Published:Updated:

அரசு செலவில் குடும்பத்தினருடன் விமானத்தில் பயணித்த சி.பி.எம் நிர்வாகிகள்! - கேரளாவில் சர்ச்சை

அரசு செலவில் குடும்பத்தினருடன் விமானத்தில் பயணித்த சி.பி.எம் நிர்வாகிகள்! - கேரளாவில் சர்ச்சை
அரசு செலவில் குடும்பத்தினருடன் விமானத்தில் பயணித்த சி.பி.எம் நிர்வாகிகள்! - கேரளாவில் சர்ச்சை

ண்ணூர் விமான நிலைய திறப்புவிழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் சி.பி.எம் நிர்வாகிகளின் குடும்பத்தினர், திருவனந்தபுரத்துக்கு அரசு செலவில் விமானத்தில் பயணித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில், புதிய சர்வதேச விமான நிலைய திறப்புவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ்பிரபு மற்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கொடியசைத்து விமானப் போக்குவரத்தைத் தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கேரள அமைச்சர்கள், சி.பி.எம் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பங்கேற்றனர். விமான நிலைய திறப்புவிழா நிகழ்ச்சி முடிந்தபிறகு, முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள், சி.பி.எம் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன்

மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், அவர்களின் குடும்பத்தினர் என 63 பேர் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு விமானத்தில் பயணித்துள்ளனர். விமானத்தில் பயணித்த அனைவருக்கும் அரசு செலவில் விமான டிக்கெட் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ‘ஒடாபெக் கோ ஏர்’ விமானத்தில் டிக்கெட்.  இதற்காக, இரண்டு லட்சத்து இருபத்தெட்டாயிரம் ரூபாய் அரசு கஜானாவில் இருந்து சென்றுள்ளது. இதுதான் தற்போது கேரளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.