இன்னும் தொடங்கப் படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இன்ஸ்டிட்யூட்டுக்கு மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. அதேபோல ‘கோவையில் 3,000 கோடி ரூபாய் மதிப்பில், உலகத்தரப் பல்கலைக் கழகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கானல் நீராக்கியுள்ளது’ என்ற கூக்குரலும் இப்போது எழுந்திருக்கிறது.

கோவையில் பாரதியார் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்றவை போல மத்தியப் பல்கலைக்கழகமோ அல்லது உலகத்தரப் பல்கலைக்கழகமோ அமைக்கப்பட வேண்டும் என்பது, கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு, ‘கோவையில் 3,000 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தது. அந்த அறிவிப்பு அப்படியே இருக்க, தனியார் கல்வி நிறுவனங்கள் பயன்பெறக் கூடிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, மத்திய பி.ஜே.பி அரசு. அதாவது, மூன்று அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும், மூன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் உலகத்தரப் பல்கலைக்கழகமாக மாறும் அளவுக்கு நிதியுதவி செய்வதே இந்த அறிவிப்பு. இவற்றில் அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஐந்து ஆண்டுகளுக்கு 1,000 கோடி ரூபாய் தரும். இதில் ஜியோ இன்ஸ்டிட்யூட் இன்னும் தொடங்கப்படவே இல்லை. இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் ஜியோ இன்ஸ்டிட்யூட்டுக்கு இணையதளம்கூட இல்லை. அந்த நிறுவனம் வருவதற்கு, இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் என்று கூறப்படுகிறது

கோவையில் உலகத்தரப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள்களாகப் போராடிவரும் ம.தி.மு.க மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன், ‘‘2008-ம் ஆண்டு அப்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், ‘நாடு முழுவதும் எட்டு ஐ.ஐ.டி., ஏழு ஐ.ஐ.எம்., 14 உலகத்தரப் பல்கலைக்கழகங்கள், 16 மத்தியப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார். சுதந்திரத் துக்குப் பிறகு, கல்வித்துறையில் வெளியிடப்பட்ட மிகப் பெரிய அறிவிப்பு இதுதான். அதன்படி, கோவையில் 500 ஏக்கர் பரப்பளவில், 3,000 கோடி ரூபாய் மதிப்பில், உலகத்தரப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்தனர். இதன் காரணமாக, கோவைக்கு வர இருந்த ஐ.ஐ.எம் திருச்சிக்கு மாற்றப்பட்டது.

உலகத்தரப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடைமுறை மிகவும் பெரியது. அர்ஜுன் சிங்குக்குப் பிறகு, அமைச்சரான கபில்சிபில் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலுமே, உலகத்தரப் பல்கலைக்கழகங்களைத் தவிர, காங்கிரஸ் அறிவித்ததில் மற்ற 31 கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் காங்கிரஸ் அறிவித்த திட்டத்தைப் புறக்கணித்து, கோவையின் கல்வி வளர்ச்சியைப் புதைகுழியில் தள்ளியிருக்கிறது, இந்த அரசு.

இப்போது, நாடு முழுவதும் ஏற்கெனவே உள்ள 10 அரசு மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்களைச் சிறந்த கல்வி நிறுவனங்களாக மேம்படுத்துவதாக அறிவித்துள்ளனர். முதல்கட்ட அறிவிப்பில், டெல்லி ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, பெங்களூரு ஐ.ஐ.எஸ்.இ ஆகிய அரசு நிறுவனங்களும், பிட்ஸ் பிலானி, மணிபால் அகாடமி மற்றும் ஜியோ இன்ஸ்டிட்யூட் ஆகிய தனியார் கல்வி நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதில் இன்னமும் தொடங்கப்படாத... திட்ட அளவில் உள்ள ஜியோ நிறுவனத்தைத் தேர்ந் தெடுத்ததுதான் ஆச்சர்யமாக உள்ளது. சென்னை ஐ.ஐ.டி., இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான தரவரிசையில் முதல் இடத்தையும், ஒட்டுமொத்த சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி இடம்பெறவில்லை.

உலக அளவிலான தரவரிசையில், முதல் 100 இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம்கூட இல்லை. சின்ன நாடுகள்கூட அந்தப் பட்டியலில் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கி, அவற்றை மேம்படுத்துவதில் என்ன பிரச்னை? எனவே, அர்ஜுன் சிங் அறிவித்தது போலவே, கோவை உள்பட நாடு முழுவதும், உலகத்தரப் பல்கலைக் கழகங் கள் அமைக்க வேண்டும்” என்றார் உறுதியாக.

இதுதொடர்பாக, தமிழக பி.ஜே.பி-யின் பொதுச் செய லாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். “2008-க்குப் பிறகு, ஐந்து ஆண்டுகள் மீண்டும் காங்கிரஸ்தான் ஆட்சி செய்தது. அப்போது, கோவை யில் உலகத்தரப் பல்கலைக் கழகம் அமைய அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? தற்போது, பி.ஜே.பி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்கெனவே இருக்கும் பல்கலைக்கழகங்களை, உலகத்தரத்தில் மேம்படுத்துவதாகக் கூறியுள்ளனர். இதை அரசாங்கமோ, அமைச்சரோ மட்டும் முடிவு செய்துவிட முடியாது. இதற்காக, நியமிக்கப்பட்ட நிபுணர் குழுதான் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்யும். காங்கிரஸ் ஆட்சியில் வெளியான அந்த அறிவிப்புக்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படி ஓர் அறிவிப்பை காங்கிரஸ் செய்திருந்து, அந்தத் திட்டம் நிலுவையில் இருந்தால், அதை நிறைவேற்றுவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரைச் சந்தித்து நாங்கள் கோரிக்கை வைப்போம்” என்றார்.

- இரா.குருபிரசாத், படங்கள்: தி.விஜய்