Published:Updated:

"பாரதியின் முண்டாசு காவி நிறம்... சர்ச்சையை ஏற்படுத்தும் பன்னிரண்டாம் வகுப்பு புத்தகம்!"

"பாரதியின் முண்டாசு காவி நிறம்... சர்ச்சையை ஏற்படுத்தும் பன்னிரண்டாம் வகுப்பு புத்தகம்!"
"பாரதியின் முண்டாசு காவி நிறம்... சர்ச்சையை ஏற்படுத்தும் பன்னிரண்டாம் வகுப்பு புத்தகம்!"

12-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் அட்டையில் பாரதியாரின் ஓவியம் உள்ளது. இந்தப் படத்தில் பாரதியின் முண்டாசு வெள்ளை நிறத்துக்குப் பதிலாக காவி நிறத்தில் இருக்கிறது. இதனால், தமிழக அரசு மறைமுகமாகக் காவியைப் பரப்புவதற்கு முயற்சி செய்கின்றதா என்கிற சந்தேகத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சர்ச்சை தொடர்பாகச் சிலரிடம் பேசினோம்.

"பாரதியின் முண்டாசு காவி நிறம்... சர்ச்சையை ஏற்படுத்தும் பன்னிரண்டாம் வகுப்பு புத்தகம்!"

சுகிர்தராணி, ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் :

``காவி நிறம் என்பது தேசிய கொடியில் இருக்கக்கூடிய ஒரு நிறம்... அது வளத்தைக் குறிக்கிற நிறமாகத்தான் இதுவரைக்கும் நாம் பார்க்கிறோம். ஆனா, பி.ஜே.பி கட்சி காவி நிறத்தைத் தன்னுடைய கொடியின் நிறமாக வைத்துள்ளது. ஜனநாயக ரீதியாகத் தேசிய கொடியில் இருக்கக்கூடிய நிறம் என ஏற்றுக் கொண்டாலும்கூட, அரசியலில் இருக்கிற ஒரு கட்சி அதனுடைய நிறத்தை முன்னெடுப்பது என்பது சரியானதல்லன்னு எனக்குத் தோன்றுகிறது. பள்ளிக்கல்வி துறையைப் பொறுத்தவரையில் அரசியலின் குறுக்கீடோ, ஆட்சியாளர்களின் குறுக்கீடோ, அதிகாரிகளின் குறுக்கீடோ இருக்கக் கூடாது என்பது என் கருத்து. பொருளாதார ரீதியாக, மத ரீதியாக, சாதி ரீதியாக எழக்கூடிய பிரச்னைகள்தான் மிக முக்கியமான பிரச்னை. இந்தப் பிரச்னைகளை உடைத்தெறியும் பலம் கல்விக்குத்தான் இருக்கு. ஆட்சியாளர்கள் எந்த மத, மொழி, சாதியைச் சேர்ந்தவங்களாக இருந்தாலும் சரி அவற்றையெல்லாம் தவிர்த்து இயங்கணும். ஆனா, யாரும் அப்படியில்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சிக்கு ஆதரவான பாடத்திட்டங்களை மாணவர்கள்கிட்ட கொண்டு வரணும்... அது மூலமா பொதுமக்கள் வசம் சேர்க்கணும்னு நினைக்கிறாங்க.

"பாரதியின் முண்டாசு காவி நிறம்... சர்ச்சையை ஏற்படுத்தும் பன்னிரண்டாம் வகுப்பு புத்தகம்!"

