Published:Updated:

உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி

உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி
பிரீமியம் ஸ்டோரி
உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி

உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி

உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி

உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி

Published:Updated:
உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி
பிரீமியம் ஸ்டோரி
உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி

மிழக தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத அளவுக்கு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஆளும் கட்சிகளுக்குக் கைப்பாவையாகச் செயல்படுவது தொடங்கி மே 19-ம் தேதி 13 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டதுவரை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன எதிர்க் கட்சிகள். இவ்வளவு சர்ச்சைகளுக்கு இடையிலும் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் ஐம்பது வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டுவந்து குவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். எரியும் நெருப்பில் ஊற்றிய எண்ணெய்யாக இந்த விவகாரம் எதிர்க் கட்சிகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

தேர்தல் ஆணையம் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மே 7-ம் தேதி, தேனி வட்டாட்சியர் அலுவலகத் துக்கு ஐம்பது வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப் பட்டன. இதுகுறித்த தகவல் தேனி மாவட்டத்தின் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கட்சி நிர்வாகிகள் வருவதற்குள் மாலை 6 மணி யளவில் பி.ஜே.பி நிர்வாகிகள் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அறைக்குள் வைத்துப் பூட்டி சீல் வைத்தது, மாவட்ட நிர்வாகம். இதையடுத்து, ‘வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந் திரங்களை மாற்றச் சதி நடக்கிறது’ என்று தி.மு.க, காங்கிரஸ், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சி களின் நிர்வாகிகள் சர்ச்சையைக் கிளப்பினர். தொடர்ந்து எதிர்க் கட்சியினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். உடனடியாக அங்கு வந்த ஆட்சியர் பல்லவி பல்தேவ், கட்சி நிர்வாகிகளைச் சமாதானப்
படுத்தினார்.

உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி

“பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட் பட்ட வடுகபட்டியில் ஒரு வாக்குச்சாவடியிலும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரத்தில் ஒரு வாக்குச்சாவடி யிலும் சரியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அதனால், அந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் மறுதேர்தல் நடத்தப்படலாம். அதனால்தான் இயந்திரங்கள் வந்துள்ளன” என்று விளக்கம் அளித்தார் ஆட்சியர். ஆனால், இதைக் கட்சி நிர்வாகிகள் ஏற்கவில்லை.

“மறு வாக்குப்பதிவு வேண்டும் என்று நாங்கள் கேட்கவே இல்லை. அதனால், தேவை இல்லாமல் வாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியம் என்ன?” என்று எதிர்க் கட்சியினர் ஒருமித்த குரலில் கேள்வி எழுப்பினர். கிட்டத் தட்ட நள்ளிரவு ஒரு மணிவரை வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், சீல் வைக்கப்பட்ட அறையைத் திறந்து, உள்ளிருந்த வாக்குப் பெட்டி இயந்திரங்களை அனைத்து நிர்வாகி களையும் பார்வையிடச் செய்தார் ஆட்சியர். அதன் பிறகு ஓரளவு சமா தானமான கட்சி நிர்வாகிகள், அந்த அறைக்கு முறை வைத்து தொடர் காவல் இருப்பது என முடிவு செய்தனர்.

தொடர்ந்து, ‘இரண்டு வாக்குச் சாவடிகளுக்கும் தேர்தல் வேண்டாம். அந்த இயந்திரங்களைத் தேனியிலிருந்து அப்புறப்படுத்துங்கள்’ என்று கோரிக்கை வைத்து, ஆட்சியரிடம் மனு அளித்தார், தேனி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இந்த நிலையில், ‘தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும்’ என்று அறிவித்தது தேர்தல் ஆணையம். அந்த 13 வாக்குச்சாவடிகளில் தேனி மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரம், வடுகப் பட்டி வாக்குச்சாவடிகளும் அடக்கம். இவற்றில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான காரணம் குறித்து, தேர்தல் பணியிலிருந்த அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி

“வாக்குப்பதிவுக்கு முன்னதாக அனைத்துக் கட்சி முகவர்களும் மாதிரி வாக்கு செலுத்தி இயந்திரத்தைச் சோதிப்பது வழக்கம். சோதனைப் பதிவு முடிந்ததும், அந்த வாக்குப்பதிவுகளை அழித்துவிட்டு, பொதுமக்களை வாக்குப்பதிவு செய்ய அனுமதிப்பார்கள். அதேபோல விவிபேட் இயந்திரத்தில் உள்ள வாக்கு செலுத்தப்பட்ட சீட்டுகளை எடுத்துத் தனியாக ஒரு கவரில் போட்டு சீல் வைக்க வேண்டும். பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட மாதிரி வாக்குகளை அழித்த தேர்தல் பணியாளர்கள், விவிபேட் இயந்திரத்தில் சீட்டுகளை எடுக்காமல் மக்களை வாக்களிக்க அனுமதித்துவிட்டனர். இதையறிந்த சில முகவர்கள் பிரச்னை செய்ய… ‘வாக்கு எண்ணும் போது விவிபேட்டில் உள்ள சீட்டுகள் பரிசீலனை செய்யப்படாது. கன்ட்ரோல் மெஷினில் உள்ள வாக்குகள் மட்டுமே கணக்கிடப்படும். இதனால், பிரச்னை இருக்காது’ என்று விளக்கம் அளித்தார், ஆட்சியர். அதனால், முகவர்கள் சமாதானம் அடைந்தனர்.

