்க கட்சியின் துணைப் பொதுச் செயலாளரையும் மாஃபியான்னு சொல்வதற்கு ஜெயக்குமாருக்கு எந்தத் தகுதியும் இல்லை. கூவத்தூர்ல சின்னம்மா கால்ல விழுந்து பதவியைத் தக்க வெச்சுகிட்டாரே, அப்போ அவங்க மாஃபியா கும்பல்னு இவருக்குத் தெரியலையா? தந்திரமா கால்ல விழுந்து, அப்புறம் காலைவாரி விட்ட நரி இவர்தான்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் நல்ல மாதிரி விட்டுட்டுப் போன ஆட்சியை, இவங்க சீரழிச்சு வெச்சிருக்காங்க. இந்திய அளவுல லஞ்சம், ஊழலில் தமிழகம் மூன்றாவது இடத்துல இருக்கு. அதையெல்லாம் சரிபண்ணத் தெரியாம செஞ்ச தப்புக்கு எப்படி வந்து முட்டுக்கொடுக்கிறாங்க பாருங்க. சரி, ஜெயக்குமார் தப்பே செய்யலைன்னா... அவரை நிரூபிக்கச் சொல்லுங்க. டி.என்.ஏ டெஸ்டுக்குத் தயார்னு சொல்லச் சொல்லுங்க." என்றார்.

அடுத்த கட்டுரைக்கு