12-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்த்த உடனே காவி நிறம் மட்டும்தான் நமக்கு தெரியும். அதன் பிறகு உற்றுக் கவனித்தால், அதற்குள் இருக்கின்ற கோட்டோவியங்கள் தெரிகிறது.  ஒரு கருத்தியலை, ஒரு கோட்பாட்டை ஏற்கெனவே மக்கள் அறிந்திருக்கிற நிறத்தின் வழியாக மீண்டும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கணும்னு நினைக்கிறதை மோசமான வன்முறையாகத்தான் பார்க்கிறேன். வெள்ளை நிறத்தில் முண்டாசு கட்டின பாரதியாரையே இது வரையில் தெரிந்து வைத்திருக்கிறேன். காவி நிறத்தில் உள்ள பாரதியைப் பார்க்க எனக்கு ஆச்சர்யமாகவும் அதியசமாகவும் இருக்கு. அதையும் தாண்டி ரொம்பவே வேதனையாகவும் இருக்கு. தேசியக் கவிஞர்னு சொல்லக்கூடிய அவரையே கொஞ்ச, கொஞ்சமாக ஒரு இந்துத்துவவாதி என நிலை நிறுத்துகிற ஒரு முயற்சிதான் இது! பெண் விடுதலைக்காகவும் பெண் அடிமைத்தனத்தை எதிர்த்தும் நிறைய பாடல்கள் எழுதியிருக்காரு. நாம அப்படித்தான் பாரதியைப் பார்த்துவருகிறோம். நமக்குப் பின் வருகிற தலைமுறையினர், நாம முன்னோடியாகப் பார்க்கிற பாரதியை ஒரு இந்துத்துவவாதின்னு நினைக்கிறதுக்காகத்தான் காவி நிறத்தை மையமா வைச்சிருக்காங்களோன்னு சந்தேகம் வருது. தமிழக அரசின் சின்னம் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் கோயிலின் கோட்டோவியத்தையும் ஆரஞ்சு நிறத்தில்தான் குறிப்பிட்டிருக்காங்க. நாட்டுப்புற கலைஞர் ஒருத்தருடைய படம் இடம்பெற்றிருக்கு. அதில், அவர் அணிந்திருக்கும் ஆடையின் நிறம் ஆரஞ்சு. அந்தப் புத்தகத்தில் முழுக்க, முழுக்க இடம் பெற்றிருக்கக்கூடிய காவி நிறம் என்பது வளத்தைக் குறிப்பதாக இல்லை. பி.ஜே.பி கட்சியின் நிறமாக மாணவர்களிடையே அறிமுகப்படுத்தி அவர்கள் மூலமாகப் பெற்றோர்களை அணுகுவதற்கான வழியாகவே இருக்கு. இது மிகப்பெரிய பேராபத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.'' 

பரமேஸ்வரி, தலைமை ஆசிரியர் :

"பாரதியின் முண்டாசு காவி நிறம்... சர்ச்சையை ஏற்படுத்தும் பன்னிரண்டாம் வகுப்பு புத்தகம்!"

``நான் பாடநூல் திட்டக்குழுவில் இருந்திருக்கேன். எனக்குத் தெரிந்த அளவில் இதில் யாருடைய தலையீடும் கிடையாது. நாங்க ரொம்பவே சுதந்திரமாகத்தான் வேலை பார்த்தோம். படங்களைப் பொறுத்தவரைக்கும் பள்ளி ஓவியர்கள்தான் வரைஞ்சாங்க. இந்தக் காவி நிறம் என்பது தற்செயலானதாக இருக்கலாம். அதற்குள்ளாக அரசியல் இருக்காது என்று நான் நம்புறேன். அப்படி ஒருவேளை அரசியல் தலையீடு இருந்தால் நாம் வருத்தப்பட வேண்டிய, கண்டிக்கக்கூடிய விஷயம். ஆனால். நான் அதுக்குள்ளே வேலை பார்த்ததனால் இதில் யாருடைய தலையீடும் இருக்காது என்பதைச் சொல்றேன். ஓவியரின் விருப்பமாக, இந்த வண்ணத்தைக் கொடுத்திருக்கலாம்னு நினைக்கிறேன். அரசியலாக இதைப் பார்க்க வேண்டாம் என்பது என் கருத்து. அரசுப்பள்ளி ஆசிரியர்களும் ஓவியக்கல்லூரி மாணவர்களும்தான் இந்த ஓவியங்களை வரைஞ்சிருக்காங்க. அவங்க இந்த அரசியலை உணராமல் அல்லது அதைக் கவனத்தில் கொள்ளாமல் இந்த வண்ணத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம்னு நான் நினைக்கிறேன். இது மிகத் தற்செயலாக நடந்திருக்கக்கூடிய விஷயம்'' என்றார்.

Vikatan