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட் பட்ட வடுகப்பட்டி வாக்குச்சாவடியில் பூத் எண் 197-லிலும் இதே போலப் பிரச்னை நடந்துள்ளது. முகவர்கள் வாக்களித்த பிறகு 67 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்த நிலையில், முகவர்களின் வாக்குகளை அழிக்க முயற்சி செய்துள்ளனர், தேர்தல் அலுவலர்கள். அதில் மொத்த வாக்குகளும் அழிந்துவிட்டன. அதனால், அந்த 67 வாக்காளர் களை மீண்டும் வரவழைத்து வாக்குப்பதிவு செய்யச் சொல்லி இருக்கிறார்கள். இதனால், ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் தற்போது மறு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது” என்றனர்.

உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி

“குழப்பங்கள் இருந்தது உண்மைதான் என்றா லும் தொடர்ந்து இரண்டு வாக்குச்சாவடிகளிலும் சுமுகமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. எந்தக் கட்சியினரும் இது தொடர்பாகப் புகார் அளிக்க வில்லை. அப்படி இருக்கும்போது, மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியம் என்ன? வாக்கு எண்ணும்போது யாருக்கும் தெரியாமல் இயந்திரங்களை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்துதான் இந்த வாக்கு எந்திரங்களைக் கொண்டு வந்துள்ளனர். அவர்களின் சதித்திட்டம் அம்பலமாகிவிட்டதால், தேவை இல்லாமல் மறு வாக்குப்பதிவு நடத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார்கள், எதிர்க் கட்சிக்காரர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “தேனிக்கு ஓட்டுப்பெட்டி வந்த பிறகு, அது தொடர்பாக பிரச்னை எழுப்பினோம். அதன் பின்புதான் மறுவாக்குப்பதிவு என்கிற முடிவை எடுக்கிறார்கள். தேனியில், அ.தி.மு.க-வை தவிர வேட்பாளர்கள் அத்தனை பேரும், ‘மறு தேர்தல் வேண்டாம்’ என்று எழுதி கொடுத் திருக்கிறோம். மோடியை ஓ.பி.எஸ் சந்தித்ததால் தான் இந்தத் தேர்தல் வந்தது என்று சந்தேகம் எழுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி, ரிசர்வ் வங்கி கவர்னர் என தன்னுடைய எடுபிடிகளை நியமித் துக்கொண்ட மோடி, தேர்தல் ஆணையத்திலும் எடுபிடிகளை நியமித்துக்கொண்டுள்ளார். என்னை வெளியூர்க்காரர் என்று சொன்னார்கள். உள்ளூர் திருடர்களைப் பிடிக்க வெளியூர் போலீஸ்காரர்கள்தான் சரியாக இருப்பார்கள். நான் வெளியூர் போலீஸ்காரர். தோற்றுவிடுவோம் என்று தெரிந்ததும், வீட்டுக்குள் அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை வலுத்தது. மகனால் டி.வி பெட்டி உடைக்கப்பட்டது. இதெல்லாம் இந்த போலீஸ்காரருக்குத் தெரியும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், டி.வி பெட்டி உடைந்ததால், தேனிக்கு வாக்குப்பெட்டி வந்தது” என்றார்.

உடைந்தது டி.வி பெட்டி வந்தது வாக்குப்பெட்டி! - ஈ.வி.கே.எஸ் அதிரடி

பிரச்னையே இல்லை; மறு வாக்குப்பதிவு வேண்டாம் என்று ஒட்டுமொத்த எதிர்க் கட்சியினரும் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். அங்கே வலுக்கட்டாயமாக தேர்தலை நடத்துகிறது தேர்தல் ஆணையம். இன்னொரு பக்கம் பொன் பரப்பியில் வாக்குப்பதிவின்போதே கலவரம் நடக்கிறது. பலரும் ஓட்டு போட வரவில்லை. அங்கு மறு வாக்குப்பதிவு வேண்டும் என்று கேட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஆனால், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வில்லை. ஏன் இந்த முரண்பாடு. தவிர, தேனி விவகாரத்தில் அ.தி.மு.க-வினரும் அ.ம.மு.க -வினரும் தொடர்ந்து அமைதி காத்துவருகிறார்கள். அதேநேரத்தில், இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் இன்னமும் காவல் காத்து வருகிறார்கள்.

- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

பதறிய ஈரோடு ஆட்சியர்

‘ஈ
ரோட்டுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கியுள்ளன’ என்ற தகவல் வர பதறிப்போனார் மாவட்ட ஆட்சியர் கதிரவன். மறுநாள் காலையிலேயே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆர்.டி.டி கல்லூரிக்கு அனைத்துக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களையும் அழைத்துச் சென்று, வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து விளக்கமளித்த ஆட்சியர், ‘‘காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடியில் ஒருசில தவறுகள் நடந்திருக்கின்றன. எனவே, அந்த ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பினோம். அறிவிப்பு வராவிட்டாலும், முன்னெச்சரிக்கையாக 20 வி.வி.பேட் இயந்திரங்களை வாங்கி வைத்திருக்கிறோம்” என்றார்.

- நவீன்